ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2023

மெய் ஞானப் பாடத்தைப் புகட்டும் வழி

மனிதன் ஏடறிவால் கற்கின்ற கல்வி…
1.புவியியல் எனப்படுகின்ற உன்னதத் தன்மைகள்
2.உயிரியல் எனப்படுகின்ற சூட்சும நிலைகள்
3.வானியல் என்கின்ற மூலபிரக்ருதி ஆதியின் அந்தம் உணர்ந்து கொள்கின்ற செயல் தன்மைகள் அனைத்தும்
4.மெய்ஞானத்தைக் கூட்டி போதனையின் வழி அறிந்ததைத் தன்னுள் தான் தெளிந்து
5.பெற வேண்டிய உண்மை நிலை எதுவோ அந்நிலையாய் விளங்கிடவே
6.அன்று சித்தர்கள் காட்டிய சீரிய உண்மைகளை இன்றைய புத்தக அறிவால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியுமா…?

கற்கின்ற கல்வியின் சாரங்கள் எந்நிலையாயினும் தொடருமா…? கற்பவை கற்ற நிலையில் வராது.

செவி வழியாக அறிந்து கொண்டிடும் காரிய உண்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு உரைத்திட சொல்லின் கோர்வைகள் மாறுபடா நிலையாக உரைத்திட இயலாத கல்வியின் தன்மை… அறிந்து கொண்டதை கொண்ட வழியிலே உரைத்திட வழி உண்டு.

மெய்ஞானத்தின் வழி உற்றவைகள் (உகந்தவைகள்) நற்குணங்களாகப் பரிணமிக்க நன்னெறி வளர்ப்பில் திட மனது கொள்கின்ற நிலையும்… அற்றவைகள் (ஆகாதவைகள்) என்று உரைக்கின்ற மனிதனின் நடைமுறை வாழ்க்கை செயலில் அதை எண்ணிச் செயல்படும் பொழுது உற்ற பயனே வரும் என்ற எண்ணிடாத் தன்மையாக… அற்றவைகளின் செயலில் அந்நிலையையே மீண்டும் எண்ணி ஏக்கமாகச் செயல்படும் பொழுது அந்த வினையின் தொடரே “விதி…” என யார் தான் உணர்கின்றனர்…?

மெய்ஞானத்தின் சுடராக நீக்கமற விளங்கும் மெய்ஞானச் செல்வங்களே…!
1.”முக்தி…!” என்று பக்தி வழியாக அதை உரைத்திட்டால் உரைக்கின்ற உரையின் முழுமை (உங்களுக்கு) விளங்கிடாது.
2.குழந்தைக்கு மருந்து புகட்டிடும் தாய் சுவையான பதார்த்தங்களைக் காட்டி நோய் அகலக்கூடிய அந்த மருந்தை அளிப்பதை போல்
3.இன்றைய மனித குலத்தையே மனித குணத்தையே பீடித்துள்ள எண்ணத்தில் செயல்படுகின்ற வினைகள் அகல
4.மாமகரிஷிகள் உவந்து (மகிழ்ந்து) ஊட்டுகின்றனர்… இவை அனைத்துமே பாட நிலை தான்.

ஆத்ம பலம் பெற்று… உயிர் ஆத்மக் கலப்பாக… ஆதிசக்தி எனும் “ஜோதித்துவ சங்கமத்தின் சங்கமேஸ்வரனாய்” சிறப்புற விளங்குதலே… சித்தன் சூட்டிய சொல்… அகம் காட்டிடும் அழகு… என்றும் அகலா “ஞான முறுவலாகப் (மகிழ்ச்சிக் குறி) பூத்திட வேண்டுமப்பா…!”

ஞான முறுவல் காட்டிடும் முகம்… அகம் வாழ் ஜெபமாய் சித்தி நிலை பெற்றிருக்கும்…! என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.

1.ஞான முறுவல் கொள்கின்ற மனத்திற்குள் கோபம் ஏது…?
2.கோப குணம் தவிர்த்திட நந்தி ஞான முறுவல் கொள் என்பார்கள் சித்தர்கள்
3.உள்ளன்போடு உவந்து சினம் தவிர்க்கும் உபாயம் விருப்பமோடு செயல் நிலை ஆக்கிடவே இதை உரைக்கின்றோம்.

தியானப் பயிற்சி

1.எம்மை நேரடியாக நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
2.இருக்கும் இடத்திலிருந்து எண்ணினாலே என்னுடைய (ஞானகுரு) அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

அந்தப் பயிற்சியைத் தான் இங்கே கொடுக்கின்றேன்.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். அம்மா அப்பா தான் முதல் தெய்வங்கள் அவர்களால் தான் நாம் உடல் பெற்றோம். அவர்களின் நல்லாசி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று இந்தப் பேருண்மைகளை எல்லாம் எனக்கு உணர்த்தியது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கண்ணிலே ஏங்கி நேராக உற்றுப் பார்த்துத் தியானியுங்கள்.

இப்போது கண் வழியாக அதை இழுத்துக் கவர்கின்றீர்கள் அடுத்து கண்ணின் நினைவு புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அங்கே காந்தம் இருக்கின்றது அதிலே நாம் துருவ நட்சத்திரத்தினைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம்.

ஆனால் வழக்கமாக நாம் மூக்கு வழியாகச் சுவாசிக்கின்றோம். நுகர்கின்றோம் உயிரிலே மோதி அந்த உணர்ச்சிகள் நம்மைத் தெரிய வைக்கின்றது… இயக்குகின்றது.

ஆனால் அதை முதலில் சொன்ன முறைப்படி புருவ மத்தி வழியாகத் துருவ நட்சத்திரத்தை அந்தக் காந்தத்தின் வழி கவரும் பொழுது பிற தீமைகள் சுவாசத்தின் வழி உள்ளே புகாதபடி துருவ நட்சத்திரத்தில் உணர்வுகள் அடைப்பாகி விடுகிறது.

ஆகவே தீமைகள் நமக்குள் போகாது நாம் தடைப்படுத்தி விடுகின்றோம்.

ஆனால் உள்ளே சென்றுவிட்டால் இரண்யன். நல்ல அணுக்களை அது கொன்றுவிடும் அது வேதனை கடும் நஞ்சு அதை நாம் குரு காட்டிய வழியில் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தினை கண்களிலே நினைத்து இங்கே கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா கண்ணைத் திறந்தே தியானியுங்கள். பின் கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் என்று அப்படியே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கிக் கொண்டே இருங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த இரத்தங்களில் அதனைக் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்

சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் கலக்க வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று செலுத்தி விட்டு அடுத்து அந்த இரத்தம் போகும் பாதைகள் அனைத்துமே அந்த இரத்தங்கள் முழுவதுமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

அது உடல் முழுவதும் சுழன்று எல்லா உறுப்புகளுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய எல்லா ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

நாம் மற்றவருடன் பிரியமாக பழகி அன்புடன் இருந்து அவர் திடீர் இறந்து விட்டால் நம் மீது பாசமாக இருந்தால் அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் இருக்கும்.

அவருடைய கெட்டதெல்லாம் இரத்தத்தில் இருந்து கொண்டு நமக்கு அது தொல்லைப்படுத்தும் நிலையாக வரும். நம்முடைய சிந்தனைகளைக் குறைக்கும். அது உடலுக்குள் வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அதனால் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அவசியம் நாம் அந்த நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பரவ வேண்டும் என்று நினைவைச் செலுத்த வேண்டும்.

அடுத்து இந்த வாயு மண்டலங்கள் அதாவது அந்த நரம்பு மண்டலங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அதில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்துங்கள்.

நாம் சர்வ காலம் கண்களில் எத்தனையோ உற்றுப் பார்க்கின்றோம். எக்ஸ்ரே எப்படி ஊடுருவிச் செயல்படுத்துகின்றதோ அது போன்று கண்களால் பார்த்த்து எலும்புக்குள் ஊனாக இருக்கும்.

நான் எதையெல்லாம் பார்க்கின்றோமோ வரிசையில் அங்கே பதிவாக்கிக் கொண்டே இருக்கும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து அதில் இருக்கக்கூடிய ஊனில் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

மீண்டும் புருவ மத்திக்குக் கண்ணின் நினைவைக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே நினைவைச் செலுத்துங்கள்.

இப்படியே மாற்றி மாற்றி எல்லா இடங்களுக்கும் நினைவைச் செலுத்தி பல முறை தியானியுங்கள்.
1.இப்படிச் செய்ய இது என்ன காசா பணமா…? ஒன்றும் இல்லை.
2.உங்கள் நினைவு மட்டும் தான். இதைச் செய்வதற்கு என்ன வந்தது…?
3.சிறிது நாளைக்குப் பழகிக் கொண்டால் தன்னாலே வேலை செய்யும்.

நல்லது திட்டியவனையோ அல்லது உடல்நிலை பற்றிய வேதனையோ திரும்பத் திரும்ப எண்ணுவதற்குப் பதிலாக அருளைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலே போதுமானது.

ஏனென்றால் இனி வரக்கூடிய காலங்கள் மிக விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடியவர்களாக நீங்கள் வரவேண்டும்… அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு பல வகைகளிலும் எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

கடவுளின் அவதாரம் வராக அவதாரம் பன்றி எப்படிச் சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்ல மணத்தை நுகர்கின்றது.

அதே போன்று நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அதன் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து எத்தகைய விஷத்தன்மையாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு உங்கள் சிந்தனை கலையாது உங்கள் வாழ்க்கையை அருள் ஞானத்தை போதிக்கும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

1.இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தோடு இணைய வேண்டும்
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று அதைப் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேசம்.

“அருள் வழியில் வாழ்ந்து காட்டுவோம்…” என்ற உறுதி கொள்ளுங்களப்பா…!

வாழும் வாழ்க்கையின் இயல்(பு) கொண்டு… வானியல் அறிந்திடும் செயலுறும் எண்ணத்தின் உயர்வால்… ஞானத்தின் சுடர்தல் தெளியும்.

வாழ்வேனும் சமுத்திரம் கண்டாய்…!
1.ஞானச்சுடர் வாழ்வியல் ஆக்கும் தெளிவின் வழியை அறிவுறுத்தி
2.எது செயல்படும் ஆக்கமோ அவ்வழி நிற்றல் “மனத்தின் திறன்” என்றே
3.செயலுறும் செயல்பாட்டின் வேகம் “வானியல் (விண்ணுலக ஆற்றல்) பெற்றிடும் விவேகத்தில் நிலைநிற்றல் வேண்டும்…”

பால்வெளியின் உவர் அமில அடர்வு செயலுறும் தன்மைகள் கண்டோம். நீரமில சக்தியில் கலந்திட்ட அந்நிலை உருக்கோலம் கொண்டிட்ட செயலில் மாமகான்கள் தத்துவங்களாகக் காட்டியதில் உருக்கோலம் கொண்ட உவர் அமில அடர்வு நீரின் ஆழம் காணச் சென்றதாக உரைப்பதும் உண்டு.

பக்தியின் தொடர் காட்டும் செயலில் பெற்று உயர்வது எக்காலம்…?

உயிரணுவைச் சுவாசமாகச் சூழ்ந்திட்ட நல் உணர்வெனும் ஆத்ம முலாம் சுடர்ந்திடும் செயலுக்கு எல்லாமே எண்ணம் தான்.

ஞானத்தின் செயலுக்குக் காட்டிடும் வேகம் உணர்வெண்ணத்தின் மாற்றத்தில் முன்பு கூறிட்ட “அதே விவேகம்” தியானத்தின் வழியாக மெய்ஞானச் சுடர் எனும் விழுமிய வேதப் பொருளாக நன்நிலையை உயிர் ஆத்ம சக்தி பெற்று வளர்த்து உயர்த்திக் காட்டும்.

