1. பிறருடைய உணர்வுகளைப் பிரித்துக் காட்டும்
சும்மா இருக்கும் பொழுது, ஒருவரை நாம் பார்த்துக்
கொண்டிருந்தோம் என்றால், அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு, திடீரென்று நினைவு ஓட்டம்
ஓடும்,
ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன், அங்கு இருக்கும்
பொருள் தெரிய வரும். நாம் குரு காட்டியவழியில் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்கின்றோம்.
அப்படிச் சீராகக் கடைப்பிடிக்கும் பொழுது, ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது,
அந்த உண்மைகளை நாம் உணரமுடியும்.
தொழிலில் இருப்போம். இந்த உணர்வுகள் அங்கே பிரித்துக்
காட்டும். பிறருடைய
கஷ்டமான உணர்வுகளைப்
பிரித்துக்
காட்டும்.
அருள் உணர்வை எடுத்து, அதை நீக்கி,
அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டி விட்டோம் என்றால்,
வாழ்க்கையில் தீமைகள் வராதபடி
அவ்வப்பொழுது ஆத்மசுத்தி செய்து நீக்கிவிடலாம்.
இதை நீக்காமல் இருந்துவிட்டு, இந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டால்,
அதுவும் இதுவும் கலந்திருக்கும். இந்த ஆன்மாவில் உள்ளதை
நாம் சுவாசித்தவுடன் உயிரில் கலக்கும்.
இரவில் புலனடங்கித் தூங்கும் போது, இதெல்லாம் நமது வாழ்க்கையில், காட்சிப் பொருளாகவும், கெட்ட
கனவுகளாகவும் வரும். இதைப் புரிந்துகொண்டோம் என்றால நன்றாக
இருக்கும்
நம்முடைய உணர்வு ஓட்டத்திற்கு
ஒப்ப, ஒரு வெளிச்சத்தைப் போட்டு அதிலே எந்தக் கலர்
சுற்றுகின்றோமோ அதுதான் தெரியும். அதுபோல அறிவின்
ஞானத்தை ஊட்டி, இந்த உணர்வின் தன்மை வரப்படும்போது அந்த உணர்வுதான் நமக்குத் தெரியும்.
அப்பொழுது பிறருடைய குறைகளை உணர
முடியும். “இப்படி நடக்கின்றது, அவருக்கு
இடையூறு வருகின்றது” என்று தெரியும்.
பிறர் தவறு செய்திருப்பார்கள். அவருடைய இன்னலான நிலைகள் தெரிய வந்திருக்கும். “எனக்குக் காட்சி கிடைத்தது. அவரைப் பார்த்தேன்.
இந்த மாதிரி கஷ்டமாக வந்துவிட்டது.
எனக்கு முதலிலேயே தெரிந்தது” என்று சொல்லுவோம்.
ஏனென்றால், அவருடைய தவறின் உணர்வுகளை அறியமுடிகின்றது. இதைத்தான் நாம் நுகர்ந்து
சொல்கின்றோம். அப்பொழுது, அந்த மாதிரி நேரங்களில்
காட்சிகளைக் கொடுத்தவுடனே, இதை எப்படிச்
செய்ய வேண்டும்?
2. “அருள்
வழியில்” ஆத்மசுத்தி செய்யவேண்டும்
அருள்வழியில், பற்றுடன்
ஆத்மசுத்தி செய்துவிட்டோம் என்றால், ஒருவரது நிலைகளைச் சொன்னாலும், அவர் நஞ்சு
கொண்ட வேதனையான உணர்வுகள் நம்
ஆன்மாவில் கலக்காது.
ஆனால், இரவில் நம் வாழ்க்கையில் ஆத்மசுத்தி செய்யாமலோ, செய்திருந்தாலும், அந்த ஆத்மசுத்தியில் குறை இருந்தாலோ என்ன ஆகும்?
ஒரு பாத்திரத்தில் அழுக்கு சிறிது
ஒட்டியிருந்தால், அது சீக்கிரம் போய்விடுகின்றது.
அதோடு ஒன்றிய நிலைகள் இருக்கும்
போது,
இரண்டு தரம் தேய்த்துக் கழுவினாலும் போகாது.
இதே மாதிரி, நம் ஆத்மசுத்தியிலும் ஏற்படும். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
“நான் ஆத்மசுத்தி செய்கிறேன்,
இப்படித் தெரிகிறதே”, என்று
ஏங்கக்கூடாது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் போகும் மார்க்கங்கள், மனிதனின் முழுமை அடையும் நிலைகள். நம்முள் விளையும் உணர்வுகள், பிறருடைய இருளைப் போக்கும் தகுதி
பெற்றவர்கள் நாம். அதனால் அந்தத் தகுதியை நமக்குள்
வளர்த்துக் கொள்வது நல்லது.
