1. பிள்ளை
சரியாகப் படிக்கவில்லை என்றால் எப்படியெல்லாம் நாம் எண்ணுகின்றோம்?
பிள்ளை படித்து, நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணுவார்கள். அவன்
படிக்கவில்லை என்றால்,
“இப்படிப் பண்ணுகிறானே,
இப்படிப் பண்ணுகிறானே” என்று
ஜெபம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.
வீட்டுக்காரர் வந்தவுடன், பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்த்து, கெடுத்துவிட்டீர்களே
என்று அவர்களையும் திட்டுவதற்கு ஆரம்பித்துவிடுவார்கள்.
அவர்கள் போனபின் தியானம்.
என்ன தியானம்?
அவன் இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான், இவன் அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான், படிக்க
மாட்டேன் என்கிறான், வீட்டுக்காரரும் கேட்க மாட்டேன் என்கிறார் என்று மனதிலே எண்ணி தியானம். இப்படித்தான்
நாம் தியானம் செய்கிறோம்.
அந்த நேரத்தில், அவரது பேரப்பிள்ளை யாராவது வந்தால், “தொலைந்து போ”
என்று அவனையும் சாபமிட ஆரம்பித்துவிடும். இந்த
ஜெபம் என்ன செய்யும்?
சாபம் வந்தவுடன் கோபம்
வந்துவிடும். மனித வாழ்க்கையில் இன்று குடும்பத்தில் ஒரு பிரச்னை
என்று வரும் பொழுது தவறு செய்த பையனை, கடினமான
நிலைகளில் பேசிவிடுகிறோம்.
ஏனென்றால், அவன் செய்த தவறின்
உணர்வுகள் நமக்குள் பட்டவுடன் நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்.
2. நாம்
வெளிப்படுத்தும் கோபமான ஆத்திரமான உணர்ச்சிகளால் என்ன ஆகின்றது?
அதே கோபத்தால்
ஆத்திரத்தால் நாம் சாபமிடும் நிலைகளுக்குச் சென்று சாபமிட்டுவிடுவோம். ஆனால், கெட்டது உடனடியாக வேலை செய்யும். இதைத்
தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் குழந்தைமேல் மிகுந்த பாசமாக இருப்போம்.
நம்மையறியாமலே இந்த உணர்வைப்
பாய்ச்சியவுடன்,
இது துரித நிலைகளில் வேலை செய்து
நம் எண்ணமே அவர்களுக்கு இடைஞ்சலாகும்.
இடைஞ்சலாகும் பொழுது அங்கே சங்கடமாகின்றது.
ஆக அவர்கள் சங்கடப்படும் போது,
அதை எண்ணி மீண்டும் வேதனைப்படுவோம். இதைப்போன்று,
நம்மை அறியாமலேயே பின்னிப்
பிணைத்து நம்மைத் துன்பப்படுத்திக்
கொண்டிருக்கின்றது.
இரவு நேரத்தில், கை கால் குடைச்சல், மேல்வலி,
உடல்வலி என்று எல்லாமே சகிக்க முடியாது. ஏனென்றால், அவனின் செயலையும், அதனால் வேதனையையும்
எடுத்தவுடன் கை, கால் குடைச்சல் நிச்சயம் வரும்.
ஆக, இதை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
3.
மிஷின் கண் (MACHINE GUN) போன்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்
இந்த நிலையை மாற்றுவதற்குத்தான்,
தக்க ஆயுதத்தை, “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று “ஆத்மசுத்தி”
என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.
முதலில் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை புருவ மத்தியில் எண்ணுங்கள். அடுத்து கண்ணின் நினைவலைகளை விண்ணிலே துருவ நட்சத்திரத்தின்பால் கூர்மையாகச் செலுத்துங்கள்.
அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள்
பேரொளியை நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள், ஜீவ அணுக்கள் பெறவேண்டும்” என்று எண்ணி,
நமது
உடலில் எழும்
வேதனையின் உணர்வுகளை
முதலில்
அடக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உடல்
முழுவதும் படர வேண்டும்” என்ற உணர்வை நமக்குள்
வலிமையாக்கினால் என்ன ஆகின்றது?
மகனால்
வேதனைப்பட்ட உணர்வுகள், இங்கே நமக்கு முன்னாடி நமது ஆன்மாவில் இருக்கின்றது.
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்
நமக்குள் வலிமையானபின்,
வேதனையால் வந்த
தீமையின் உணர்வுகளை,
நமது ஆன்மாவிலிருந்து ஒதுக்கி விட்டுவிடும்.
4. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பிள்ளைக்குப் பாய்ச்சுங்கள்
இப்படிச் சுத்தப்படுத்திக் கொண்டபின், தன் மகன் “துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி பெறவேண்டும், அவன்
உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அடுத்து, அவன் கல்வியில் ஞானம் பெறவேண்டும், அருள் ஞானிகளின் அருள்சக்தி பெறவேண்டும், அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி இதனின் உணர்வுகளை அவனுக்குள் பாய்ச்ச
வேண்டும்.
அவன் அருள்ஞானிகளைப் போன்று சிந்திக்கும் தன்மை
பெற வேண்டும்” என்று
இதனின் உணர்வுகளைச் சமைத்துவிட்டு,
பின் இதன் நிலை கொண்டு
நல் அறிவுரையை அவனுக்குச் சொல்ல வேண்டும்.
இதனால், மகன்
சோர்விலிருந்து விடுபட்டு, சிந்தித்துச் செயல்படும்
தன்மை பெறுகின்றான். கல்வியில் சிறந்த ஞானம் பெறுகின்றான். குடும்பத்தில்
ஒற்றுமையும், பண்பும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
குழந்தைகளை
இப்படி நாம் பக்குவப்படுத்தி
வளர்க்க வேண்டும். எமது அருளாசிகள்.