உதாரணமாக,
பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால் கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால்,
விபத்தைக் கண்கூடாக பார்த்ததின் உணர்வு,
அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்துவிடுகின்றது.
அடுத்த முறை அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றி கேள்விப்பட்டால், அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே என்று, தேடிப் பிடித்து போய்
பார்ப்பார்.
ஆக, பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும், அடுத்த முறை அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால், இல்லை.
ஏனெனில், ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு, உணவு தேவை. நாம் சும்மா இருந்தாலும் அது நம்மை அழைத்துச் சென்றுவிடும்.
நாம் எத்தகைய நிலைகளையும்,
வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி,
பரிவுடன் பார்த்தாலும் சரி,
அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.
உதாரணமாக,
குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவது ஒன்றைக்
கண்டால் அடுத்த சில மணி
நேரத்திற்குள், அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது.
ஏதாவது ஒன்றைக் கண்டு பயந்துவிட்டால்,
பின் அதனின் நினைவு வரும் பொழுது அந்த
குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும். திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது.
ஆனால், பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும் மன வலிமை கொண்டு “என்ன, ஏது” என்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.
நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் எப்படி அணுவாக மாறுகின்றது? அப்படி உருவாகும் அணுவிற்கு உயிர் எப்படி உணவை காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கொடுக்கின்றது?
சுவாசம் மூலமாக பயமான உணர்வலைகளை உணவாகக் கொடுத்து
அதை எப்படி வளர்க்கச் செய்கின்றது என்பதை
நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்படித்தான், நமக்குள் உருவாகி இருக்கும் அனைத்து அணுக்களுக்கும் எந்தெந்த குணத்தில் அந்த ஜீவ அணுக்கள் உருவானதோ உயிர் - நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் அதற்குரிய உணவைக் கொடுத்து வளர்க்கச் செய்கின்றது.