மாமகான்கள் உரைத்திட்ட நல்ல நெறிகள் வெறும் போதனை மாத்திரம் அன்று. வாழ்க்கையின் நிலைகாட்டி உயர் ஞான வலுவில் மெய்ஞானியாய் வாழும் வகை காட்டியதே போதனாமூர்த்திகளான அப்போதினிகள் கைக்கொண்ட செயல் நிலையை “எளிமையாக உரைக்கின்றோம்…”

வாழ்க்கையே மணல் குன்று…!
1.ஏற சறுக்கும் மணல் குன்று…
2.சாணுக்கு முழம் சறுக்கும் என்று மெய்ஞானியர் சுட்டிக்காட்டுவதில்
3.மெய்ஞானத்தின் விழிப்பு விவேகமாகத் தன்னைத்தான் வளர்த்துக் கொண்டிடவே இந்த எளிய தியான முறை.

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?
1.”வாழ்ந்து காட்டுவோம்…” என்ற மனதின் உறுதிக்கு
2.அந்தப் புறச்சான்றுகளைக் காட்டினோமப்பா.

அகத்தின் உயர்வு கூட்டும் அதே மன உறுதி தான் தியான நிலையில் ஆத்ம பலம் கூட்ட எண்ணுகின்றோம். பிறப்பறுக்கும் உயர்வாம் ஆத்ம கலப்பாக எண்ணுகின்றோம்.
1.உணர்வலைகள் தொழில்படும் ஜீவ சரீர பிம்பத்தில்
2.“சகல உயிரணுக்களும்… சக்தியின் வலு கூட்டிக் கொள்ள எண்ணுகின்றோம்….”

சித்தன் நிலையைப் பெறச் செய்யும்… சித்தத்தின் சிந்தனா சக்தி குவிக்கப் பெறும் ஓர்முக நினைவோட்ட குணத்தன்மைகளில்… “பிடர்தல்” எனும் எண்ணத்தின் பாங்கு வான் இயல்பு காட்டிடும் முறைகள் முறையாக உரைப்போம்.

November 15, 2023

நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!

நம் உடல் ஒரு கோவில்… எதன் உணர்வை நாம் எண்ணுகின்றோமோ அது இறையாகின்றது. உணர்வின் தன்மை இறையான பின் மீண்டும் அதை எண்ணும் பொழுது இறையின் உணர்வு செயலாகும் பொழுது அதுவே தெய்வமாகின்றது.

1.வேதனை என்ற உணர்வாகும் பொழுது வேதனைப்படுத்தும் செயல்களையே சேர்த்து…
2.வேதனைப்படுத்தும் தெய்வமாக நமக்குள் குடிகொள்கின்றது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா. இதற்காகத்தான் ஞானிகள் கோவிலை அமைத்தது.

நமக்குள் இருக்கக்கூடிய நூறு உணர்வுகளை ஆலயமாக மாற்றுகின்றனர். கோவிலுக்குச் சென்ற பின் இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று சொல்கின்றனர்.

நமக்குள் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது இங்கே அசுரனாக மாறி விடுகின்றது. பத்துத் தலை இராவணன் என்ன செய்கின்றான்…? சீதாவைச் சிறைப் பிடித்து விடுகின்றான்.

இப்பொழுது கோவிலுக்கு சென்று நீங்கள் சந்தோஷமாக இருங்கள் பார்க்கலாம். என்னிடம் (ஞானகுரு) வருவோர்களை இங்கே நல்லதை எண்ணிக் கேட்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்… என் தொழில் நஷ்டமாகிக் கொண்டே போகின்றது… எல்லாம் கஷ்டமாக இருக்கின்றது என்று இதைத்தான் சொல்கின்றார்களே தவிர…
1.சீதா என்ற அந்தச் சந்தோஷத்தை ஏதாவது நீங்கள் இயக்குகிறீர்களா…?
2.கஷ்டத்தை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றீர்கள்.

எவ்வளவுதான் நான் சொல்லிப் பார்த்தாலும்… இங்கே பிரசாதம் கொடுக்கும் போது பாருங்கள். என் பையன் இப்படி இருக்கின்றான். எல்லாம் நான் நல்லதைத் தான் செய்தேன் ஆனால் என் குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது என்று தான் சொல்கிறார்கள்.
1.கஷ்டத்தை நீக்குவதற்குச் சக்தி கொடுங்கள்…
2.கஷ்டத்தை நீக்கக்கூடிய வழியைக் கொடுங்கள்… என்று யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

கீதையிலே சொன்னது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்

கஷ்டம் என்ற உணர்வு வரும் பொழுது கண்ணின் நினைவு பையனிடத்தில் செல்கின்றது. நான் சொல்லும் நல்ல எண்ணத்திற்கு இங்கே வருவதில்லை… விலக்கி விட்டு விடுகிறது. அப்பொழுது வேதனையைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்

கோவிலிலே சிலையைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோம்… “இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…” என்ற எண்ணத்தை எண்ணும் பொழுது…
1.நல்லதைச் செய்யக்கூடிய அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் அந்த நன்மை பெற வேண்டும்
3.இந்தக் கோவிலுக்கு வரும் குடும்பம் எல்லாம் அந்த நல்ல நிலை பெற வேண்டும் என்று எண்ணினால்
4.நம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் அதுவாக (நல்லதாக) ஆகின்றோம்.

எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் கண்ணிலே காட்டுகின்றது பையனுடைய எண்ணங்களை வைத்துக் கண்ணை அங்கே கொண்டு போய் வைத்துவிட்டுச் சிலையை பார்த்தால் என்ன நடக்கும்…?

அழுகை தான் வரும்

அப்பொழுது நாம் அதுவாக ஆகின்றோம்… மீண்டும் நாம் வேதனையைத் தான் சேர்க்க முடிகிறதே தவிர நல்லதை நாம் பெற முடிகிறதா…? கோவிலை நாம் யாராவது மதிக்கின்றோமா…?

நமக்குள் சூட்சமாக இருப்பதை அறிந்து… அதை எவ்வாறு சீராகச் செயல்படுத்த வேண்டும்…? என்று ஞானிகள் காரணப் பெயரை வைத்து ஸ்தல புராணங்களைக் காட்டி “இந்தக் குணத்தைச் சுவாசித்தால் உனக்கு அது நன்மை செய்யும்…! என்று சொல்கிறார்கள்.

நன்மை பெறுவதற்காகச் சிலையை வடித்துக் காட்டியுள்ளார்கள். பக்தி என்றால் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் கடன் கொடுத்திருப்போம். அவருக்கு நல்ல வருமானம் வேண்டும்… திருப்பிக் கொடுக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பணம் வந்து சேரும்.

ஆனால் மாறாக நாம் எப்படி எண்ணுவோம்…?

கடன் கொடுத்தேன்…! பாவிப்பயல் என்னை ஏமாற்றுகின்றானே… மோசம் செய்கின்றானே…! என்று கோவிலில் வந்து இப்படிச் சொன்னால் என்ன ஆகும்…?

யாருக்கு நாம் கடன் கொடுத்தோமோ… அவனை மேலே எழுந்திருக்க விடாதபடி… சம்பாதிக்க விடாதபடி… கடனைத் திருப்பிக் கட்ட முடியாதபடி… நம்முடைய எண்ணமே அங்கே தடையாகிறது.

அதுதான் நடக்கின்றது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றது அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது. உங்களால் வாங்க முடிகிறதா…?

இது எல்லாம் கண்ணின் இயக்கங்களைப் பற்றி…
1.நாம் நுகரும் உணர்வுகள் ஆதன் வழி வாழ்க்கை எப்படி நடக்கின்றது…? என்பதை
2.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

November 14, 2023

சரியான நேரத்தில் நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி போவதன் காரணம் என்ன…?

அன்றைக்கு எனக்கு வரம் கொடுத்தீர்கள் அல்லவா… அந்த வரத்தை இப்பொழுது கேட்கின்றேன். என்று கைகேயி தசரதனிடம் கேட்கின்றது அந்த வரத்தை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் உலகம் உங்களைத்தான் தூற்றும். சத்தியத்துக்கு விரோதமானவர் என்று உங்களைத் தான் சொல்லும் என்று சத்தியம் பேசுகிறது.

தசரதன் பல வகைகளிலும் யோசிக்கின்றான் என்ன செய்வது என்று…!

வரத்தைக் கொடுத்த பின் இப்படிக் கேட்கின்றாளே…! இராமனுக்குப் பட்டம் சூட்ட முடியாது போகின்றதே…! என்ற வேதனை அதிகரிக்கிறது.
1.ஆனால் அன்று வெற்றி பெற உதவியாக இருந்தது.. அப்போது மிகவும் சந்தோஷப்பட்டான்.
2.தன் உடலிலே இருந்து அது என்ன செய்கின்றது…?
3.தன் மகனுக்கே (பரதனுக்கு) பட்டம் சூட்ட வேண்டும் என்று அதன்படி அங்கே வேதனையைத் தான் உருவாக்குகின்றது.

தசரதன் பல வகைகளிலும் சிந்திக்கின்றான். அவனால் ஒன்றும் பேச முடியவில்லை… மௌனியாகின்றான்.

இதைப் போன்று தான் உங்கள் உடலில் வெறுப்பும் வேதனையும் அதிகமாகி விட்டால்
1.உங்களால் ஏதாவது பேச முடிகின்றதா…? நல்லதை ஏதாவது செயல்படுத்த முடிகின்றதா…?
2.வேதனை உணர்வுகள் எடுக்கப்படும் பொழுது நல்லதைச் செயல்படுத்த முடிகின்றதா..?
3.வேதனை என்ற உணர்வு வந்து விட்டாலே நல்ல பட்டாடைகளை… புதுத் துணிகளைக் கொடுத்து அணியச் சொன்னால் முடியுமா…?
4.அதை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா…? இல்லை.

உடலுக்குள் வேதனை அதிகமான பின் நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை. பல உணர்வுகள் நமக்குள் வந்து புலஸ்தியர்… புலனறிவைக் கொண்டு வரப்படும் பொழுது சந்தோசம் என்ற நிலையை உருவாக்க முடியவில்லை.

தன்னால் செயல்படுத்த முடியவில்லையே…! என்ற அந்த வேதனை உணர்வு தான் முன்னணியில் வருகின்றது.
1.அங்கே வேதனைப்படுத்தினான் முதலிலே
2.அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்தான்… ஏனென்றால் அதை இச்சைப் பட்டான்
3.மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்று பல கொலைகளைச் செய்தான்… அதை ரசித்தான்
4.அந்த உணர்வின் தன்மை பிரம்மகுருவாக ஆகி அதன் உணர்வே இங்கே செயல்படுத்துகின்றது.
5.தன் உடலுக்குள் இருந்து நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை…!

அவன் எண்ணியதை அங்கே செயல்படுத்த முடிகின்றதா…? அதற்கு மாறாகக் கைகேயி என்ன செய்கின்றாள்…?

இராமனைக் கூப்பிட்டு… “உன் தந்தை சொல்கின்றார்… நீ காட்டிற்குச் செல்… துறவறம் பூண்டு செல்…” என்று சொல்கிறது.

அதன்படி “தந்தை சொல்லிவிட்டார்” என்று தாய் என்ற நிலையில் தட்டாது அவன் சென்று விடுகின்றான்.

அவன் காட்டிற்குச் சென்ற பின் கைகேயி தன் மகன் பரதனைக் கூப்பிட்டு அனுப்புகின்றாள். அவனை வரும்படி செய்தபின் அங்கிருந்து வருகின்றான்.

நகருக்குள் வந்தபின் நாடே சூனியமாக இருக்கின்றது. ஒருவரும் பேசவில்லை… ஊமையாக மௌனமாக இருக்கின்றார்கள் சோர்வாக இருக்கின்றார்கள்…? ஏன்…? என்று வினாக்களை எழுப்புகின்றான்.

ஒருவரும் வாய் திறக்கவில்லை ஏனென்றால் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னால்… யார் செய்தது…? என்று சொல்லும் போது அதனால் பெரும் வெறுப்பாக வளர்ந்து விடும்…! என்று குற்றத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை.

எல்லோரும் அதனால் மௌனமாக இருக்கின்றார்கள்.

