யாம் காந்திஜி ஆசிரமத்திற்குப் போயிருக்கும்
பொழுது அவரவர்கள் வேலையை அவர்களே செய்ய வேண்டும்..
ஒரு குறையைக் கண்டால் அதை நிவர்த்தி செய்து
சுத்தம் பண்ணிவிட்டுத்தான் வரவேண்டும்.
காந்திஜி அப்படிப் பழக்கி வைத்திருந்தார்.
ஏனென்றால், அவர் அரசியல் நிலைகளில் இருந்தாலும்
கூட, மனப்பக்குவம் பெறுவதற்கு சபர்மதி ஆசிரமத்தில் இந்த மாதிரி செய்து வைத்திருந்தார்.
அதைப் போல இங்கே வருபவர்கள் மனப்பக்குவம்
பெறுவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்திருக்கின்றோமே தவிர,
பேரும் புகழும் வாங்கிக்கொண்டு, பெரிய கட்டிடத்தைக் கட்டிக் கொண்டு பெரிய சாமியார்
என்று சொல்லிக் கொண்டு இருப்பதற்கு அல்ல.
நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று, மகிழ்ந்திடும்
உணர்வுடன் உங்கள் பேச்சு மூச்சு அனைத்தும் உங்கள் குடும்பத்திற்கு நல்லதாக வேண்டும்.
நீங்கள் வெளியில் மற்றவர்கள் யாரிடத்தில்
பேசினாலும்
அவர்களுக்கும் நல்லதாக வேண்டும்.
நீங்கள் தொழில் செய்யும் பொழுது
உங்கள் வாடிக்கையாளர்களும் எல்லா நலமும் பெறவேண்டும்.
நீங்கள் யாரைச் சந்தித்தாலும் அவர்கள் அனைவருக்கும் நல்லதாக
வேண்டும்
என்ற அந்த நிலை பெறச் செய்வதற்குத்தான்
தபோவனத்தை அமைத்திருக்கின்றோம்.
ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் தபோவனத்திற்குள்
வந்துவிட்டீர்கள் என்றால், இங்கே புற நிலைகளில் இருக்கக்கூடிய கஷ்ட நஷ்டங்களைப் பற்றிப்
பேசக் கூடாது. ஆக, மகரிஷிகளின்
அருளாலே நமக்கு நன்றாக வேண்டும் என்ற நிலைகளைத்தான்
நீங்கள் பேச வேண்டும்.
இங்கே மற்றவர்கள் சொன்னாலும் கூட, நாம் அடுத்த
நிமிடம் நன்றாக வேண்டும் என்று சொல்லிவிட்டு உடலில் உள்ள நோய்கள் எல்லாம் விலகி எனக்கு
நன்றாக வேண்டும் என்றுதான் எண்ண வேண்டும், கேட்க வேண்டும்.