1. போகமாமகரிஷி பெற்ற இந்த புவனத்தின் ஆற்றல்
மனிதனுக்கு எவ்வாறு பல நோய்கள் வருகிறது என்ற நிலையை
அறிந்து, அதை மாற்றும் நிலையையும் கண்டுணர்ந்தார் போகமாமகரிஷி.
அதாவது, புவனேஸ்வரி, இப்(பூமி) புவனம் என்பதும்,
இந்தப் பூமியில் தோன்றிய அனைத்துத் தாவர இனச் சத்துக்களும்
பூமி தனக்குள் விண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும்
உணர்வின் ஆற்றல் அது ஒன்றுடன் ஒன்று கலந்து
அந்த உணர்வின் சத்தான தாவர இனச் சத்துக்கள்
எவ்வாறு அது வெளிப்படுகின்றது?
அந்த உணர்வின்
சத்தின் ஆற்றல் என்ன?
அதனைத் தனக்குள் சுவாசித்து, அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றலாக மாற்றி, அந்த உணர்வின்
செயல் எவ்வாறு இருக்கின்றது என்பதனைத்தான் போகர் கண்டுணர்ந்தார்.
இதைப் போன்று, தன் உணர்வின் எண்ணத்தாலே
இந்த பூமிக்குள் விளையும் அனைத்துப் பொருள்களும்
இந்த உடலுக்குள் உண்டு என்ற நிலையையும்,
இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் தட்டியெழுப்பி,
இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு
ஒவ்வொன்றையும் கண்டுணர்ந்தார்.
இந்தப் பூமிக்குள் தங்கம் எவ்வாறு விளைந்தது, வைரம்
எவ்வாறு விளைந்தது? மற்ற உலோகத்தின் தன்மைகள் எவ்வாறு விளைந்தது என்ற நிலையைத் தன்
உணர்வின் எண்ணங்கள் கொண்டு கண்டறிந்தார்.
ஏனென்றால், இந்தப் பூமியில் தோன்றித்தான் ஆவியாக
மாறி, மற்ற அணுக்களாக மாறி, தாவர இனங்களாக மாறி, அந்தச் சத்தின் தன்மை அது ஆவியாக மாறும்
பொழுது, அது சூரியனின் காந்த சக்தியின் தன்மை கொண்டு ஆவியின் உணர்வலைகளாக மாறினாலும்,
அந்த உணர்வின் சத்து உடலுக்குள்
கலந்தவுடன், எண்ண ஒலிகளாக
மாறுகின்றது.
அந்த உணர்வின் தன்மை பொறிகள்.
நாம் உருவான பின்,
உயிரின்
தன்மை துடிப்புக்குள் வரும் பொழுது,
இந்த உணர்வின் அலைகள் அந்த அங்கங்களாக அசைத்து
அது சொல்லாகவும் செயலாகவும்
உறுப்புக்களை எவ்வாறு இயக்குகின்றது என்ற
இந்தப் பேருண்மையை
தனக்குள் தான் கண்டறிந்த மெய்ஞானிதான் போகர்.
2. போகர்
ஒவ்வொரு நாளும், ஒரு சக்தியைத் தனக்குள் எடுத்தார்
அவர் நாளொரு மேனியாக அவர் வாழ்நாளிலே
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடனே,
சூரிய உதயத்தின் தன்மை கொண்டு
சூரியனின் காந்த இயக்கச் சக்தியை தான் நுகர்ந்து
எடுத்து, பின்
இன்றைய வாழ்க்கையின் நிலைகள் குணத்தின் சிறப்பும்,
அந்த உணர்வின் தன்மையின் ஆற்றலயும்,
தனக்குள் அந்தச் சக்தியின் தன்மையைச் சேர்த்து,
சக்தியின் இயல்புகள் எவ்வாறு செயல்படுகின்றது என்ற
உண்மையின் தன்மையைத் தனக்குள் எடுத்தார்.
அதுதான்,
ஒவ்வொரு நாளும் ஒரு சக்தியைக் காதலித்தார் என்பது.
இந்தச் சக்தியைத் தனக்குள் எடுத்து, தனக்கும் தன்னைச்
சார்ந்துள்ள மக்களுக்கும் தன்னைச் சார்ந்து வருவோருக்கும் கொடுத்தார்.
3. போகமாமகரிஷி,
தான் பெற்ற சக்தியை எல்லோருக்கும் பாய்ச்சுகின்றார்
மனிதர்கள் அவர்கள் சந்தர்ப்பத்தாலே எடுத்துக் கொண்ட
நிலைகள் பிணியாகி, உடல் கெடுகின்றது. அதனால் பல இன்னல்களையும், மனோவேதனைகளையும் அனுபவிக்கின்றனர்.
அப்படி,
தன்னையறியாமல் சிந்தனையற்ற நிலைகள் சிதறுண்டு இருக்கும் நிலைகள் கொண்ட மக்களுக்கு,
“தன்
ஒளியைப் பாய்ச்சி”
அந்த உணர்வுக்குள் இருக்கக் கூடிய
தீயவைகளை மாய்த்து, மனிதனை மகிழ வைத்தார்.
தன் ஆற்றல்மிக்க நிலைகளை, தான் எந்தச் சக்தியை
எடுத்தாரோ அதே சக்தியைத் தன்னைச் சார்ந்த மனிதனின் உடலில் பாய்ச்சி, அவன் உடலில் இருக்கக்
கூடிய தீய வினைகளை நீக்கி, அவர் சார்புள்ள
மக்களாக மாற்றினார் போகமாமகரிஷி.