1. பெரும்பகுதியானவர்கள்
கோவிலுக்குள் சென்று, எந்த எண்ணத்துடன் வழிபடுகின்றார்கள்?
அன்று மெய்ஞானிகள்
சொன்ன நிலைகள், கோவிலிலே போய் தியானம் செய் என்று சொன்னால், “அன்று அவர்கள் செய்ததெல்லாம்
தப்பா.., முட்டாளா..,?” என்று கேள்வி கேட்கின்றார்கள்.
அங்கு கோவிலுக்குச்
சென்று ரூ. 50, 100, 1000 என்று செய்வதற்குப் பதில் அந்த தெய்வகுணத்தை அருளிய மகரிஷிகளின்
அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், இந்தக் கோவிலுக்கு
வருபவர்கள் அனைவரும் அந்த தெய்வகுணம் பெறவேண்டும் என்று எண்ணச் சொன்னால்,
அங்கே தெய்வத்திற்குக் காசைக் கொடுத்துவிட்டு,
நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால்
தெய்வம் ஓடி வந்து செய்யும் என்றுதான்
எண்ணுகின்றார்கள்.
மத்திரத்தினால்
சொல்லிச் சொல்லிப் பார்த்தால், இந்த மந்திரத்தினால் இன்னொரு மனிதரிடம் விளைந்தது இங்கே வரும். இது நம்மை
அருளாடச் செய்யும்.
நாம் நான்கு
பேருக்கு நல்லது செய்தோம்,
அவர்கள் கஷ்டத்தையெல்லாம்
நுகர்ந்தோம்.
அவர்களுக்கு நல்லதாகிவிட்டது.
ஆனால், தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கின்றதே என்று
மறுபடியும் விஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.
அன்றைய ஞானிகள்,
முனிவர்கள் என்ற நிலைக்கு வரப்படும் பொழுது, புஷ்பம், பழம் மற்றவையெல்லாம் போட்டு மனிதனுடைய
உணர்வுக்குள் ஆசையை எடுத்துச் சொல்லும் பொழுது,
சாதாரண மனிதனுடைய
ஆசைகள் நாலாகச் சேர்க்கும் பொழுது,
இந்த ஆசைகள்
கூடி அதன் வழிகளிலேதான் அழைத்துச் செல்லும்.
இப்படி பூஜை
செய்து செல்ல வேண்டுமென்றால் மனித உணர்வுக்குள் போகலாம். இன்றைக்குக்
காரியம் நடக்கும். ஆனால், செல்வம் பெற
பூஜை செய்துவிட்டு, நீங்கள் எதை இழுக்கின்றீர்களோ அடுத்தவர்களுக்கு ஏதாவது சொல்லும்
பொழுது அந்த உடலில் இருக்கக்கூடிய வியாதியெல்லாம் சேர்த்து இழுத்துக் கொள்ளும்.
ஆக, நான் எல்லாம் நல்லது செய்தேன்,
ஆண்டவன் எனக்கு முதலில் அருள் கொடுத்தான்,
இப்பொழுது தொல்லை கொடுக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருப்போம்.
2. தெய்வத்திடம் அழுது முறையிட்டு வரம் கேட்பதுதான் நல்லது என்று எண்ணுகின்றார்கள்
கோவிலுக்குச் சென்று, அங்கே கஷ்டத்தை எல்லாம் விட்டுவிட்டு
வருகிறோம். கோவிலுக்குச் சோர்வாக சென்றோம் என்றால் அவை நம்மைப் பிடித்துக் கொள்ளும்.
கோவிலுக்குச்
சென்று வரும் பொழுது சோர்ந்துதான் வருகின்றோமே தவிர நன்றாக வருகின்றோமா? கோவிலுக்குப்
போகும் பொழுது எந்த வேகத்தில் செல்கிறோமோ, அதே வேகத்தில் வீட்டிலிருக்கக்கூடிய கஷ்டத்தை
எண்ணுகின்றோம்.
நீங்கள் சோர்வாக
வரப்படும்பொழுது, இன்னொருவர் கஷ்டம் என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அந்தக்
கஷ்டம் உடனே நமக்கும் வந்துவிடும்.
ஆக, நாம் கோவிலிலே
போய் எதை எடுக்கிறோம்? சோர்வு வரப்பபடும் பொழுது இதே மாதிரி சோர்வலைகளை அங்கே நுகர்ந்தால்
நம்மைச் சோர்வடையத்தான் வைக்கிறது.
நம்மை அறியாமல் சோர்விலேயும் சஞ்சலத்திலேயும்
தான் கோவிலுக்குச் சென்று வருகிறோமே தவிர, நல்லதை நாம் பெறமுடிவதில்லை.
இந்தச் சோர்வுடன் போய் தெய்வத்திடம்
வரம் கேட்பதுதான் நல்லது என்று நினைக்கிறார்கள்.