மற்றவர்களுடைய தவறைக் கண்ணால் பார்க்கின்றோம். நமக்குள் பதிவு செய்து விடுகின்றோம். நாம் ஆத்மசுத்தி என்ற வலு சேர்த்திருந்தாலும்,
அந்த நிமிடம்தான், அந்த வலு.
அதிலே துடைப்பு அதிகம் இருக்காது.
தூங்கப்போகும் போது, இது வந்துவிடும். அந்த
வெறுப்பின் உணர்வுகள் இங்கு வரப்படும் பொழுது, தூக்கம்
வராது.
என்னதான் ஆத்மசுத்தி செய்தாலும்
தூக்கம் வரவில்லை என்போம். ஏனென்றால், அந்த
உணர்வின் இயக்கங்களே நமக்குள் இருக்கும். அப்பொழுது,
நாம் ஆத்மசுத்தி செய்த பின்பும்,
கடினமான நிலைகள் விலகவில்லை என்று பொருள்.
இதை நாம் தெரிந்து கொள்ள
வேண்டும்.
3. ஆத்ம சுத்தியில்
நம் நினைவை வரிசைப்படுத்தி எங்கே இணைக்கவேண்டும்?
அதற்கு
நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்,
நம் நினைவை,
துருவ மகரிஷியுடன் இணைக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்துடன் இணைக்க வேண்டும்.
சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.
இதைக் கூட்டிக் கொண்டே
இருந்தோமென்றால், அந்த உணர்வுகள் நமக்குள் வர வர, இது ஒடுங்கும். இந்த ஆன்மாவைச் அது
சுத்தப்படுத்தும்.
அதே சமயத்தில், நம் உடலில் நாம் கேட்டறிந்த தீமையான அணுக்களுக்கு, சாப்பாடு போய்ச் சேராது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்,
நம் வாழ்க்கையில் தொடர்ந்து அதிலே
இருக்க வேண்டும்.
நம் வாழ்க்கையே தியானமாக்க
வேண்டும்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் எடுத்து,
நம் உடலென்ற சட்டியில் “சமைக்க வேண்டும்”.
4. “மகரிஷிகளின்
அருள் மணங்களை” நுகர வேண்டும்
நாம் எந்தெந்தக் காய்களை குழம்பில் போட்டுச் சமைக்கின்றோமோ, அந்த வாசனைதான் வரும். நாம் உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் காரமோ, உப்பின் தன்மையோ
கூடிவிட்டால், அந்தக் குழம்பின்
சுவை கெட்டுவிடும்.
இந்த குழம்பைப் போன்றுதான் நம்
வாழ்க்கையின் நிலைகளில் எதைச் செயல்படுத்துகின்றோமோ,
அந்த மணம் நமக்குள் சுவை கொண்ட சொல்லாகவும், செயலாகவும் வரும். அந்த சுவை கொண்ட
உணர்ச்சிகளைத் தூண்டும்.
குழம்பில் சிறிது வித்தியாசமாகிப் போய்விட்டது
என்றால், உள்ளுக்குள் இழுக்காது. ஆனால், அது எவ்வளவு சத்தான நிலைகளில் இருந்தாலும் சுவை கெட்டுவிட்டால்
உள்ளே ஏற்றுக் கொள்ளாது மறுக்கின்றது.
சாப்பாட்டில் அதிலே
போட்டிருக்கின்ற மணம்தான் முலாம். வித்தியாசமான அந்த மணத்தின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படும் பொழுது, உள்ளுக்குள் இழுக்காது. வெளியில் தள்ளி விடுகின்றது.
ஆனால் பசி எடுக்கும்.
இந்த மணத்தை நுகரும் உணர்ச்சிகள்
நம்மை இயக்கினால்தான், இது
உள்ளே போகும்.
ஆகையால், நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், அந்த “மகரிஷிகளின் அருள் மணங்களை”, வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நுகர்ந்து பழக வேண்டும்.
6. தீமையான
அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடுப்பதே ஆத்ம சுத்தியின் மூலக்கூறு
தூக்கத்தில் இருந்தாலும்,
சும்மா படுத்திருந்தாலும்,
நாம் அமைதியாக இருக்கும் பொழுதும்,
நம் ஆன்மாவில் உள்ளபடி,
நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
அந்த மாதிரி நேரங்களில் அந்த உணர்வை
தீமையான
அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
ஆத்ம சுத்தி
செய்து,
அதை அகற்றும்படி நாம் செய்ய வேண்டும்.
இதுதான்
ஆத்ம சுத்தியில் உள்ள “மூலக்கூறு”.