இராமனின் தாயாரிடம் கேட்டால் அதுவும் மௌனமாக இருக்கின்றது. மற்ற உறவினர்களைக் கேட்டாலும் அவர்களும் மௌனமாக இருந்து விட்டார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. மக்களிடத்திலோ சேனாதிபதிகளிடமோ யாரிடம் கேட்டாலும் எல்லாருமே மௌனமாக இருக்கின்றார்கள்.

கடைசியில் தன் தாயிடமே கேட்கலாம் என்று வருகின்றான்.

அப்பொழுதுதான் தாய் சொல்கின்றது. அன்று போர் செய்யப்படும் பொழுது எனக்கு வாக்குகளைக் கொடுத்தார். அந்த வாக்கின்படி தான் கேட்டேன் அவர் கொடுத்தார் கொடுத்த பின் வேதனையால் அவர் மடிந்து விட்டார்.

நான் தவறு செய்யவில்லை..!

இராமனுக்குப் பட்டாபிஷேகம் சூட்ட முடியவில்லை என்று ஏக்கத்திலே இறந்து விட்டார். உனக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்ற நிலை வந்து விட்டது ஆகவே நீ இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்…! என்று தாய் சொல்கின்றது.

அப்போதுதான் பரதன் சொல்லுகின்றான் உன் தாயார் வீட்டிலும் இது தான் நடந்தது…!

யாரிடத்தில் அந்த வேதனை (முதலில்) உருவாகின்றதோ அது தாயாகின்றது. அதன் உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? என்று உணர்வின் எண்ணங்கள் எதன் வலுவோ அதன் வழி எப்படி இயக்குகின்றது…? என்பதை இராமாயணத்தில் தெளிவாக காட்டுகின்றது.

1.உன் தாயார் வீட்டில் இதே தான் நடந்தது.
2.அதனின் மகளாக இருந்து நீ இங்கே வந்ததனால் எங்கள் சாம்ராஜ்யத்தையும் நீ சூனியம் ஆகிவிட்டாய்
3.அன்றே உன்னைக் கொன்றிருந்தால் இந்த நிகழ்ச்சிகள் இங்கே நடந்திருக்காது.

அதாவது எந்தத் தீமை என்ற நிலையை இச்சைப்படுகின்றோமோ அன்றே நாம் அதை அழித்திருத்தல் வேண்டும் என்று இங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய தகுதி பெற்ற நாம்
1.அந்த உண்மையின் உணர்வை எடுக்காதபடி உடலுக்குள் தீமை புகுந்து விட்டால்
2.அது விஷம் என்ற நிலையில் அதனுடைய கடுமைகள் எப்படிச் செயல்படுகின்றது…? என்ற
3.உணர்வின் இயக்கத்தின் வலிமையை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது

“ஈஸ்வர அனுபூதி…” பெற வேண்டுமப்பா…!

உலக நடைமுறை வாழ்க்கையினை உணர்ந்து செல்லும் வழி… நிதான நடைமுறையைக் குறிக்கும்.
1.ஊருடன் ஒன்றி வாழவும் வேண்டும்
2.நாம் கொள்ளும் “ஈஸ்வர அனுபூதியால்” பெற்று வளர்த்துக் கொண்டிட்ட “தனித்துவ மெய்ஞானச் சுடராக”
3.மற்றவர்களுக்கு வழிகாட்டிடவும் வேண்டும்.

பேரருள் ஜோதியாக நம் உயிர் ஆத்ம சக்தியை வலு கூட்டிக் கொள்வதின் “பயன் இது…” என்று அன்பு மகரிஷிகளும் இயற்கையில் ஒன்றி வழி நடத்திடும் விதம்தான் என்னப்பா…?

ஆசையுடன் வாழும் மேன்மையையே ஆரம்ப நிலையிலிருந்தே உரைத்துக் கொண்டு வருகின்றோம்.

1.வாழ்வேனும் சாகரத்தில் அலைகள் ஓய்ந்தபின்
2.படகில் பயணம் செய்ய நினைக்கின்ற மனிதன் “பித்து நிலை பெற்றவனப்பா…”

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற எத்தனையோ விஷமான ஜீவஜந்துக்களும் அனைத்தும் உள்ளிட்ட சாகரம் தான் மனிதன் வாழுகின்ற வாழ்க்கையின் நிலை.

தத்துவம் உரைத்திட நான் வரவில்லை…!

வள்ளுவச் சித்தன் உரையே “பிறவிப் பெருங்கடல்… அதனைக் கடந்திடும் காப்பெனும் கவசம் ஈஸ்வர தியான வழிமுறை…!” அதுவே ஒளி தந்து ஒளியாக்கும் செயலுறும் நிலை.

நூல் வழியில் அதை அறிந்து கொண்டவனப்பா நீ.

நீர்க்கரை ஓரம் வேரோடு வளர்ந்திட்ட விருட்சம் புதுப்புனலில் கரை கரைந்து தலை சாய்த்த விதமும்… நீர்க்கரை கொடி நிலை நின்ற விதமே…
1.இவ்வாழ்வின் சாதுரிய வாழ்க்கையின் நடைமுறை என்பதிலும்
2.ஜெபத்தின் வழி தியானமாகத் தன் உயர்வைத் தான் கூட்டி…
3.கிளர்ந்தெழும் ஐந்தடக்கிச் (அதி ஆசை நிலை விடுத்தல்) செயல்படும் காலத்தே
4.சிந்தனையில் உணர்ந்திட்ட “சித்தன் நிலை பெற்றிடும் வாய்ப்பு…”

“உவர் அமிலம்” என்பது மூலகப் பொருளாக பால்வெளியின் தன்மையாக மூலக்கூறுகள் இணைவதும் அந்த உவர் அமில அடர்வு நம் பூமியின் வட தென் துருவங்களாக ஈர்ப்பில் செயலுறும் குளிர்விப்பாக… அம் மூலக அடர்வுகள் நீர் சக்தியின் முத்தொழில் தன்மைகளில் ஒன்றாகச் செயலுறுகின்றது.

திடம் கொண்டிட்ட நீர் சக்தி (பனிப்பாறைகள்) திரவ நிலை பெற்றிடும் நீராக செயலுறுங்கால்… ஈர்ப்பின் செயலில் உவர் அமிலம் நீரினுள் கரைந்து அடர்ந்து விட்டால்… உவர் அமில அடர்வில் மிதக்கும் உடல் நீர் மேல்.

November 13, 2023

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் அணுக்களுக்குள் இணைக்கும் முறை

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் புருவ மத்தியில் இப்படி எண்ணி விட்டால்… இதற்கு முன்னாடி நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளுக்கு ஆகாரம் போகாதபடி தடுக்கின்றோம்.

அருள் ஞானத்தின் உணர்வுகளை உயிர் வழி நமக்குள் பரப்புகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரிலே மோதும் போது ஒளிக்கற்றைகள் தோன்றும்.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப் போன்று
3.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரப்படும் பொழுது… அது நமக்குள்
4.அறியாமை என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையை உருவாக்கும்.

உங்கள் நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி… உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

எப்படி ஊசி மூலம் மருந்தை எடுத்து உடலுக்குள் செலுத்திய உடனே இரத்தங்கள் முழுவதும் அந்த மருந்து பரவுகின்றதோ அதேபோன்று
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவு கொண்டு உள்ளே செலுத்துங்கள்.

எங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறும்படியாகக் கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

உறுப்புகளை எவ்வளவு தூரம் என்ன முடியுமோ உறுப்புகளில் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏங்கி நினைவைச் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் இப்பொழுது புது விதமான உணர்ச்சிகள் தோன்றும்… அதை உணரலாம்.
1.தீமையான அணுக்கள் இருந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தி அதிலே படும் பொழுது அது பலவீனமடையும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

உடல் உறுப்புகளில் எத்தகைய தீய அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது வலு இழக்கின்றது.

கண்ணின் நினைவை அவ்வாறு செலுத்தப்படும் பொழுது…
1.அந்த ஜீவ அணுவின் காந்தமும் உங்களுடைய உணர்வின் நினைவும் செலுத்தப்படும் பொழுது
2.எளிதில் உங்கள் உடல் உறுப்புகளுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.

ஒரு நல்ல மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் உருவாகும்.

தியானம் எடுப்பவர்களுக்கு வேக குணம் ஆகாத ஒன்று…!

மண்ணிற்குள் மறைந்திருக்கின்றது கிழங்கு. பசியின் வேகம் இருந்தாலும் அந்தக் கிழங்கினை அகழ்ந்து எடுக்கின்ற செயல் மிருக இனங்களில் ஒன்றான காட்டுப்பன்றி மூர்க்க குணம் கொண்டே வளர்ந்தது அதன் செயல்.

பூமிக்குள் மறைந்து கிடக்கும் கிழங்கை அறிந்து கொண்டு தன் கொம்புகளால் மண்ணை அகழ்ந்தது அந்தக் கிழங்கைப் பற்றி எடுக்கின்றது. காரணம் பசியின் வேகம்…!

காட்டுத் தீ பற்றி எரிகின்றது. பிறகு பெய்கின்ற மழைக்குப் பின் மண்ணிற்குள் மறைந்து கிடக்கும் கிழங்கு துளிர்விட்டுத் தழைத்து வளர்கின்றது.

பெரும் நெருப்பாகப் பற்றி எரிகின்ற காட்டுத் தீ… மரம் செடி கொடிகள் பசும்தளிர்கள் அனைத்தையும் பஸ்பமாக்கிப் பின் ஒருவாறு அடங்குகின்றது.

காய்ந்த மரம் பற்றி எரிகின்ற பொழுது பசுமை நிறைந்த மரங்களையும் தன் வெப்ப நாக்குகள் வெளிப்படுத்திடும் உஷ்ணத்தினால் தகித்து… பின் அதுவும் கனன்று பற்றிக் கொள்கின்றது.

அந்த வனத்திற்குள் வாழ்கின்ற கொடிய ஜந்துக்கள் அப்பொழுது வாழ்வது எங்கே…?

மண்ணிற்குள் மறைந்த கிழங்கை அகழ்ந்து எடுத்திடும் காட்டுப்பன்றியானது பசியின் வேகத்தால் கிழங்கினை அறிந்து கொள்ளும் அறிவு பெற்றது தான்.

இருந்தாலும்…
1.காட்டுத் தீயின் பெரும் நெருப்பில்… பன்றி தன்னைக் காத்துக் கொள்ள ஓடிடும் வேகத்தைக் காட்டிலும் நெருப்பின் வேகம் அதிகம்.
2.மூர்க்கத்தனமான அறிவு அங்கே செயல்படாது ஒழிந்தது.
3.குணங்கள் அறிவுறுத்தும் தன்மைகள் அனைத்திலுமே மனத்தின் பக்குவம் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

திருமுல்லைவாயில் என்னும் இடத்தில் பௌர்ணிகர் ஒருவர் காட்டு வழிப் பாதையில் தாகத்திற்கு அருந்த நீர் கிடைத்திடாத வனப்பகுதியில் நீருக்காக அலைந்து ஏங்கி ஓடிய பொழுது பற்றிக்கொண்ட காட்டுத் தீயானது விரட்ட… ஓடி அலைந்து அவருடைய உயிர் நீங்கப் பெறும் தருவாயில் “வேதாள மாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டார்...!”

அவர் அன்று ஒலித்த ஞானத்தின் சுடர்தல்… இன்றும் இந்தக் காற்று மண்டலத்தில் ஓடி உலவுகின்ற கருத்தின் கோர்வைகளப்பா.
1.அப்பொருள்களையே இங்கே உரைக்கின்றோம்…
2.உரைத்துக்கொண்டே வருகின்றோம்.

November 12, 2023

அசுர குணங்களிலிருந்து நாம் மீளக்கூடிய நன்னாள் தான் தீப ஒளித் திருநாள்

தீப ஒளி என்றால் ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் மற்ற தன் அருகில் இருக்கக்கூடிய பொருள்களை எல்லாம் காணச் செய்கின்றது.

இதே போன்று நமது உயிர் நமக்குள் ஒளியாக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தை இந்த ஒளி கொண்டு அந்த உணர்வின் குணத்தையும் மணத்தையும்… “உணரும் வழியில் - மணத்தின் வழியில்” நமக்கு உணர்த்துகின்றது… அறியச் செய்கின்றது.

