கணவன்
மனைவி இருவரும்,
ஒருவருக்கொருவர் நமது குருநாதர் காட்டிய அருள்வழியில் ஆத்ம சுத்தி செய்து கொண்டு இதைப் பழகிக் கொள்ள
வேண்டும்.
இப்பொழுது, சரீரங்கள்
இரண்டாக இருந்தாலும்,
பெண்களுக்குண்டான அமில சக்திகள் அதிகம். ஆக,
இருவருமே அடிக்கடி அந்த எண்ணங்கள் கொண்டு இருந்தால் அந்த ஆற்றல்மிக்க சக்திகளைப்
பெற முடிகின்றது.
ஆக, இந்த
உடலை விட்டு இவர்களது உயிராத்மாக்கள் சென்றாலும,
ஒரே சரீரமாக அங்கே இயங்கி, அதாவது, ரிஷி
சக்தியின் தன்மையில் ஒரு கோளாக,
ஒரு நட்சத்திரமாக இயங்கி, பேரண்டத்தையும் தனக்குள் சிருஷ்டிக்க முடியும்.
இன்று
ஒரு பிரபஞ்சத்தை சூரியன் எப்படி ஆட்டிப்படைக்கின்றதோ, அதைப்
போல,
கணவன் மனைவியினுடைய இரு உயிராத்மாக்களும்
ஒரே உயிராத்மாவாக ஆகும் பொழுதுதான்,
அந்த ரிஷியின் சிருஷ்டிக்கும் தன்மை பெறுகின்றது.
அதுதான் “சப்தரிஷி மண்டலம்” என்பது.
ஆக, பேரண்டத்தின்
பேருண்மையினுடைய நிலைகளை இப்பொழுது எப்படி நட்சத்திரங்களிலிருந்து
பல அலைகள் தெரிகின்றதோ,
இதைப் போன்று வெளிப்படும் உணர்வலைகள் மண்டலங்களாகச் சுழன்று கொண்டு,
புறத்திலிருந்து வரக்கூடிய பல உணர்வின் ஆற்றல்களை அது மாய்த்து,
அதற்குள் நின்று,
தனக்குள் பாதுகாப்பான நிலைகளை அது செயல்படுத்தும் அந்த சப்தரிஷி மண்டலம்.
மனிதர்களாக
இருக்கக்கூடியவர்கள் கோபமான
உணர்வைச் செலுத்திவிட்டால், இந்த உணர்வலைகள் நம் ஆத்மாவின் முன் நின்று,
அந்த குணத்தின் தன்மையைக் காக்க அந்த உணர்வைச் சுவாசித்து,
அந்த உணர்வு கொண்டே நாம் செயல்படுகின்றோம்.
இதைப்
போன்றுதான், ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அந்த மணம் அந்த மரத்திற்கு முன்பு அதிகமாக வரும்போது,
கசப்பின் தன்மையைத் தவிர மற்ற அலைகளைத் தனக்குள் வராதபடி பாதுகாப்பாக வளர்த்துக் கொள்கின்றது.
இதைப்போன்றுதான்,
கணவன் மனைவி இரு சரீரமும் ஒரு சரீரமாக ஆக்கப்படும்போது,
சப்தரிஷி மண்டலங்களாகச் செயல்படும்போது,
இந்த உணர்வுகள் பாசத்துடன்
ஒரே குடும்பமாக, ஒரே எண்ணமாக அது வளர்ச்சி பெறும் நிலைகள் வருகின்றது.
அப்படி
இரு சரீரங்களும்
ஒன்று சேர்ந்து,
தான் எடுத்துக் கொள்ளும் இந்த உணர்வலைகள் தனக்குள் ஆத்மாவாகப்
படைக்கச் செய்து,
விண்ணிலிருந்து வரும் ஆற்றலின் தன்மையை அணு சக்தியாக மாற்றி,
தன் உணர்வின் ஆகாரமாக எடுத்துக் கொள்கின்றது.
அதனின்
கூட்டுக்குள், (சப்தரிஷி மண்டலக் கூட்டிற்குள்)
எப்படி ஒரு சூரிய குடும்பம், ஒரு பிரபஞ்சமாகத் தோன்றி அகண்ட நிலைகள் பெற்றதோ, இதைப்
போன்று
நம்
உயிராத்மா விண்ணிலே வரக்கூடிய
உணர்வின்
ஆற்றல்மிக்க தன்மையை,
தனக்குள்
பிரபஞ்சமாக அமைத்துக் கொண்டு,
விண்ணின்
ஆற்றலை நுண் அணுக்களாக மாற்றி,
அந்த
அணுவிற்குள் அணுவாக நின்று ஆற்றல்மிக்க சக்தியாக,
“என்றும் பதினாறு” என்ற நிலையான நிலையை
நாம் அனைவரும் பெறமுடியும். எமது அருளாசிகள்.