3. நாம் எடுக்கும் எண்ணமே நமக்குள் தெய்வமாகி, நம்
உடல் ஆலயமாகின்றது - ஆதிசங்கரர் காட்டியது
அந்த மெய்ஞானிகள்
சொன்ன வழிப்படி, ஆத்ம சுத்தி என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
எடுத்து வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கவும், விஞ்ஞான உலகத்தில் வரக்கூடிய விஷத்தை
நீக்கி மகிழ்ந்த நிலையில் வாழவும் முடியும்.
உங்களுக்கு எது பிரியமோ அதைச் செய்யலாம். ஏனென்றால், நமது குருநாதர் காட்டிய நிலைகள், இந்த
உடலைவிட்டுச் சென்றபின் நாம் எங்கே செல்லவேண்டும் என்ற நிலைகள்.
நம் உடலின் நிலைகளைத்தான்
ஆலயங்களாகப் புறத்தால் காட்டப்பட்டது. எந்த ஆலயத்துக்குக் சென்றாலும், அந்த தெய்வகுணத்தைப்
பெறவேண்டும், அதை அருளிய அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
அப்படி எண்ணும்
பொழுது, இந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் மறைந்திருக்கக்கூடிய
நல்ல குணங்களின் சக்தியை இயக்கி,
நம் மூச்சினாலே பிறருக்குள் மகிழ்ச்சி ஊட்டி
நம் காரியங்களைச் சித்தியாக்குகின்றது.
ஆக எடுத்துக்
கொண்ட உணர்வின் தன்மை,
உன் உடலுக்குள்
எடுக்கும் சுவாசம்
உனக்குள் தெய்வமாக
நின்று,
உன் உடலுக்குள்
இருக்கக் கூடிய பிணிகளை நீக்குகின்றது.
உன் உடலுக்குள்
இருக்கக்கூடிய உணர்வின் தன்மைதான்
உன் உடலை ஆலயமாக்குகின்றது.
ஆக நீ எண்ணி
எடுப்பதேதான், நீ வேள்விகள் செய்வது அல்ல. நீ செய்யவேண்டிய வேள்விகள் உன் எண்ணத்திற்குள்
வேள்விகள் அடங்கியிருக்கின்றது என்று,. இவ்வாறு தனக்குள் மறைந்ததைத்தான் அன்று
ஆதிசங்கரர் தெளிவாகக் காட்டினார்.
மலரின் மணத்தைப்
பெறவேண்டும் என்று எண்ணி எடுக்கும் பொழுது, அதே ஏக்கத்தில் திரும்பத் திரும்ப செயல்படுத்தும்போது
அந்த மணத்தின் தன்மை நமக்குள் சுவாசிக்க நேருகின்றது.
அந்த மலரின்
குணத்தின் தன்மை எவ்வளவோ அதே போல செயல்படவேண்டுமென்று உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது,
உணர்ச்சிகள் நமக்குள் ஊட்டி அந்த செயலின் தன்மை செயல்படும். மணத்தின் தன்மை கொண்டு
பேசவைக்கின்றது.
ஆக எடுத்துக்
கொண்ட உணர்வின் தன்மை உயிராத்மாவில் படும்பொழுது அந்த நிலைகள் செயல்படுகின்றது என்பதைத்
தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
4. உங்கள் உயிர் ஈசன், உங்களை நீங்கள் நம்ப வேண்டும்
எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் தியானம்
செய்து பழகுங்கள். உங்களுக்குள் மகிழ்ச்சி வருவதைப் பார்க்கலாம்.
அர்ச்சனை செய்வதற்குப்
பதில் அந்தக் கோவிலிலே நின்று, இந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். இதை அருளிய
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கி தியானித்து
அந்த மூச்சலைகளைப் பரப்புங்கள்.
பின், இந்தக்
கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும்
இந்த தெய்வ குணத்தைப்
பெறவேண்டும்,
அவர்கள் வாழ்க்கையில்
எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நூறு பேர் ஒவ்வொரு நாளும்
அங்கே விட்டார்கள் என்றால் அங்கே எல்லாம் சுத்தமாகும்.
அர்ச்சனை
செய்கிறீர்கள். அந்தக் காசை உண்டியலில் போடுங்கள். நல்ல காரியத்திற்கு அது பயன்படட்டும்.
அதை அந்த தேவஸ்தானம் செய்யும். வருபவர்களுக்குத் தங்குவதற்கு வசதி செய்யட்டும்.
நீங்கள் வசதியாகப்
போய் அங்கே உட்கார்ந்து, இந்த தெய்வகுணத்தைப் பெறவேண்டும், இங்கே வருபவர்கள் எல்லாம்
பெற்வேண்டும் என்று மூச்சை விட்டுப் பாருங்கள். அங்கே நல்லது நடக்கும்.
ஆக, அந்த
மெய்ஞானிகள் காட்டிய அருள்வழியில் சென்றால் உங்களுக்குள் வரக்கூடிய இருளை நீக்கலாம்.
உங்கள் உயிர் ஈசன்.
உங்களை நீங்கள் நம்பவேண்டும்.