அதாவது
1.உணர்வின் வழியில் உணர்த்துகின்றது
2.மணத்தின் நிலையில் அறியச் செய்கின்றது.

நமது உயிர் நமக்குள் தீபமாக இருந்து… சுடராக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அப்பொருளை நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்வின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஊட்டி
1.உணர்வால் நம்மை அறியச் செய்கின்றது
2.மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.

இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிதல் வேண்டும் அதை நினைவுபடுத்தும் நன்னாள்தான் தீப ஒளி நன்னாள்

அதே சமயத்தில் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… கூட்டுத் தியானங்களிலிருந்து மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய நன்னாளாக நாம் அமைத்திடல் வேண்டும்.

இன்றைய நாள்… எப்படி நாம் புத்தாடையைப் போர்த்தி அணிந்து மகிழ்கின்றோமோ… இதே போன்று தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் நல்ல குணத்துடன் இணைத்து… இந்த வாழ்க்கையில் அந்த தூய்மைப்படுத்தும் உணர்வினை…
1.அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் தெளிந்த மனதுடன் தெளிந்திடும் சக்தியாகப் போர்த்தச் செய்வது தான்
2.இந்த உபதேசமும் அதன் வழியில் தியானத்தின் மூலம் பெறக் கூடிய சக்தியும்.

பகைமை உணர்வுகள்… பாசத்தால் கேட்டறிந்த பார்த்துணர்ந்த வேதனை உணர்வுகள்… சந்தர்ப்ப பேதத்தால் எடுத்துக் கொண்ட கொதித்தெழும் கோப உணர்வுகள்… இவையெல்லாம் அசுர குணங்கள் கொண்டது.

அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிகளை நாம் அனைவரும் ஒருக்கச் சேர்ந்து… ஏகோபித்து அந்தச் சக்தியைப் பெற்று… நம்மை அறியாது இயக்கும் அத்தகைய அசுர குணங்களிலிருந்து மீட்டிடும் நன்னாளாக நாம் நினைவு கொண்டு… அதனின் வலு துணை கொண்டு… அசுர குணங்கள் தாக்காது நம்மைப் பாதுகாத்து வரவேண்டும்.

எண்ணத்தில் உதயம் வேண்டுமப்பா…!

மண்ணினால் பாண்டங்கள் செய்கின்றான் கலைஞன். அந்தக் குயக்கலைஞன் பாண்டங்கள் வடித்திடும் பொழுது
1.தன்னுடைய ஆகாரத்திற்காகத்தான் அந்தத் தொழிலைச் செய்கின்றான் என்றாலும்
2.“மனக்கருவின் திருவை” (திருவை – பானை செய்யும் சக்கரம்) செய்தொழில் கலையாகச் சிறக்கச் செய்கின்றான்

(பானைகள்) குயக்கலங்கள் வடிவத்தில் சிறிதாக இருந்தாலும்… அந்த உருவம் தந்திடும் எண்ணத்தின் சிறப்பு… “எண்ணுவதால் கலத்திற்கும் சிறப்பு…!”

குயக்கலத்தின் சிறப்பை… செயலின் திறத்தை எண்ணுகின்ற மனம்… உயிர்த்தொகைகள் வடிவு எடுக்கின்ற எண்ணற்ற பிறவிகளில் மானிடப் பிறப்பே பகுத்தறியும் ஆற்றலின் வன்மையால் காணச் சிறப்பு எது…?

குரல் - உடல் என்றும்… குருமுனி என்றும் அழைக்கப் பெறுதலின் குரல் உடல் கொண்ட மனிதன் குருமுனிவன் ஆன விதம் என்ன…? குரல் உடல் பெற்ற சிறப்பு.

குயக்கலம் போல்…
1.குரல் உடல் பெற்றுக் கொண்டிட்ட மனிதன்… வளர்த்துக் கொண்டிட்ட விதம்
2.“காணாச் சிறப்பே கண்ணுறும்…” என்ற சொல்லுக்கொப்ப செய்தொழில் செய் திறத்தால் அமைவது என்னும் பாங்கில்
3.மெய்ஞானம் மெய்ஞான விழிப்பாகி… முகிழ்ந்த பின் மெய்ஞானச் சுடர் எனும் சுடர்தல் தன்மையாக
4.குரல் உடல் குருமுனியாகி… மாமகரிஷியாகி சப்தரிஷிகளுடன் கலந்து வாழ்ந்திடும் இயக்க நிலையை…
5.ஞானச் செல்வங்கள் அறிவால் அறிந்துணர்ந்து அதைப் பெற்று உயர்ந்திடவே அழைக்கின்றோம்.

சூரியன் தன் முகம் காட்டிய பின்பே உயிர்த்தொகைகள் உருக்காட்டுகின்றன (கண்ணுக்குப் புலப்படுவதாக) என்றால் என்னப்பா…?

சகல ஜீவன்களும்… ஜீவ ஆதார வித்துக்களும்… உயிரணுக்கள் தன்மையில் வளர்ந்த ஆத்மாக்களும்… ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உயர்நிலை வளர்ப்பாக்கும் மெய் ஒலி… ஒளியின் கூட்டுறவாம் இயக்க சுருதி நாத லய மறைபொருள் தன்மைகள் என பல பல உரைத்தாலும்
1.இருளுக்குப் பின் ஒளி கண்டு இருளினில் மறைந்த பொருள்கள் புலப்பட்டு
2.கட்புலனாய்க் (நமக்குத் தெரியக்கூடியதாக) காணப்பட்டு உணர்கின்றோம்.

ஆக… எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

1.உணர்கின்ற தன்மையே (தன்னைத் தான் அறிதல்) மனத்தின் ஒளியாகும்
2.அந்த ஒளியினால் கருக்கொள்ளும் மனத்தின் திரு ஆத்ம முலாமாகச் சுடர்ந்திடவே…
3.மறைபொருள் தன்மைகளை (மறைக்கப்பட்ட… மறைந்து போன… உண்மைகளை) இங்கே உணர்த்துகின்றோம்.

November 11, 2023

நீங்களும் என்னைப் போன்றே ஞானத்தின் வழியில் வளர்ந்து வர முடியும்

வான் வீதியில் ஜீவணுக்கள் உருவாகின்றது... “வைரஸ் உருவாகின்றது” என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர் இங்கிருந்து செயற்கைக்கோள்களை விண்ணிலே அனுப்பி அங்கே பார்க்கப்படும் பொழுது இதையெல்லாம் காணுகின்றார்கள்.

சுமார் நாற்பது வருடத்திற்கு முன்பு நான் (ஞானகுரு) ஏற்கனவே இதை எல்லாம் வெளிப்படுத்தி உள்ளேன்.

சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகளும்... இரண்டு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்களும் அந்த அலைகள் உள்ளே வந்தால்... வியாழன் கோளின் கதிரியக்கமும் அதனுடன் சேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை சேர்ந்து உயிர்த் துடிப்பாகி உயிரணுவாக உருவாகும் என்று ஏற்கனவே குரு வழியில் விளக்கம் கொடுத்துள்ளேன்.
1.துடிப்பாகும் பொழுது இயக்கமாகிறது...
2.அதனுடைய இயக்கத்தை “ஈசன்” என்று ஞானிகள் பெயரை வைத்துள்ளார்கள்.

ஆனால் வைரஸ் என்ற நிலையானால் எதன் உணர்வைக் கவர்ந்ததோ அதை வளர்க்கும் அந்த அணுவாகின்றது.

உயிரணு தோன்றுவது அங்கே பால்வெளி மண்டலத்தில். பூமி இழுத்துக் கொண்டால் மற்ற சத்தினைக் கவர்ந்து கொள்ளும் பொழுது வைரஸ்.

அதே சமயத்தில் பூமிக்குள் வந்தால் இதன் உணர்வை எடுத்து... அடுத்து இதைக் காட்டிலும் வலுவான தாவரங்களை எடுத்து உடலாக மாற்றிக் கொள்கிறது. கவர்ந்து கொண்ட தாவரத்தின் உணர்வுக்குத் தக்க புழுவாகவோ பூச்சியாவோ உருப் பெறுகின்றது

மனித உடலுக்குள் வந்தால் இந்த உணர்வை உட்கொள்ளும் விஷத்தன்மையாக மாறுகிறது. விஷத்தின் தன்மை எடுக்கப்படும் பொழுது (புதிய வைரஸ்கள்) எந்தெந்த நிலை ஆகின்றது...? என்பதை முன்பே நான் சொல்லி உள்ளேன்.

ஆனால் “ஆராய்ச்சியில் இன்று கண்டுபிடித்தார்கள்” என்று சொல்கின்றார்கள்.

ஏனென்றால் குருநாதர் காடுகளிலும் மேடுகளிலும் மலைகளிலும் பல இடங்களுக்கு என்னை அனுப்பி இந்தக் காற்று மண்டலத்தில் என்னென்ன இருக்கின்றது…? என்ன உருவாகின்றது…? என்று தெளிவாகக் காட்டினார்.

1.நான் கண்ட உண்மைகள் அதிகம்…
2.ஒரே தடவையில் அனைத்தையும் சொல்ல முடியாது
3.சிறுகச் சிறுக அதைச் சொல்லி வருகின்றேன்.
4.சிறுகச் சொன்னால்... சாமி சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.

ஒரு நாடாவிலே டேப் மூலம் பதிவாக்கி விட்டால் திருப்பி அதை இயக்கப்படும் பொழுது... எது பதிவோ அதை அப்படியே பேசுகின்றது.

அதே போன்றுதான் யாம் சொல்லக்கூடியதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் பதிவாக்கி விட்டால் சந்தர்ப்பம் உங்களுக்கு மீண்டும் அது (எம்முடைய பேச்சு) நினைவுக்கு வரும்.

ஒரு தீயவனைப் பார்த்தால் அவனுடைய உணர்வு வராதபடி தடுக்க வேண்டும் என்றால்... ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி... அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற புருவ மத்தியில் எண்ணிவிட்டால் அந்தத் தீய உணர்வு நமக்குள் புகாது தடுக்கப்படுகிறது.

அவ்வாறு தடுத்து நிறுத்தி விட்டு... அடுத்து நல்லதை எண்ணி நமக்குள் கலக்க வேண்டும். அதைச் செய்யப் பழக்கப்படுத்துவதற்குத் தான் இந்த உபதேசம்.

ஆக மொத்தம் நீங்கள் எல்லோருமே என்னை நம்புகின்றீர்கள்… இல்லையா…!
1.ஏன்..? நானும் மனிதன்தான்... நீங்களும் மனிதன் தான்…!
2.குரு வழியில் நான் எந்த உணர்வைப் பெற்றேனோ அதே உணர்வை நீங்களும் பெற்று ஏன் இதை வளர்த்துக் கொள்ளக் கூடாது…?

“சாமி செய்து தருவார்...” என்று மட்டும் எண்ணுகின்றீர்கள் ஆனால் “சாமி சொன்ன வழியினை...” நாம் பின்பற்றினோம் என்றால் நிச்சயம் அந்த நன்மை பெற முடியும் என்ற அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்.

என்னுடைய பார்வை என்னுடைய பேச்சு பிறருக்கு எப்படி நல்லதாகின்றதோ “அதே உணர்வை ஒத்து” நீங்களும் உங்கள் பார்வையால் உங்கள் பேச்சால் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதாக்கலாம் அல்லவா… தீமைகளைப் போக்கலாம் அல்லவா…!

பிறர்படும் கஷ்டங்களைப் பாசத்துடன் கேட்கின்றோம் அந்த உணர்வு வந்தபின் உடலுக்குள் வேதனையைத் தான் கொடுக்கின்றது நோயையும் உண்டாக்குகின்றது. இதைப் போன்ற தீமை உங்களுக்குள் வரக்கூடாது

1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எத்தனை வகையான வேதனைகள் வரலாம்.
2.அதை எல்லாம் தவிர்த்துக் கொள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால்
3.அந்த உணர்வின் தன்மை இங்கே நிறுத்தப்படுகின்றது.

