ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2014

குழந்தைகள் ஆரோக்கியமாகவும் ஞானமாகவும் பிறக்க "தாய் என்ன செய்யவேண்டும்?"

1. கருவுற்ற தாய் - ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் எண்ணுவதுதான் குழந்தைக்குப் பூர்வபுண்ணியம்
ஆடு மாடுகளுக்கு அந்தந்தக் காலங்களில் இரை போடுகின்றோம். 3 மணிக்கு இரை போட்டுப் பழக்கினால், மணி 3 என்று தெரிந்து கொள்ளும். அந்த உணர்வுப்படி அது சத்தம் போட ஆரம்பித்துவிடும். யார் இரை போட்டாரோ அவர்களை எண்ணி உணர்வை வெளிப்படுத்துகின்றது.

ரை போடும் பொழுது, சொல்வதையெல்லாம் ஆழமாகப் பதிவு செய்து கொள்கின்றது. அவர்களை அணுகி வருகின்றது.

ஆனால், ஒருவர் இதை மிரட்டி இருந்தார்களென்றால், அவர்கள் வரும் பொழுதே இது மிரளுகின்றது. இந்த உணர்வுகள் அவர்களை இயக்குகின்றது.

அதே சமயத்தில் யார் மேல் பாசமாக இருக்கின்றதோ, அந்த உடலுக்குள் பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது. நமக்குள் வந்து மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது

ஆடு மாடுகளுக்கு, எப்படி நாம் சொல்லும் போது உணர்வின் தன்மை பதிவாகின்றதோ, அதைப் போன்று, ஒரு கர்ப்பமாக இருக்கும் தாய் "ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்" எதை உற்றுப் பார்க்கின்றதோ அது கருவில் பதிவாகிவிடும்
2. தாய் சுவாசித்த உணர்வுகள் குழந்தையை எப்படியெல்லாம் பாதிப்படையச் செய்கின்றது
அதாவது பாசத்தால், அன்பால், பிறர்படும் கஷ்டங்களை, வேதனைகளை நோய்வாய்ப்பட்டவர்களுடைய உணர்வுகளை சண்டை போடுகின்றவர்களுடைய வெறுப்பான உணர்வுகளை
தாய் கண்ணால் பார்க்கப்படும் பொழுது, 
கருவின் உயிரணு தாய் எதை உற்றுப் பார்த்ததோ,
அதனின் ரூபமாக அது கவரத் தொடங்கிவிடும்.

அது அதனுடன் இணைந்துவிட்டால் அதில் ஒருவருக்குப் புற்று நோய் இருந்ததென்றால் அவருக்கு 40 வயது இருந்தது என்றால், அதிலே விளைந்த இந்த செல் கருவிலே இருக்கும் குழந்தைக்கு அதே 40 வது வயதில், புற்று நோய் வரும்.

ஆஸ்துமா நோயை உள்ளவரைத் தாய் பார்த்திருந்தால், அந்த உணர்வின் தன்மை கருவிலே பதிவாகி, 40 வயது வரையிலும் ஆஸ்துமா இருக்காது. 40 வயதுக்கு மேல் ஆஸ்துமா வரும்.

அதே மாதிரி, குடும்பத்தில் என்னென்ன சண்டை போட்டார்களோ அதைக் கேட்டிருந்தால் இந்தக் குழந்தையின் கருவிலே பதிந்து, அதனுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதனுடைய வளர்ச்சியில் அதே சண்டை போடும் உணர்வுகள் வரும்.

ஒரு கண்ணில்லாத குழந்தையை அதனுடைய உணர்வுகளை நுகர்ந்து குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தால், அதே உணர்வுகள் குழந்தையின் உடலிலே கருவிலே இருக்கும் போது, விளையாடப்படும்போது அதன் வளர்ச்சியைத் தடைப்படுத்தி, கண்ணுக்குண்டான சத்தைத் தடைப்படுத்தும். மனிதனின் வளர்ச்சியில் இப்படியெல்லாம் பல உண்டு.

முடமாக இருப்பவனை அதிகமாக நேசித்தாரென்றால், அதே உணர்வுகள் கருவிலே சேர்ந்தபின் அதே உணர்வின் தன்மையின் அணுக்கள் விளையத் தொடங்கி, அந்தக் கருவிலே வளரும்போதே விளைந்து அந்தக் காலம் வரும்போது, உணர்ச்சியைத் தூண்டும்.

நாம் செடி கொடிகளுக்கு உரமிடும்போது அதனுடன் இணைந்து எவ்வாறு விளைகின்றதோ, இதைப் போலத்தான், கருவிலே வளரும் குழந்தைகளுக்கு வருகின்றது.
3. உயர்ந்த குணங்களை தாய் கேட்க நேர்ந்தால் குழந்தை ஞானியாகப் பிறக்கின்றது
குடும்பத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்றால், அந்தக் குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் அதிகமாக இருக்கும். இருந்தாலும், கர்ப்பத்தில் இருக்கப்படும் பொழுது, யாராவது ஒருவர் உயர்ந்த குணங்கள் கொண்டவர், எதையாவது பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கடைவீதிகளிலோ, மற்றவைகளிலோ, வேடிக்கை பார்க்கச் செல்கின்றது.

அந்த உயர்ந்த சொல்களைச் சொல்லும் பொழுது, கர்ப்பமாக இருப்பவர்கள் கேட்டார்களென்றால் அந்தக் குழந்தை கருவிலே விளைந்தபின், வீட்டிலே மிகவும் தரித்திரமாக இருப்பார்கள். ஆனால், இது ஞானக் குழந்தையாக வளரும்.

சில குடும்பங்களில் மிகவும் ஏழையாக இருப்பார்கள். ஆனால், அந்த சந்தர்ப்பம் பூர்வ புண்ணியமாக அமைந்து, அந்தக் குழந்தை ஞானியாக உருவாகும்.

இதே மாதிரி நமது வாழ்க்கையில் இன்றைக்கு
எவ்வளவு திறமை உள்ளவராக இருந்தாலும்,
தாய் கருவிலே இருந்தபோது வந்த
பூர்வ புண்ணியமும் இணைந்தே வருகின்றது.

ஆகவே, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் ஞானமாகவும் இருக்க வேண்டுமென்றால் எந்த அசம்பாவிதங்களையும் கருவுற்ற தாய் பார்க்கக் கூடாது.

அதாவது, இன்றைய சினிமா, டி.வி. மற்றும் பத்திரிக்கைகளில் வரும் அதிர்ச்சியான செய்திகளையும், உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகளையும், முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக, தீமைகளிலிருந்து விடுபட்ட உயர்ந்த குணங்கள் கொண்ட ஞானிகளைப் பற்றியும், நல்ல தெய்வீகக் கருத்துக்களையும் தாய் எண்ணிப் பதிவாக்கினால் அந்தக் கருவில் இருக்கும் குழந்தை எத்தகைய தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடும். 

அந்தக் குழந்தையை எதுவும் அதைப் பாதிக்காது.

அவன் பிறந்தபின் தன்னையும் அறிவான், 
இந்த உலகத்தையும் அறிவான். 
நம் குடும்பத்தையும் காப்பான்,  
இந்த ஊரையும் உலகையும் காப்பான். 
அவனால் நாம் எல்லோருமே நலமடைய முடியும். 

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, மிகவும் அவசியம்.