பிரமனைப் பார்த்து போயில் தெளிந்துநீ
அரமனைக்குள்ளே அந்தித்து வாசியை
உரமனைத் தாக்கு ஓடிலும்
ஓடாது
திரமனை யோடுஞ் சிவயோகி ஆகுமே
--திருமூலர்
1. பிரமனைப்
பார்த்து போயில் தெளிந்துநீ
வெப்பம், காந்தம், விஷம் என்ற மூன்று நிலைகளானது மற்றொன்றுடன் மோதும்போது நான்காகி பிரம்மம்
என்ற நிலையாகி உருவாக்கும் செயலாக ஆகின்றது
இதைப் போன்றுதான் நாம் எதையெல்லம்
பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, நுகர்கின்றோமோ,
இவையனைத்தும் சுவாசமாகி,
உயிரிலே மோதும் பொழுது அது ஜீவன் பெற்று
சுவாசித்த உணர்வின் சத்தை அணுவாக உருவாக்கும் கருவாக
நம் உடலுக்குள் உருவாக்கிவிடுகின்றது நமது உயிர்.
ஆகவே, நாம் சுவாசிப்பது அனைத்துமே சிருஷ்டியாகின்றது என்ற பேருண்மையைத் தெரிந்து, தெளிவான நிலைகள் கொண்டு நல்லதையே
நமக்குள் சிருஷ்டிக்க வேண்டும் என்ற நிலையில் நாம் செயல்படவேண்டும்
2. அரமனைக்குள்ளே
அந்தித்து வாசியை
நல்லதைச் சிருஷ்டிக்க நாம் என்ன செய்யவேண்டும்?
நம் நினைவுகள் புருவமத்தியில் உயிரான ஈசன் வீற்றிருக்கும் ஈஸ்வரலோகத்திற்குள்
சென்று, அவனை நாம் சந்தித்து, சுவாசத்தை உயிர் வழி சுவாசமாக்க வேண்டும்.
அதாவது, ஓம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரான ஈசனிடம் வேண்டி விண்ணை நோக்கி நினைவைச்
செலுத்தி, ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகளைக் கவர்ந்து, இழுத்து அதை
உயிரிலே மோதச் செய்து, அருள் உணர்வுகளை ஜீவன் பெறச் செய்து, அந்த சுவாசத்தை உடலில் உள்ள
இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
பின், நம் உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளிலும் அதைப் பரவச் செய்து, அந்த
உறுப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் அனைத்து அணுக்களையும் அருள் மகரிஷிகளின் அருளாற்றலைப்
பெறச் செய்யவேண்டும்.
3. உரமனைத்
தாக்கு ஓடிலும் ஓடாது
இப்படி, பூமி சமைத்த உணர்வுகளை நாம் மூக்கின் வழியாகச் சுவாசிப்பதைத் தடுத்து
உயிர் வழியாக விண்ணின் ஆற்றலைச் சுவாசிக்கும் பொழுது,
நமக்கு எமனாக வரும் தீமையான
உணர்வுகளை
நமக்குள் உள் புகாது அது தாக்குகின்றது.
அங்கே தீமைகள் தடுக்கப்படுகின்றது.
ஆக, எத்தகைய கடுமையான நஞ்சாக இருந்தாலும் அதை ஒடுங்கச் செய்து அதன் செயலாக்கத்தைத்
தணித்து, ஒளியாகவே மாற்றிவிடும் நாம் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றல்.
4. திரமனை
யோடுஞ் சிவயோகி ஆகுமே
மனிதனாகப் பிறந்த நாம் தீமைகளை நுகர்ந்து வேதனையை வளர்க்காது,
தீமைகளிலிருந்து
விடுபடவேண்டும்.,
தீமைகளிலிருந்து
விடுபடவேண்டும் என்று
தீமையை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வைச் சுவாசிக்கும்
பழக்கத்திற்கு (தீமையை ஒளியாக மாற்றிடும் திறன்) வந்துவிட்டால்,
முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, என்றும்
அழியா ஒளி உடல் பெறலாம்.
அந்த மகரிஷிகள் வேறல்ல நாம் வேறல்ல என்று நம் முன்னோர்கள்,
மூதாதையர்கள் அடைந்த நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்..