இந்தப் பயிற்சியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

அன்னத்தின் மேல் அமர்ந்துள்ள “கலைமகளின் மறைபொருள்”

மொழி வளர்ச்சி உற்ற விதத்தில் எண்ணுகின்ற எண்ணத்தை வெளியிடும் விதமாக வளர்ந்து… முதிர்வின் மூலமே சப்தஸ்வர நாதலயமாக (இசை) மொழி அமைப்பின் கோர்வை கொண்டு… உள்ளக்கிடக்கையை வெளியிடும் ஏற்றதோர் அமைப்பாக்கி வெளியிடும்… கருத்தின் பாங்கை இரசனையாக உணர்ந்து கொண்ட இடம்… செயலை… யாதென உரைக்கலாம்…?

பாணன் இசைக்கின்றான்... அந்த இசைக் கலைஞன் ஸ்வர பேதமின்றி உள்ளன்போடு இசைக்கின்ற பொழுது “அந்த இசை... உயிரைப் பற்றி நிற்கின்றது…”

இப்படி உரைக்கின்ற பொருளின் உண்மை நிலையே…
1.உணர்வின் எண்ணத்தை மாற்றிக் கொண்டிடும் நிலையால்
2.தீமையான எண்ண குணங்களின் வசம் ஆட்படும் மனது
3.உயர் தன்மையின்… உயர்வு எண்ண நிலை பெற்றிட முடியாது.

நற்குணத் தன்மைகளின் செயல்பாட்டில் “தெய்வீக இசை...” உடல் கடந்து “உயிரைத் தொடுகின்றது” என்ற சொல்லில் ஈர்த்துக் கொண்டிடும் குணச் சிறப்பு விளங்கும்.

மோகத்தின் பால் சிக்குண்ட மனம்...
1.அக்கணையால் தாக்கப் பெற்று… அந்த மோகக் கனலால் தகிக்கப் பெற்று
2.ஆத்ம நிலையே அதனால் தேய்ந்துவிடும் நிலைக்குச் சென்று விடுகிறது.

அதே சமயத்தில் இந்தப் பேருண்மையை உணர்ந்து கொண்டு செயல்படுகின்ற அறிவின் ஆற்றலாக... மோக குணத்தை விலக்கிக் கொள்ள வேண்டிய ஆகார ஜெப ஆற்றலை அருந்துவதே... சித்தன் சுட்டிக்காட்டிய “அன்னம்”

1.மெய் ஞான விழிப்பைச் செயல்படுத்திடும் அறிவாகிய அன்னம்
2.தீதெண்ண குணத்தன்மைகள் விலக்கி… நற்குணத் தன்மைகள் சுரந்திடும் ஈர்ப்பின் அமுதத்தை அருந்த வேண்டிய செயலையே
3.பாலுடன் கலந்த நீரை விலக்கிப் “பாலை மட்டும் அருந்தும் அன்னம்” என்று உரைக்கப்பட்டது

அத்தகைய பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட அறிவாகிய “அன்னத்தின் மேல் பிரம்மனுடன் சரஸ்வதியாகக் காட்டப்பட்டது மறைபொருள்…”

அந்த நிலையே சிவ சக்தியின் கலப்பாக... ஓங்கார நாதத் தொனியாக... “நாதத்தின் தலைவியாம் கலைமகள்...” பிரம்மத்துடன் கலந்து செயல்படும் சக்தியாக... ஓ…ம் என்ற ஓங்கார நாதம் கேட்பது எங்கே...?

ஊன் உயிர் கலந்திட்ட ஒன்றிய மனத்தின் செயல் தன்மையாக…
1.நாம் உரைக்கின்ற தியானத்தின் வழியாகக் கடைப்பிடிக்கும் ஞானச் செல்வங்கள்
2.அந்த ஓ…ம் என்ற ஓசை கேட்கும் நிலை அடைவர்… மெய்ஞானச் சுடராக விளங்குவர்.

November 10, 2023

மகரிஷிகளின் செயலை அறிந்து… “அவர்கள் வழி செயல்பட முயல்வோர் முயற்சிக்கட்டும்”

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலால்… தன்னை வளர்த்துக் கொண்டிடும் “ஒலி மின் நுண்காந்தப் புலமாய்”
1.தனக்குள் ஆட்டுவிக்கும் சக்தியைத் தன்னை ஆட்கொண்ட “ஈஸ்வரரின் அருள்” என்றே உரைக்கின்றாய் அல்லவா.
2.அந்த வார்ப்பினைக் காத்துக் கொண்டிருக்கும் செயலில் “காட்டும் உறுதி”
2.சகல மகரிஷிகளினாலும் அன்பு சப்தரிஷிகளினாலும் அருள் நோக்கால் கணிக்கப்படுகின்ற செயலை அறிந்து கொண்டே
3.இத்தியான வழியில் பெற்றிடும் பக்குவத்தில் பெற்று வளர்த்திட “முயல்வோர்கள் முயற்சிக்கட்டும்…!”

“ஈர்ப்பின் கனி” ஈர்த்துக் கொண்டிடும் செயல் பற்றிக் கூறியவை போல் “விளத்தின் கனி” பற்றி அறிந்திடும் ஆக்கம் கூறுவேன்.

ஜீரணிக்கக் கூடிய செரிமானத் தடையைப் பற்றிப் பேசுகின்றாய்.
1.மனத்தின் பரிமாணம் கொள்ளும் உணர்வுகள்
2.தமக்குகந்த “சலனத்தின் நிலை” ஏற்பட்டு விடாத மனத் திறனே
3.உடலைக் காத்திடும் கவசம் ஆகும்.

ஓடு நெகிழ்ந்து அக்கனியின் சேமிப்பாம் சக்தியே… அந்த ஓடு உடைந்து விடாத வண்ணம் வெளிக்கொண்டு வரும் செயல் நிகழ்வு எப்படி உண்டானது…?

வேழம் தன்னுள் கொண்டிட்ட ஈர்ப்பின் வலு வீரிய சக்தி கொண்டுதான்…! தன் ஜீவனைப் பற்றிச் சிந்திக்கும் செயலற்ற நிலையாக இருந்தாலும்… “மாற்று நிலைகள் உட்பகுந்திடாதபடி” அந்த வேழத்தின் வலு வீரியம் நாம் வழிநடத்தும் இந்த தியான வழியிலே செயல்படுமப்பா.

1.மனச்சோர்வினுக்கு மருந்து எது…”
2.மனத்தினைத் தெளிவுபடுத்திடும் இந்தத் தியானமே ஆகும்.

வரும் வேக அப்பொருளைக் காப்பது யார்…?

உன் உயிர் குரு வழி நடந்திடும் பக்குவத் தன்மையில்தான்…! என்றே அதை உரைத்திடல் வேண்டுமோ…?

மாலைக்குப் பின் இருள் வரும்…! ஆனால்
1.மாலை வருவதற்கு முன்பே நம் பார்வையில் இருள் காட்டினால்
2.நாம் கொள்ள வேண்டிய பக்குவம் இன்னும் அதிகமாக வலுவாக்கப்படுதல் வேண்டும் என்பதே “அப்பொருள்…!”

அருள் வழியில் தன்னுள் வளர்ப்பாக்கும் சகல சக்திகளையும் செயல்பாட்டில் உலகினுக்கு வழிகாட்டி… சோர்வு நிலை நீக்கி… திண்மையின் மனம் ஏந்தி… ஞானச் செல்வங்கள் (நீங்கள்) நிலைபெற்று வளர்ந்து வலுவாகி… சிவ சக்தியாக ஆதி சக்தியின் கலப்பாக வேண்டும். அதுவே எமக்கு மகிழ்ச்சி.

எமது ஆசிகள்.

“துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம்” நமக்குள் பெருக வேண்டும்

கொடூரமான புலி மற்ற சாந்தமான உயிரினங்களை அடித்துக் கொல்வது போல்… சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடலின் உறுப்புகளையும்… அதை உருவாக்கிய அணுக்களையும் கொன்று புசித்துவிடும்..

இதிலிருந்து மீள்வதற்கு நம்முடன் வாழ்ந்து வளர்ந்த முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தி… அந்தப் பேரருள் உணர்வுகளை நம் உடலுக்குள் உள் செலுத்தித் தீமையான நிலைகளை மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.

கோடிச் செல்வம் தேடினாலும்… அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை. ஏன்…! இந்த உடலும் நம் கூட வருவதில்லை. ஆனால்
1.பேரருள் என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
2.ஒளியின் உணர்வாக நாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
3.”இதை விரும்புவோர் தான் செயல்படுத்த முடியும்…”

உடல் இச்சை கொண்டால் பலன் இல்லை…!

அருள் உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் எடுத்து வளர்த்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்து செயல்படும் தன்மையும்… தேடிய செல்வத்தைக் காத்திடும் நிலையும்… இந்த உடலைச் சீராக வைத்துக் கொள்ளும் நிலையும் வரும்.

“செல்வத்தை நாம் தேட வேண்டியதில்லை… அந்தச் செல்வமே நம்மிடம் வந்து சேரும்…” ஆனால் செல்வம் குவிகின்றது என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால் நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் உடலின் பற்றுக்கே வந்து விடுகின்றது.

ஞானத்தினை நாம் வளர்க்கும் பொழுது அருள் ஞானத்தின் வழிகளில் நாம் சென்று இருளை அகற்றி மெய்ப்பொருளைக் காண முடியும்

ஆகையினால் காலையில் ஐந்தரைலிருந்து ஆறரை மணிக்குள்
1.தினசரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுத் தீமைகளை நீக்கிப் பழகுதல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நாள் முழுவதும்… மற்றும் அவ்வப்போது சேரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி அருள் வழியில் நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக… இந்த இல்லற வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு வாழ முடியும்.

வேதனை என்ற விஷமோ கோபம் என்று கார உணர்வோ பகைமையான உணர்வுகளோ சாபம் என்ற உணர்வுகளோ நம்மைத் தாக்கப்படும் பொழுதெல்லாம்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து நம் உடலுக்குள் அதை உட்செலுத்தித் தீமைகளை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டால் பகைமைகள் வளராது.

தீமை என்ற நிலையே நம் உடல் அணுக்கள் பெறாதபடி தடுத்துக் கொள்ள முடியும். துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடலில் அணுக்களாக உருவாக்கிக் கொண்டால்… நம் சொல்லும் செயலும் புனிதம் பெறவும்… நம் உடலில் தெளிந்த நிலையும் உருவாகும்.

1.அந்தத் துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம் நமக்குள் பெருகும் போது
2.உடலில் விளைந்த சூட்சும சரீரம் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
3.நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வது உறுதி.

November 9, 2023

எத்தகைய குறைபாடுகளையும் நீக்கும் பயிற்சி தியானம்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானம் இருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களது இரத்த நாளங்களில் கலந்து அவர்களது உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று அவர்களது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த சாப வினைகளால் விளைந்த தீய வினைகளால் விளைந்த பாவ வினைகளால் விளைந்த பூர்வ ஜென்ம வினைகளால் விளைந்த கேன்சர் டிபி இரத்தக் கொதிப்பு சர்க்கரைச் சேர்த்து ஆஸ்த்மா இருதய நோய் மூலநோய் சரவாங்கி நோய் வாத நோய் போன்ற சர்வ நோய்களையும் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

தியானத்தில் இருப்பவர்கள் எல்லோரது உடல்களிலும் சர்வ தோஷங்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அவரவர்கள் உடலில்… இடுப்பு வலியோ கை கால் வலியோ தலை வலியோ வயிற்று வலியோ கிட்னி கோளாறோ இருதயத்தில் கோளாறோ மூல நோயோ இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள அந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இப்பொழுது ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடலில் சர்வ நோய்களையும் நீக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது. எல்லோரும் இந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

நோய் நீக்கும் அரும்பெரும் சக்தி இப்போது நீங்கள் பெறுகின்றீர்கள்
1.உங்கள் உடலில் கரண்ட் பாய்வது போல் இருக்கும்
2.சர்க்கரைச் சத்தோ வாத நோயோ ஆஸ்த்மாவோ மூலநோயோ இருதய நோயோ இருந்தால்
3.அங்கெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தி மின்சாரம் போல் பாய்ந்து அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
4.உங்கள் உடலில் எந்த வலியாக இருந்தாலும் குறையும்… வேதனைகள் அகலும்.

