கணவனும், மனைவியும் ஆத்மசுத்தி செய்து
கொண்டு, மகரிஷிகளின் அருள்சக்தி அவர் உடல் முழுவதும் படர்ந்து,
உடலை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்த சக்தி பெறவேண்டும் என்று கணவன், மனைவியை
நினைக்க வேண்டும். மனைவி, கணவனை
நினைக்க வேண்டும்.
இந்த உணர்வின்
நிலைகள் கொண்டு
இருவருமே ஒரு நிலை கொண்டு
சரியானபடி இதைப் போன்று
தியானித்தால்,
இதில் நீங்கள்
சொர்க்க பூமியைப் பார்க்கலாம்.
ஒரு
குடும்பத்திற்குள், கணவன்
மனைவி இரண்டு பேருமே
மகிழ்ச்சியாக இருந்தால்தான், அது ஒரு சொர்க்கலோகம்.
ஆனால், கணவன் மனைவிக்குள் ஒவ்வொரு நிமிடமும்
வேற்றுமை உணர்வு வந்தால், நரகலோகம்தான். ஆக நாம் நரகலோகத்தை, இந்த உடலுக்குள் நாம்
சிருஷ்டிக்கின்றோம். அடுத்தது நாம் அந்த நிலைக்குப்
போகின்றோம்?
ஆனால், அருள் ஞானம் பெறக்கூடிய இந்த பாக்கியமான உணர்வை நீங்கள் பெற்றபின் குடும்பத்தில் ஒவ்வொருவரும்
ஒற்றுமையான
நிலைகளில் இருப்பதற்கு,
யாம் கொடுக்கும் வாக்கின்
நிலைகளைப் பயன்படுத்தி,
மகரிஷிகளின் அருள் ஒளிகளை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள்
தவறு செய்யவில்லை என்றாலும், முந்தைய சாப நிலைகளிலிருந்து அவர்களுடைய உணர்வின் அணுக்கள், நமக்குள் உண்டு. எண்ணங்களை, நல்ல
குணங்களைச் சிதறடிக்கும் அந்த உணர்விலிருந்து உங்களை நீங்கள் மீட்டு, ஒவ்வொருவரும் இந்த மகிழ்ச்சியின் தன்மை பெறவேண்டும் என்று யாம் எல்லா மகரிஷிகளையும் வேண்டி அந்த அருள் ஒளியைக் கேட்கின்றோம்.
யாம்
அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று,
இந்த உணர்வின் தன்மை எம் உடலுக்குள் சேர்த்ததனாலே, எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
இந்த
மகிழ்ச்சியான உணர்வுகள், இந்த
உடலுக்குள் செலுத்தப்படும்போது, நீங்கள் பெற வேண்டுமென்ற
இந்த ஆசையினாலே, உங்களுக்குள் இந்த உணர்வின் தன்மையைப்
பதியச் செய்கின்றோம்.
இதன்படி
நீங்கள் செய்தீர்களென்றால், நீங்கள்
அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று, உங்களுக்குள் இந்த
சொர்க்க பூமியை மகிழ்ச்சியான எண்ணங்களைப் பார்க்கலாம்.
உங்கள் மூச்சும், பேச்சும் கணவரிடத்திலே மகிழ்ச்சியை ஊட்டும். கணவருடைய
உணர்வும், உங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.
ஆக
இரண்டு சரீரமும் ஒன்று சேர்ந்து,
இந்த
உணர்விலே சொர்க்கத்தைக் காண்பீர்களென்றால்,
இந்த
உடலை விட்டுச் சென்றபின்
உங்கள் இரு உயிராத்மாக்களும் விண் செல்லும்.
ஆக, இன்று துருவ நட்சத்திரம்
சிவசக்தியின் ஸ்வரூபம் கொண்டுதான், துருவமாக
இருக்கின்றார்கள். அதைப்போன்று என்றும் 16 என்ற நிலையை, நீங்கள் எல்லோரும் பெறலாம்.