ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2013

காக்காய் வலிப்பு போன்ற சில நோய்கள் வரக் காரணம் என்ன?

திடீரென்று ஒரு குழந்தையை நாம் எதிர்பார்க்காதபடி ஒருவன் ஓடி வந்து அடிக்கின்றான். பார்த்தவுடன் நம் எண்ணமெல்லாம் மாறிப் போகின்றது. அப்பொழுது பதட்டமாகின்றது.

அந்தக் குழந்தை “படக் படக்” என்று துள்ளுகிறது. அங்கே மனது என்ன ஆகின்றது? அப்பொழுது இந்த உணர்வெல்லாம் முழுவதும் மாறி உணர்வின் தன்மை மாறுகின்றது.

திடீரென்று எதிர்பார்க்காமல் அடித்தவுடனே நமக்கு பயம் வந்துவிடுகின்றது. அது துள்ளும் பொழுது, அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் வந்தவுடனே அந்த பயமோ, அந்த பதட்ட உணர்வோ அதிகமாகி பேதி கூட ஆகிவிடுகின்றது.

அதிலிருந்து அடிக்கடி பயமாக வந்துவிடும். அந்த பயத்தின் தன்மை அதே இன்னலினுடைய நிலைகள் உங்களுக்கு நிச்சயம் ஜன்னி வரும். அல்லது ஒரு காக்காய் வலிப்பு போல நிலைகள் வரும். அல்லது நோய் வரும்.

அதாவது, முக வாதம், கண் வாதம், காது வாதம். காது வாதம் என்கிற வகையிலே, காது கேட்காது திடீரென்று எதிர்பார்க்காமல் ஒரு குழந்தையை ஒருவன் அடிக்கின்றான். “ஆ” என்று நீங்கள் அலறினால் போதும்.

இந்த உணர்வின் தன்மை வந்து முக வாதம் வரும். கண் வாதம் வரும். கண் வாதம் என்றால், கரு விழி அங்கும் இங்கும் சுற்றாது.
அது வேகமாக இழுத்த நிலைகள் கொண்டு
நரம்புகள் பலவீனமாகும்.

அதே சமயத்திலே அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது காது வாதம் வரும். ஒலியின் உணர்வுகள் நாதத்தைப் பிரித்துக் கொடுக்கக்கூடிய சக்தியை காது இழந்துவிடும்.

அதே சமயத்திலே உங்களுக்கு ரொம்பவும் அதிகமாகிப் போனால், குடல் வாதம் வரும். “ஆ” என்றவுடனே,
மூளைக்குள் இருக்கக்கூடிய
அந்தக் குடலை இயக்கக்கூடிய தன்மை வேதனையாகிப் போனால்
குடல்கள் சரியாக ஜீரணிக்காது.
இதையெல்லாம் டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாது.

ஏனென்றால், இதெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள். நாம் தவறு செய்யவில்லை. ஆனால், அடிப்பவன் முரட்டுத்தனமாக அடிக்கிறான்.

அவனுடைய சிந்தனை ஆக்ரோஷமான நிலையில் இருக்கிறது.. கடைசியில் அவனுக்கு என்ன செய்யும்? காக்காய் வலிப்பு வரும். அல்லது ரத்தக் கொதிப்பு வரும்.

ஆக, சிந்தனையற்ற நிலைகள் கொண்டு தன்னையறியாமலே தன்னை அழித்துக் கொள்ளும் நிலையில் அவன் இருப்பான். இப்படி நிர்பந்தமான நிலையில் ஒருவன் தாக்குகின்றான் என்றால் அவனால் தாக்க முடியாத நிலையில் அவனே அவனைத் தாக்கிக்கொள்ளும் நிலைகள் வரும்.

காரணம், அவன் சுவாசிக்கும் உணர்வுகள் அவன் உயிருக்குள் பட்டவுடனே அந்த உணர்வின் தன்மைகள் வேலை செய்கின்றது.

இதைப் போன்றுதான், ஒவ்வொரு நிமிடமும் மனிதனுடைய வாழ்க்கையில் வரக்கூடிய தீய சக்தியினுடைய நிலைகள்
நம்மையறியாமலே
நாம் தவறு செய்யாமலே
நம் புலனறிவுகளிலே ஈர்க்கப்படும் பொழுது
இந்த நிலை வந்துவிடுகின்றது.
இதை நாம் எப்படித் துடைப்பது? இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.