கேன்சர் டிபி போன்ற கடுமையான நோய்களும் குறைய தொடங்கும் அது உங்கள் உடலில் இருந்து கலைந்து கீழே இறங்குவதை நீங்கள் உணரலாம்.

எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் அதிலே மகரிஷிகளின் உணர்வுகள் படர்ந்து உடல் நலம் பெறும் உணர்ச்சிகள் இப்பொழுது தோன்றும்.

நீங்கள் சுவாசிக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்பட்டு உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் கலைந்து சென்று அது விலகும்.

1.உடலில் நோய்கள் குறைந்து அருள் உணர்வுகள் பெருகும் சக்தி பெறுகின்றது
2.அகஸ்தியன் அறிந்த… தீமைகளை அகற்றிடும் அருள் உணர்வு உங்கள் உடல்களில் இப்போது படரும்.

சர்வ பிணிகளும் நீங்கும்… இருதயம் சீராக இயங்கும்… எந்த நோயாக இருப்பினும் அது மாறும். உடலில் இருக்கக்கூடிய சிக்கல்கள் மாறும். உடலில் நல்ல ஜீரண சக்தியும் கிடைக்கும்.

புத்திர பாக்கியம் பெற தியானிக்க வேண்டிய முறை:-
புத்திர பாக்கியம் வேண்டுவோர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.தன் உடலிலே புத்திர பாக்கியம் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.கணவருக்கு அது கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
3.மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் ஏங்கித் தியானியுங்கள்.

உங்களுக்குள் புத்திர பாக்கியம் பெறும் அருள் உணர்ச்சிகள் உங்கள் உடலில் உருவாவதைக் காணலாம்.

உங்கள் இரத்த நாளங்களில் புதுவிதமான உணர்ச்சிகள் தோன்றி
1.கருப்பைகளிலே கரு உருவாகும் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதும்
2.விந்துகளிலும் அந்த அருள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
3.குழந்தைகள் உருவாகும் உணர்வின் அணுக்கள் உருப்பெறுவதை உங்கள் உடல்களில் உணரலாம்.

ஈஸ்வரபட்ட(ருடன்)ரின் நேரடித் தொடர்பு

மான் இனம் தனது குட்டிக்கு ஊட்டுகின்ற பாலானது அது ஊட்டுகின்ற செயலை… மாற்று குணம் பொருந்திய எதிரி விலங்கினங்களைக் கண்டுவிட்டால்… ஈர்ப்பின் அலை செயல் புரிந்திடும் விதமாக…
1.அந்த அலையானது மானின் சுவாசத்திலே பட்டவுடன்
2.பால் ஊட்டுகின்ற சுரப்பை சட்டென நிறுத்தித்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றுவிடும்.

அதே போன்றது தான் நீங்கள் தியானத்தில் எடுக்கும் சக்தியும்… அதை உங்களுக்குக் கொடுக்கும் நிலையும்.

அதாவது… மகரிஷிகளின் பேரருள் பேரொளி சக்தி உங்களுக்குள் பாயப் பெற்றிடும் நிலையில்… அந்த மகான்களின் சப்த அலைகள் நுண் ஒலி காந்த அலைகளாகப் பரவ விட்டுச் சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் ஓட்ட கதியில்
1.ஈஸ்வரராய் அளிக்கப்படும் (உயிர் வழி சுவாசம்) சுரக்கும் அமுதமாகிய அருளாசி கொண்டு உரைக்கப் பெறும் அருள் உபதேசங்கள்
2.எண்ணத்தின் கூர்மை மாற்று அலையின் சிந்தனையில் சிறிது மோதியவுடன் (சந்தர்ப்பத்தில் தீமைகள் மோதும் போது)
3.காட்சியின் ஒளிப்பதிவு நிலைகள்… ஒலி அலைகளாக மாறு கொண்டிடும் நிகழ்விற்கே “சற்று தடங்கலும் காட்டி…”
4.இப்படியும் நிகழ்ந்தனவா…? என்ற அதிசயப் பொருளாக வினா தொடுத்தால் (ஞானத்தின் வழியில் அறியும் எண்ணம் கொண்டால்)
5.காட்சிப் புலனறிவு பதிவு பெற்ற ஒலி அலைகளை நேரிடையாக உணர்ந்து கொண்டிடும்
6.ஞான திருஷ்டி எனும் விழிப்பார்வை கொண்டு காலத்தின் நிகழ்வுவை எம்மால் உணர்த்தப்படும். (ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு).

எமது (ஈஸ்வரபட்டர்) சர்வ ஆக்ஞையில் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஞானச் செல்வங்களுக்காகக் (உங்களுக்காக) காரண காரிய செயல்முறைகள் இதிலே காட்டப்பட்டுள்ளது.

November 8, 2023

செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

நாம் எடுக்கும் எண்ணங்கள் கொண்டு அவை உணர்வாக ஆனாலும் உடலுக்குள் சென்று அணுவின் தன்மையாக ஆன பின்
1.சுவாசித்த உணர்வுக்குள் மோதல்கள் எப்படி…?
2.இந்த உடலில் மனக்கலக்கங்கள் சஞ்சலங்கள் வெறுப்புகள் வேதனைகள் எப்படி எல்லாம் வருகின்றது…?

வீட்டில் செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

தசரதன் (கைகேயியின் துணையால்) மற்றவர்களை அடக்கித் தன் சாம்ராஜ்யத்தை வெற்றி பெறச் செய்தான். இருந்தாலும் அதே உணர்ச்சிகள் இங்கே “கூனி” கைகேயியிடம் என்ன சொல்கிறது…?

1.இராமனுக்குப் பட்டம் சூட்டி விட்டால்… நீ வேலைக்காரியாக ஆகிவிடுவாய் என்று “உள் மனது… உணர்த்துகிறது…!” என்பதை
2.அதாவது அப்படித் தோன்றும் உணர்வுகளை உருவமாக்கிக் காவியங்களைப் படைத்து
3.கருத்தினை மக்களைத் தெளிவாக்குவதற்காகக் கூறப்பட்ட இந்த உபாயத்தை
4.அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்துத் தெளித்து விட்டனர்
5.அந்த உண்மையின் மூலக்கூறை அறிந்தோர் இந்த உடல் இச்சைக்குத் தான் பெற முடிந்தது.

தான் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும்… மற்றவர்களை அடக்க வேண்டும்… என்ற உணர்வை இவரகள் எப்படிப் பெற்றானோ அதே உணர்ச்சி தான் தசரதச் சக்கரவர்த்திக்கும் வருகின்றது.

தன் மகனை நல்லவனை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆனால் தன் உடலுக்குள் மற்றவர்களை துன்புறுத்திய உணர்வுகள் இந்த உயிரோடு வளர்ந்து… பத்தாவது நிலை அடையும் மனிதனாகத் தான் இருக்கின்றது.

ஆனால் எல்லாம் இணைந்து வரப்படும் போது என்னாகின்றது…?

இரண்டு மனைவி இருக்கக்கூடிய வீட்டிலே சக்களத்திப் போராட்டம் வருகின்றது. ஆனால் உயிரோடு (உயிர் தான் தசரதச் சக்கரவர்த்தி) சேர்த்துப் பலவிதமான உணர்வுகள் வரும் பொழுது போராட்டம் எத்தனை வரும் எப்படி இருக்கும்…?

ஒரு கணவனுக்கு இரண்டு மனைவி இருந்தால் எப்படி இருக்கும்…? மூன்று மனைவி வைத்திருந்தால் எப்படி இருக்கும்…?

அது போல் தான்
1.உயிர் என்று நிலைகள் வரும் பொழுது இதனோடு சேர்த்து
2.அத்தனை சக்திகளும் (மனைவியாக) சேர்த்து….இந்த உடலையே இயக்குகின்றது
3.அதனதன் உணர்வுகள்… அது அது பெறுகின்றது… அதிலே எதன் உணர்வு வலு ஓங்குகிறதோ அதன் வழி தான் நடக்கின்றது.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றான் தசரதன்.

ஏனென்றால் இராமன் அன்பு கலந்தவன் அரவணைக்கக்கூடியவன் பண்பு கொண்டவன் பரிவானவன் அறவழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பொறுப்புடையவன் பொறுமையுடையவன் சிந்தித்து செயல்படுபவன் என்ற நிலையில் இருப்பினும் இராமனுக்குப் பட்டம் சூட்டுவதைக் கைகேயி விரும்பவில்லை.

அவனுக்குப் பட்டம் கிடைத்தால் என் மகன் பரதன் வேலைக்காரன் ஆகிவிடுவான். அவன் வேலைக்காரன் ஆனால் நானும் வேலைக்காரியாக ஆகிவிடுவேன் என்ற உணர்வுகள் அங்கே தோன்றுகின்றது

தசரதனுடைய எண்ணம் என்ன…? அடுத்த இராஜ்யம் வளர்ந்து விட்டால் அது தன்னை அடக்கிவிடும். அதற்குப் பதில் அவனை வலு இழக்கச் செய்து விட்டால் தனக்கே அந்த சாம்ராஜ்யம் சொந்தமாகின்றது.
1.அவன் எண்ணிய இந்த உணர்வின் சக்தி மனைவியாக இப்படி வருகின்றது
2.சாம்ராஜ்யத்தை ஆள்வதற்காக தசரதன் அதைச் செய்தாலும்
3.இவனுக்குள் இருக்கும் சாம்ராஜ்யத்தை இதுவே வந்து ஆளத் தொடங்குகிறது.

மற்றவர்களைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு அதை ரசித்தான். ஆனால் இவன் உடலுக்குள் இவனைத் துன்புறுத்தும் தனமையாக அந்த “மனப்போராட்டம்” வருகின்றது.

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் உணர்வுகளால் உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது என்பதை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது

அந்தக் காவியத்தின் கருத்தின்படி
1.ஒரு அணுவின் தன்மை எவ்வாறு செயல்படுகிறது…? என்பதை
2.பல உபதேசங்கள் வாயிலாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இணை சேர்த்து உங்களுக்கு விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

இது உங்களுக்குள் வளர்ந்தால் அதற்குண்டான ஞானம் கிடைக்கும். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியாக உருவாக்குகிறேன்.

பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்றால் இந்த உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது…? அதைச் சமாளிக்கக்கூடிய சக்தியும் அதற்குண்டான அருள் ஞானமும் உங்களுக்குத் தேவை.

அதற்குத் தான் இந்த உபதேசம்..!

மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று ஏன் சொல்கிறோம்…?

நம் சூரியக் குடும்பத்தில் ஞானத்தில் பகுத்தறிவைப் பண்படுத்தும் மனிதத் தன்மை எப்படிச் செயல் கொள்கின்றதோ அதைப் போன்ற நிலை ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் உண்டு.

நம் பூமியில் ஞானமும் விஞ்ஞானமும் வளர்ந்துள்ளதைப் போன்று மற்ற சூரியக் குடும்பத்தில் நமக்கு மேல் வளர்த்த ஞானத்தின் அலை நிலையின் தொடர்பை நம் பூமியிலும் “ரிஷிச் சக்திகள்” தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளார்கள்.

தன்னைத் தான் உணரும் சக்தியால் தன் சக்தியைக் கொண்டு ரிஷிகளின் சக்தியுடன் நம் ஆத்மாவின் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

ரிஷிகளின் சக்திக்கும் நம் சக்திக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறைதான் இந்தத் தியான முறை. ரிஷிகளின் சக்தி அனைத்தும் பால்வெளி மண்டலத்தில் (பரம்பொருளாக) படர்ந்துள்ள செயலில் எல்லோருக்கும் கிடைக்கும்படியாகத்தான் படரவிட்டுள்ளார்ககள்.

