1 ஐந்து அறிவு கொண்ட உயிரினங்களின் தன்மை
புழுவிலிருந்து
மிருகமாகத் தோன்றி, மிருகத்திலிருந்து மனிதனாகத் தோன்றியது. மற்ற உயிரினங்கள் அனைத்துமே
தான் உட்கொள்ளும் உணவிலும், தான் சுவாசிக்கும் உணர்வுக்குள்ளும் இருக்கக்கூடிய விஷத்தின்
தன்மையை தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது.
ஆக, விஷத்தை
உடலாக மாற்றிக் கொண்டு
நல்லதை மலமாக
மாற்றிவிடுகின்றது.
அவ்வாறு மாற்றி,
தன் வலுவைக் கொண்டு உடலாகப் பெற்றபின் அதிலே தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள்
தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப,
ஒவ்வொரு உருவத்திற்குத்
தக்கவாறு
தன்னைக் காத்துக்
கொள்ளும் உணர்வுகளைச் செலுத்துகின்றது.
விஷத்தின் தன்மை தன் உடலில் சேர்க்கப்படும்
பொழுது, வேதனை என்பதை அது அறிய முடிவதில்லை.
ஆனால், வலுவான
எண்ணங்கள் கொண்டு
மூர்க்கத்தனமான
எண்ணங்கள் வந்தாலும்,
பிறிதொரு எதிரியிடமிருந்து
தப்புவதற்கு
அந்த உணர்ச்சியின்
தன்மை கொண்டு தான் ஏங்கி
அந்த அசுரத்தன்மையான
நிலைகள் தாக்கினாலும்,
அது தாக்கும்
நிலைகள் கொண்டு
தான் வேதனையைத்
தாங்கும் நிலை வருகின்றது.
ஆனால், எதிரியிடமிருந்து
தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய
பாதுகாக்கும் உணர்வும் எடுத்துக் கொள்கின்றது.
2. அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை
இவ்வாறு தனக்குள்
சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகள் தான் உடலிலே அது சேர்க்கப்பட்டு, அது வினையாகச்
சேர்த்து ஆற்றல்மிக்க நிலைகளாக வரப்படும் பொழுது, நாம் சுவாசிக்கும் உணர்வின் எண்ணங்களுக்குள்
நல்லது எண்ணினாலும் சரி, கெட்டது எண்ணினாலும் சரி, நாம் சுவாசிக்கும் உணர்வின் அணுக்களுக்குள் இந்த விஷம்
உண்டு.
ஆக, நாம் சுவாசித்தது
உயிரிலே படும் பொழுதுதான் இந்த விஷத்தின் ஆற்றல்கள் அது ஊடுருவி, நம் உடலுக்குள் உணர்த்தவும்
இயக்கவும் செயல்படுகின்றது.
அவ்வாறு நாம்
உணர்த்தி அறிந்துணர்ந்து செயல்பட்டு அறிந்துணர்ந்தாலும் அந்த உணர்வின் சத்துக்கு இடையூறாகச்
சேர்ந்து நம் உணர்வுடன் ஆகாரத்துடன் கலந்துவிடுகின்றது.
அத்துடன் நாம்
எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையில்,
ஒவ்வொரு அணுக்களினுடைய
நிலைகளிலும்
விஷம் ஊடுருவி,
அது இயக்கத்தான் செய்கின்றது.
அதைச் சுத்தப்படுத்தவேண்டும்.
3. மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை
நாம் புழுவிலிருந்து
மனிதனாகத் தோன்றும் வரையிலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வின்
தன்மை கொண்டு, எத்தனையோ கோடி உணர்வுகளுடைய தன்மைகளைச் சுவாசித்துத்தான், இன்று பரிணாம வளர்ச்சியில் மனித நிலையை அடைந்துள்ளோம்.
இதைப் போலத்தான்
மனிதனாகப் பிறந்தபின், ஆறாவது அறிவான நிலைகளை நாம் செம்மையான நிலைகளில் கடைப்பிடித்து,
எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மையினுடைய நிலைகள் எதுவானாலும் நல்ல வாசனையான பொருள்களை
நாம் சாப்பிட்டாலும் நம்முடைய மலம் நாற்றமாகின்றது. ஆனால், நம் உடலோ நல்லதாக இருக்கின்றது.
நாம் எத்தகைய
நல்ல வாசனையுள்ள சுவையான பொருள்களைச் சாப்பிட்டாலும் அந்த வாசனைக்குள் இருக்கக்கூடிய
விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிடுகின்றது. ஆக,
தீயதை மலமாக
மாற்றிவிட்டு
நல்லதாக, உடலாக மாற்றுகின்றது.
ஆக, நம் உடலின்
தன்மை உயிரின் இயக்கத்தில் இருக்கும் பொழுது எந்த உணர்வின் சத்து நமக்குள் இருக்கின்றதோ
அந்த மணம் வெளிப்படுகின்றது.
இன்று ஒரு மாமரம்
வளர்ந்தபின், அந்தப் பருவம் வரும் பொழுது, அது கனியானபின் அந்தக் கனியின் மணம் எப்படி
வீசுகின்றதோ அதைப் போன்றுதான் நம் உடலுக்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்
மிக்க நிலைகள் மணங்களாக வெளிப்படுகின்றது
அப்படி வெளிப்படும்
அந்த மணத்தை நாம் சுவாசித்து, விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நம் உடலை நல்லதாக மாற்றிய
அந்த உணர்வின் அணுக்களுக்குள் இருக்கக்கூடிய
தீயதை இயக்கி
அதை நல்லதாக ஆக்கிக் கொள்ளவும்
தீயது எதுவாக
இருந்தாலும்
தனக்கு வேண்டிய நிலைகளுக்கு
அதைப் பக்குவப்படுத்தும் நிலைகள் தான்
நாம் செயல்படுத்த வேண்டிய
மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை.
அந்த ஆறாவது
அறிவைச் சீராகக் கடைப்பிடித்து, எத்தகையை உணர்வையும்
மாற்றி அமைத்து, உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக ஆக்கி ஒளியின் சரீரம் பெற்றவர்கள்
தான் மெய்ஞானிகள். ஆகவே, நாமும் அவர்கள் சென்ற பாதையில் செல்வோம்.