ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 8, 2013

நான் யார்? தான் யார்? - இந்தப் பிள்ளை யார்?

1. யாரும் ஒன்றும் செய்யவில்லை, நாம் நுகரும் உணர்வுகள்தான் இயக்குகின்றது
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மிடம் சரக்கு வாங்குபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் தியானித்து உணர்வலைகளைப் பரப்பினோம் என்றால், நம்மிடம் பொருள் வாங்கியவர்கள்,
“இவர்கள் கடையில் வாங்கினேன்,
சரக்கு நன்றாக இருந்தது” என்பார்கள்.

அதே சமயத்தில், நீங்கள் சங்கடமான நிலையில் இருந்து பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.
சரக்கு வாங்கியவர்கள் “ஐயோ போய்விட்டதே,
நஷ்டமாகிவிட்டதே” என்பார்கள்.

அடுப்பிலே வேலை பார்த்தால், கவனக்குறைவாகி பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடும், நாம் வேதனைப்படுவோம். இந்த சங்கட உணர்வுகள் அங்கே தாக்கப்படும். ஏனென்றால், இந்த உணர்வினுடைய ஆதிக்கம் அங்கே செயல்படுகிறது.

ஒரு மனிதன் சங்கடமான நிலைகளில் இருக்கப்படும் பொழுது, பொருள் தரமானதாக இருந்தாலும் நிச்சயம் சுவை மாறுபட்டுவிடும்.

ஏனென்றால், இந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே பேசப்படும் பொழுது, இந்த உணர்வுகள் அங்கே தாக்கப்படுகிறது, இந்த உணர்வின் நிலைக்கொப்பத்தான் இயக்கம்.

உலகத்தினுடைய உணர்வினுடைய நிலைகளில்
இந்த உணர்வுகள்தான் இயக்கமே தவிர
நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்றால்
“யாரும்” ஒன்றும் செய்யவில்லை.
2. நான் யார்? தான் யார்? - என்று கேள்விக்குறி

நான் என்ற நிலைகளுக்கு வரப்படும் பொழுது, “தான் யார், நான் யார்?” என்று விநாயகனைப் போட்டு பிள்ளையார் சுழி போட்டு வைத்திருக்கிறோம்.

புழுவிலிருந்து மனிதனாக வந்தோம், யானைத் தலையைப் போட்டு, மனிதனுடைய உடலைப் போட்டு முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாகக் காட்டினார்கள்.

இந்தப் பிள்ளை யார்? என்று விநாயகனைப் போட்டு
நான் யார்?
தான் யார்? என்று தெரிந்து கொள்வதற்காகச் செய்தார்கள்.

இப்பொழுது நாம் எதை எண்ணுகிறோமோ அதைச் சுவாசிக்கும் பொழுது நான் ஆகின்றது. அது நம் உடலுக்குள் சென்றவுடன் தான் ஆகின்றது. இந்தத் தான் ஆகி இந்த உடலில் அது செயல்படுகின்றது. இந்தத் தான், உடலுக்குள் உணர்வாக விளையப்படும் பொழுது நான் ஆகின்றது. ஆக, 
தான் யார்? 
நான் யார்?
3. உயிருடன் ஒன்றி, அவனுடன் சேர்ந்து அவனாகி, அவனாகவே உருபெறுவோம்
நாம் கோபப்படுகிறோம், ஆத்திரப்படுகிறோம், சஞ்சலப்படுகிறோம், சங்கடப்படுகிறோம் இவை அனைத்தும் தானாகின்றது. நாம் எண்ணுவது அனைத்துமே தானாகின்றது.

நான் இதைச் செய்தேன், நல்லதைச் செய்தேன்,
எனக்கு இப்படிச் செய்கிறார்களே
என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த உணர்வெல்லாம் உயிருடன் ஒன்றி, உயிருடன் சேர்க்கும் போது நானாகின்றது. இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் தானாகி, நானாகி விடுகின்றது. இந்த தான் என்ற உணர்வின் நிலையாக உயிருடன் சேரும் பொழுது நானாகின்றது.

இன்றைக்கு மனிதனாக வந்திருக்கின்றோம். ஆக, தான் யார், நான் யார் என்ற நிலைகளை, இந்த விநாயக தத்துவத்தை அகஸ்தியன் தெளிவாக்கினான்.

ஆகவே, நம்மை இயக்கும் இருளான உணர்வுகளிலிருந்து விடுபடுவோம். அந்த அகஸ்தியன் அறிந்த வழியில் நம்மை நாம் அறிவோம். அகஸ்தியன் அருளைப் பெற்று, அழியா ஒளி உடல் பெறுவோம்.

அகஸ்தியன் உணர்வை நான் ஆக்குவோம். அதை நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் அதைப் பெறச்செய்து, அந்த அருள் ஒளியை தான் ஆக்கிடுவோம்.

இந்தப் பிள்ளை, “உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை என்று உணர்ந்து,
நாம் அனைவரும் உயிருடன் ஒன்றி,
அவனுடன் சேர்ந்து அவனாக ஆகி,
அவனாகவே உருப்பெறுவோம்.
எமது அருளாசிகள்.