அத்தகைய மாமகரிஷிகள் தன் தன் இயக்கத்திற்கொப்ப… தன் வளர்ச்சிக்கொப்ப வலுவை வலு கூட்டிக் கொள்வதற்காக… தன் குணத்தை… மணத்தை… ஒளித் தன்மையில் நட்சத்திர ஒளியாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் எண்ணிலடங்காத நிலையில் இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியில் சுழன்று கொண்டே உள்ளனர்.

அந்தச் சுழற்சியின் கதியின் இயக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய வளர்ச்சிக்கு அறிவின் ஞானத்தை எடுக்கவல்ல எண்ணம் கொண்ட மனிதர்களை எல்லாம் தன் வலுவின் தொடரில் ஈர்க்கின்றார்கள்.

1.அத்தகைய மெய் ஞான வித்து ஓங்கி வளரத்தான்
2.தெய்வ குணங்களும் தெய்வ சக்தியும் இன்றும் சூட்சம கதியில் செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.
3.மலர் விரிந்து மணம் பரப்பி எப்படிக் காற்று மண்டலத்தை இனிமையாக்குகின்றதோ
4.அதைப் போன்று இன்றும் ரிஷி சக்திகளின் செயல் செயல்பட்டுக் கொண்டே தான் உள்ளது. (அருள் மணங்களாக)

தெய்வ குணத்தையும் தெய்வ சக்தியையும் வளர்க்கக்கூடிய மெய் ஞானிகளின் சிந்தனையால் தன் அறிவின் வளர்ச்சியைச் சூட்சமத்தின் துணை கொண்டு மேலோங்கி வளர்த்ததின் தொடரில் தான் இன்றைய உலகில் இருக்கும் மருத்துவம் விஞ்ஞானம் எல்லாமே வளர்ந்தது.

இருந்தாலும் இன்று மக்கள் தொகையின் பெருக்கத்தைப் போன்றே மனித அறிவின் பெருக்கமும் “ரிஷிகளின் சிந்தனை சக்தியுடன் தொடர்பு கொண்டு…!” தன்னை உணர்ந்து ஆத்ம பலம் பெற்றிருந்தார்கள் என்றால் இந்தப் பூமியில் உள்ள மனிதனின் சிந்தனைகள் வேதனை பயம் கோபம் குரோதம் அச்சம் என்ற விபரீத வினையினால் வரக்கூடிய பல கொடிய வியாதிகளினாலும் கொடிய விபத்துக்களினால் வேதனைப்பட்டு இறக்கும் நிலையிலிருந்து தப்பியிருக்கலாம்.

1.ஏனென்றால் இன்று ரிஷிகளின் அலையைக் காட்டிலும்
2.வேதனை ஒலி கொண்ட ஆவி உலக ஆத்மாக்களின் அலைத் தொடர் அதிகமாக மனிதனைச் சாடிக் கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து விடுபடும் நிலையாக யாம் சொல்லக்கூடிய தியான முறையின் தொடர்பில் ரிஷிகள் வழி காட்டிய துருவ மகரிஷியையும் சப்தரிஷி மண்டலத்தை இயக்கும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தை புருவ மத்தியின் வழியாக எண்ணித் தியானம் எடுக்கும் பொழுது
1.நம் எண்ணத்தின் ஒலி செலுத்தக்கூடிய தொடரில்
2.அந்தத் தொடரின் அமில ஒலியின் உயிர் ஒளித் தொடர்பு ஜீவ உயிர் காந்த சுழற்சியில்
3.நம் ஆத்மாவில் ரிஷிகளின் தொடர்பலைகள் ஈர்க்கப்பட்டு
4.அவ்வாறு அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் தியானத்தின் சிந்தனை சக்தியால் (அதனால் தான் மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று சொல்கிறோம்)
5.இந்தப் பூமியின் பிடிப்பலையிலிருந்து நம் ஆத்மாவை ரிஷிகளின் சக்தியுடன் இணைத்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட தியானத்தின் மூலம் ரிஷிகளின் தொடர்பில் நம் ஆத்மாவும் கலக்கும் பொழுது
1.அந்த இறைத் தன்மை கொண்டோரின் இறைக்கு நாம் உட்படுத்தப்பட்டு
2.நம் ஆத்மாவும் தெய்வ நிலை பெறும்.
3.பிறப்பின் பலனை ஒவ்வொரு உயிராத்மாவும் பெறும்.

November 7, 2023

எம்முடைய உபதேசங்களை வெறுமனே... கேட்பதையோ படிப்பதையோ விட “பதிவாக்க வேண்டியது மிக முக்கியம்”

தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.

தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.

இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்தச் சக்தி “எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்...”

ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?

உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள். (பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும்)

“தியானம்…” என்று சொன்னதும் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்பார்கள். என் பையன் இப்படிச் செய்கின்றான்… தொழிலில் நஷ்டம் என்று பல எண்ணங்கள் வருகிறது. தியானத்தில் உட்கார்ந்தாலும் என்னால் முடியவில்லை என்பார்கள்.

ஏனென்றால் தியானத்தில் இருக்கும் பொழுது பாருங்கள்… மனக்குடைச்சல் வரும்… இல்லாத சங்கடம் எல்லாம் வரும்.

அதற்குத் தான் இங்கே உபதேசிக்கும் போது கூர்ந்து பதிவாக்குங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம். உபதேசத்தன் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை இழுப்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றோம்.

இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள் சண்டையிடுகிறார்கள் என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.

அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.

மனிதனின் நினைவாற்றல் எப்படி இயக்குகிறது…? எப்படி இயங்குகிறது…? எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

மனிதச் சரீர ஆற்றலின் உண்மையைச் சிந்தனையில் (விஞ்ஞான அறிவு கொண்டு) சீர்படுத்திப் பார்த்தோம் என்றால்… விஞ்ஞானத்தால் காந்த அமிலம் பூசப்பட்ட நாடாக்களில்… மின் ஒளியைக் கொண்டு ஒலி அதிர்வால் பேசுபவற்றை எப்படிப் பதிவு செய்து மீண்டும் இயக்கச் செய்கிறார்களோ அதைப் போன்று...
1.இச்சரீரத்தின் காந்த ஒலியானது நாம் எண்ணி எடுக்கும் செயல் கொண்டு
2.ஆத்மாவின் பதிவான நினைவின் ஓட்டம் ஏற்கும் செயல் நிகழ்வால் “மனிதனின் நினைவாற்றல் இருக்கின்றது…”

ஆனாலும்…
1.சுவாச கதியில் “கணம் கொண்டு” எடுக்கப்படும் எண்ண ஓட்டங்கள்தான்
2.பதிவின் நினைவில் மீண்டும் மீண்டும் நினைவு பெற “எண்ணத்தில் மோதுகிறது…”

ஜீவ உற்பத்தி முதற்கொண்டு ஒவ்வொரு செயலுக்குமே… காந்த ஒளி நிகழ்வால் செயல்படும் உண்மைகளை… இன்று விஞ்ஞான அறிவால் (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்) உணர்ந்த நாம்…
1.எப்படி மனோதத்துவத்தால் அன்று மந்திரவாதிகள் மட்டும் உபயோகப்படுத்தினார்களோ அதே வழி முறை போன்று
2.ஓர் மனிதனின் எண்ணப் பதிவு நிலையை எடுக்கும் ஆற்றல் கொண்ட கருவியாக
3.விஞ்ஞான முறை கொண்டு செயலாகின்றது “விஞ்ஞான யுகமாக…”

1.ஒலி நாடாக்கள் பேசும் உண்மையை விஞ்ஞானம் வழிப்படுத்தியது.
2.“மெய்ஞானத்தில் விழிப்படையும் - மகோன்னத சக்தியை” நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாம் அறிதல் வேண்டும்.

அதாவது… மெய்ஞான ஒலியால் காந்த அமிலத்தைத் தியானத்தின் நிகழ்வால் ஆத்மாவில் பதிவுபடுத்தும் முறை கொண்டு… மனித சக்தியின் உயர்ந்த ஒளி காந்த சக்தியாக மனித ஆற்றலின் விழிப்பை விவரிக்க முடியாத அளவுக்கு உண்மையின் செயல்திறன்… “எண்ணத்தால் எடுக்கும் ஆத்ம தியானத்தால்” அறியவும் உணர்வும் முடியும்.

நமது வளர்ச்சிக்கு… சூட்சுமத்தின் ஒளியான ரிஷிகளின் எண்ணமுடன் ஒன்றிய தெய்வ குண எண்ணமாக… நம் எண்ணத்தைச் செலுத்தும் பக்குவ முறையைக் கைக்கொள்ள வேண்டும்.

பேரருள் பேரொளி சக்தி கொண்ட மகரிஷிகளின் எண்ண ஓட்ட உணர்வுடன்… இச்சரீர உணர்வுடன் கொண்ட எண்ணத்தைச் செலுத்தும் நம் மூச்சலையின் நிகழ்வால்… ஆத்மாவில் பதிவானது மகரிஷிகளின் ஒளி அலை அமிலங்கள்.

ஜீவகாந்த சரீரத்தில் (நமது உடலில்) சாந்த உணர்வு கொண்டு…
1.பேரருள் பேரொளி பெற்ற மகரிஷிகளின் அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று...
2.அந்த மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்.

அம்மகரிஷிகள் பெற்ற ஞானத் தொடர்பின் அலைகள் நம் உணர்வில் மோதும் பொழுது… காற்றலையில் பரவியுள்ள உன்னத தத்துவ ஞானத்தை ஒலியாகவும் ஒளிப்படங்களாகவும் (உணர்வுபூர்வமாக) நாம் காண முடியும்.

நிகழ்ந்த ஒளியும்… ஒளிப்படங்களும்… வலுக்கொண்ட செயல்கள் எவையுமே… ஜீவகாந்த சரீரத்தில் பதிவு செய்யப்பட்டு வெளிப்பட்ட நிலைகள் அழிவதில்லை.

பல வருடங்களுக்கு முன் சிறு பிராயத்தில் நமக்கேற்பட்ட சில நிகழ்வுகள்… அதாவது அந்த நேரத்தில் கனமாக எடுக்கப்பட்ட எண்ணங்களை… வயது முதிர்ந்த பிறகும் நம்மால் நினைவு கொண்டு எடுக்க முடிகிறது.

அதைப் போன்று
1.ஞானிகள் மகரிஷிகளின் ஒளி காந்த தத்துவங்களை… அவர்கள் உடலில் விளைய வைத்த பேராற்றல்களை…
2.விஞ்ஞானத்தின் பதிவால் ஒலியையும் ஒளிப்படங்களையும் காண முடிவது போல… காண முடியும்.

அதே சமயத்தில்… இந்த மனித ஆற்றலின் உண்மையில்… ஜீவகாந்த சரீரப் புலனில் எடுக்கும்… ஒலி காந்த மின் அலையின் செயல் கொண்டு வளர்க்கும் வழித்தொடருக்கு… ரிஷி சக்திகளின் ஒளி சக்தியின் எண்ணத்தால் (அவர்கள் எண்ணமும் நம் எண்ணமும் ஒன்றுபட வேண்டும்) ஆத்ம சக்தி வலுப்பெற சிவசக்தியின் (கணவன் மனவியாக) தொடர்பாக எடுக்கும் தியானத்தின் சூட்சுமத்தில்… பல ஆற்றல் மிக்க உண்மைகள் உண்டு

November 6, 2023

நான் ஓர் ஓடக்காரனப்பா…!

 

பிறப்பு வளர்ப்பு இறப்பு (எல்லாவற்றிலும்) எனும் உண்மைகளை உணர்ந்து… தம் ஆத்ம நிலையைக் காத்துக் கொள்ள… உள்ளபூர்வமாக… இதயத்தின் ஒளியாக…
1.யாம் சுட்டிக் காட்டிய தியானத்தின் வழித் தொடராக
2.பயணம் செய்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனரப்பா…!

