ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2013

தர்மம் (நல்லது) செய்கின்றோம், ஆனால், நமக்குள் வரும் தீமைகளைத் துடைக்கின்றோமா?

1. பலருக்கு தர்மம் செய்து, ஒருவருக்கு இல்லை எனும் பொழுது என்ன ஆகின்றது?
நாம் யாரும் தப்பே செய்யவேண்டாம். இன்றைக்கு ஆயிரம் பேருக்கு தர்மத்தைச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கடைசியில் ஒருவருக்கு மட்டும் இல்லை. அதனால், கையில் இருக்கிற காசைக் கொடுக்கிறீர்கள்.

“ஐயா, அவர்களுக்கெல்லாம் கொடுத்தீர்கள், எனக்குக் கொடுக்கவில்லையே?” என்பார் அவர்.

நான் தான் எல்லாம் செய்தேன், ஆனால் “இப்பொழுது இல்லை” என்று சொல்வோம்.

எல்லாம் இருக்கிறது. நீங்கள் வைத்துக் கொண்டே இல்லை என்கிறீர்கள் என்பார் அவர்.

நாம் “அட., போப்பா” என்று வேகமாக “சுருக்” என்று சொன்னால் போதும். இந்த உணர்வுகள் உடனே என்ன செய்வார்? சாபமிடும் நிலைகளுக்கு வரும்.

எல்லோருக்கும் கொடுத்தீர்கள், ஆனால், நான் ஒரு பாவி என்பார். அதாவது, அவர் உணர்வுக்குத் தக்கவாறு கடுமையான ஒரு வார்த்தையைச் சொன்னால், இந்த உணர்வுகள் நமக்குள் எதிர்த்து விடுகின்றது.
2. தர்மம் செய்கின்றோம், ஆனால் நமக்குள் வரும் தீமைகளைத் தடுப்பதில்லை
ஒரு பாலுக்குள் காரம் பட்டுவிட்டாலோ, ஒரு விஷம் பட்டுவிட்டாலோ அதைக் குடிப்போரை எல்லாம் மயங்கச் செய்கிறது. இதைப் போல, அந்த மனிதன் தான் சுருக் என்று சொன்னவுடனே
தான் வேதனை தாங்காதபடி
அதிகமான நிலைகளில் அதை இழுத்து
சாபமிட்ட உணர்வின் தன்மையை நமக்குள் சேர்த்துக் கொள்கிறோம்.
அதிலிருந்து தப்புவதே கஷ்டம்.

அப்பொழுது நல்லது யாராவது சொல்லட்டும். நீங்கள் காதில் கேளுங்கள் பார்க்கலாம். அதிக நேரம் நின்று கேட்கவே முடியாது.
நீங்கள் சங்கடமாக இருக்கும் பொழுது
ஒருவர் ஏதாவது ஒரு சந்தோஷமான வார்த்தையை
அவர் பேசிக் கொண்டிருக்கட்டும்.
நீங்கள் ஒரு பத்து நிமிடம் நின்று கேட்டுப் பாருங்கள்.
நிற்க முடியாது.

அதே சமயத்தில், ஒருவர் சங்கடமாகப் பேசட்டும். “அவன் இப்படிப் பண்ணினான், இவன் இப்படிப் பண்ணினான்” என்று அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை நின்று கேட்போம். இப்படித்தான், அயோக்கியப் பயல்கள் ஊரில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் ரசித்துக் கேட்போம்.
அங்கேதான் போய் நிற்போம்.
இங்கே நல்லதை எடுக்கவே விடாது.

ஆக, இதைப் போல இந்த உணர்வின் தன்மை அங்கிருந்து பல நிலைகள் செய்யும். ஆனால், இதெல்லாம் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தின் நிலைகளில் வருகின்றது.