ஆனாலும் பிறவி என்னும் மகா சமுத்திரத்தில் வாழ்க்கை என்னும் ஓடத்தில்… இக்கலியின் மக்கள் “மாக்களாக மாறிடும் நிலையை நீக்கிட”
1.அறிவு பூர்வமான ஆக்க செயல்களை உணர்த்தி
2.மாய தளைகளை அகற்றி
3.”விழிப்பாக உணர்ந்திடும்” - ஞானச் செல்வங்களை (உங்களை)
4.பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்லும் “யாம் (ஈஸ்வரபட்டர்) ஓர் ஓடக்காரன்…”

கால தேச வர்த்தமானம் எண்ணிடாதபடி… என் கடமையின் வினைச் செயலாக… இரவு பகல் “எந்த நேரமும் நான் காத்திருக்கின்றேன்…”

1.இரவிலோ… இன்னும் பேரருள் பிரகாசம் என்னும் ஜோதியைக் கையில் ஏந்தி
2.உங்கள் வாழ்க்கையின் பயனைக் காட்டிடவே சூட்சுமத்தில் செயல் கொள்கின்றேன்.

பயன் கொள்ளுங்களப்பா…!

“குரு வழியில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுதல் வேண்டும்

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்

குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.

அது மிகவும் வலிமை மிக்க சக்தி…!

யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.

எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால்…
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.

ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய ஆசைகள் எல்லாம் “குரு வழியில்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.

எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது

உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்றுத் தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.

குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும்… ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும்.

ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்…! அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.

November 5, 2023

சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் “துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்”

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அது தான் நம்மை இயக்கிக் காட்டும்.

உதாரணமாக… தீமை என்று தெரிகின்றது… அப்போது அதை அகற்றப் பழக வேண்டும் அல்லவா…! அதாவது ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வைச் சேர்த்தால் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…! என்று தீமை உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.

ஆனால் தீமை என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்
1.இது உடல் இச்சை…! கௌரவப் பிரச்சினையாக மாறிவிடுகின்றது
2.கௌரவ பிரச்சனைகள் வரும் பொழுது உடல் பற்று வருகின்றது.
3.உடல் பற்று வரும் பொழுது தீமை என்ற நிலையே வருகின்றது

ஆக இந்த உடல் பற்று வரும் பொழுது சிவம்... இந்த உடலைக் காக்கத் தான் நம் எண்ணங்கள் வருகின்றது.

ஆனால் “ஓ..ம்” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் தகப்பன் சாமி என்று சாஸ்திரங்கள் காட்டுகிறது.
1.தீமையை நீக்கும் அருள் உணர்வை ஜீவனாக்கினால் பிரணவம்
2.அது தான் தகப்பன்சாமி…! (உடல் சிவம் - ஆறாவது அறிவு முருகன்)

தீமையை நுகர்ந்து விட்டால் உடனே சங்கடப்படுகின்றோம்… சலிப்படைகின்றோம். அப்போது ஆறாவது அறிவு கொண்டு என்ன செய்ய வேண்டும்…?

1.சங்கடத்தை நீக்க வேண்டும் சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
2.இருளை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் கார்த்திகேயா…! (கார்த்தி என்றால் வெளிச்சம்)

பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ தீமைகளிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று எண்ணி எடுத்துத் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடல் பெற்ற பின் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை இந்த உடல் மலமாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை அறிகிறது.

உயிர் ஈசனாகின்றது… உடல் சிவமாகின்றது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்க வேண்டும் என்ற வினைகளைச் சேர்த்தது வினைக்கு நாயகனாக மனித உடலை உருவககியது (விநாயகா) மனித உடலை உருவாக்கிய பின் நஞ்சை மலமாக மாற்றுகின்றது.

அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இருந்தாலும்… உடல் பற்றின் தன்மை வரப்படும் போது
1.கௌரவக் குறைவாக என்னைப் பேசினான் என்ற உணர்வான பின்
2.அது “ஓ… ம்…” என்று நமக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது.
3.அவனுடைய தவறை நீக்குவதற்கு மாறாக அவனுடைய தவறை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்

அந்தத் தவறு நமக்குள் பிரணவமாகி விடுகின்றது… உடலுக்குள் வரும் பொழுது வேதனை வருகின்றது. வேதனை வரும் பொழுது சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது… சிந்தனை இழந்து கார உணர்ச்சிகள் அதிகமாகி எரிச்சலாகின்றது.

உதாரணமாக…
1.ஒரு கல்லுடன் கல் மோதினால் (உராய்ந்தால்) நெருப்பாகின்றது
2.அந்த இடத்திலே தொடும் பொழுது சுடுகின்றது.

அதே போன்றுதான் இந்த உணர்ச்சிகள் மோதலாகும் பொழுது அதற்குத் தகுந்த மாதிரி வேகங்கள் வருகின்றது. அப்பொழுது அதை மாற்ற முடிகின்றதா…? இல்லை…!

அத்தகைய கார உணர்ச்சிகளை மாற்றுவதற்குத் தான்
1.நம் குருநாதர் காட்டிய வழியிலே அவர் கொடுக்கக்கூடிய அரும்பெரும் சக்திகளை
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து நாம் பயன்படுத்திப் பழகுதல் வேண்டும்.

உயிரை நாம் உணர வேண்டியதன் அவசியம்

இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்...!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.

உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்...!

இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)

இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது...
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
2.(வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.

November 4, 2023

நம் ஆத்மாவின் வலு “திடம் பெற வேண்டியது” மிகவும் முக்கியம்

பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு மட்டும் அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.

மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை... அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்...” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.

1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.

அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.

பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.

அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்...
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.

மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு...” நிலையாக்கினால் தான் முடியும்.,

அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா...! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.

November 3, 2023

நமக்குள் மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க வேண்டும்

ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.

வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.

இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.

1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!
5.அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.

மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்று… மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.

மெய் ஞானத்தின் ஒலி கொண்டு… ஒளி பாய்ச்சும் ஏக்கத்தில்… மெய் ஞானி பெற்றான் “ரிஷிச் சக்தி…!”

அந்த ரிஷிச் சக்தியின் செயல் நிலை தன் தன் கதியின் சுழற்சிக்குச் செயலாக்குவதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்துள்ள ஞானத்தைக் கொண்டு
2.வலுவை வளர்க்க வழியமைக்கும் நிலையைத்தான் இங்கே உணர்த்துகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

திடீரென்று இருதய அடைப்பு (அட்டாக்) ஏன் வருகிறது...?

நாம் சாப்பிடுகின்ற ஆகாரத்திற்குள் நல்ல வாசனையான பொருளைப் போட்டு. ருசியாகத் தான் சாப்பிடுவோம். சத்துள்ளதை எல்லாம் அதிலே போடுகின்றோம். ஆனால் அதற்குள் மறைந்து இருக்கும் அந்த விஷமான சத்தை நம் உயிர் என்ன செய்கிறது...?

அந்த நஞ்சை எல்லாம் பிரித்து மலமாகக் கொண்டு வருகின்றது நம் உடல். அதாவது உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சைப் பிரிக்கக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று இப்படி இருக்கப்படும்போது அதை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்...?

உதாரணமாக... வியாபாரத்தில் நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை... ஏமாற்றுகின்றான்...! என்று தெரிகின்றது. இது கார்த்திகேயா.

ஏமாற்றுகிறான் என்று சொன்னவுடனே நாம் வேதனைப்படுகின்றோம். நம் தலை சுத்துகின்றது. கொடுத்தேனே என்னை ஏமாற்றுகின்றானே...! என்று இதுவும் தெரிகின்றது கார்த்திகேயா.

ஏமாற்றுகின்றான் என்று சொல்லும்போது நாம் இன்னொன்று என்ன நினைக்கின்றோம்...? அந்த நேரத்தில் இன்னொருவருக்கு நாம் காசு கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம்.

ஏனென்றால் கடனுக்கு வாங்கித் தான் நாமும் தொழில் செய்கிறோம். பொருள் வாங்கியவரிடம் பணம் கொடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டுத் தான் நாமும் வாங்குகின்றோம். அந்த நாணயத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் பொருளை விற்கும் போது நம்மிடம் வாங்கியவன் பணத்தைக் கொடுத்தால் தான் நாம் வாங்கியவருக்குக் கொடுக்க முடியும் என்ற நிலையில் நாமும் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது...?

அதை நினைத்தாலே கோபம் வரும்... கண்கள் சிவக்கும்...! நரம்பு மண்டலமெல்லாம் விடைக்கும். இப்படி ஆகின்றதே என்று அந்த நேரத்தில் வேதனையும் விஷமும் சேர்த்தால் எப்படி இருக்கும்...?

இந்த உணர்வுகள் எல்லாம் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலிலே கை கால் குடைச்சலை உண்டாக்கும். சில பேருக்கு மூட்டு மூட்டிற்கு வலி இருக்கிறது... என்று சொல்வார்கள்.

அதாவது “சரவாங்கி நோயாகி விட்டால் மூட்டு மூட்டுக்கு வலி வந்துவிடும். அதே சமயத்தில் எவ்வளவு திடமாக இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு வரப்படும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் இந்த கோபமும் வேதனையாக ஆன பிற்பாடு நமது கவன நரம்பில் சென்று அங்கே இந்த அழுத்தம் ஆன பிற்பாடு என்ன செய்கின்றது...?
1.பலூன் மாதிரி உப்பிவிடும்
2.பலூன் மாதிரி உப்பிவிட்டது என்றால் நம் இருதயத்தைச் சரியாக இயக்க முடியாது
3.மூச்சு இழுத்தது கீழே இறங்காமல் நிற்கும்.
4.அப்படியே ஹார்ட் அட்டாக் ஆகிறது... உடனே இறந்தவர்களும் இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் இரத்தம் போகும் நுண்ணிய நாளங்கள் வெடித்து விட்டதென்றால் அப்படியே சுத்தமாவே நின்றுவிடும்.

1.நாம் நினைக்கின்றோம் சாதரணமான நிலைகள் என்று....!
2.ஆனால் நாம் பார்க்கின்ற உணர்வெல்லாம் நம் உடலிலே இப்படிச் செய்து கொண்டே இருக்கும்

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்...?

நாம் சம்பாரிக்க வேண்டும் என்று நினைத்தோம் தொழிலில் லாபம் வரும் என்று நினைத்தோம். நாம் ஏமாற்றவில்லை...! இங்கே வாங்கிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடன் வாங்கினோம்.

கொஞ்சப் பணம் இருந்தாலும் கடனுக்கு வாங்கி வியாபாரம் செய்து இதிலே லாபம் வரும் என்று தான் ஆசையுடன் இருக்கின்றோம். கடையில் நம் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்றும் கார்த்திகேயா அது நமக்குத் தெரிகின்றது.

ஆனால் பணம் திரும்ப வரவில்லை என்று தெரிகின்றது. நாம் பொருள் வாங்கியவர்கள் நம்மிடம் பணத்தைக் கேட்பார்களே...? அவர்களுக்கு என்ன சொல்வது...? என்கிற பொழுது நாம் மயங்கி விடுகின்றோம்.

அந்த மாதிரி நேரத்தில் யாம் (ஞானகுரு) உங்களுக்கு உபதேசித்த அருள் வழிப்படி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள்.

1.கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2,அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
5.நமக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

இவ்வாறு செய்தால் பணம் வந்து சேரும். வேதனையோ கோபமோ வராது... நோயாகவும் மாற்றாது.

November 2, 2023

யாம் உபதேசிப்பது வெறும் சொல் அல்ல… அகஸ்தியனின் பேராற்றல் அது…!

இன்று யாகத்தை எப்படி நடத்துகிறார்கள்….?

நெருப்பை உருவாக்கி அதில் பல புஷ்பங்களையும் நறுமணங்களையும் மணங்களையும் போட்டு… மந்திரத்தைச் சொல்லி இப்படித்தான் யாகத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் உண்மையான யாகம் எது…?

நமது உயிர் ஒரு நெருப்பு. நாம் எடுக்கக்கூடிய (சுவாசிப்பது) உணர்வுகள் புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே மோதுகிறது. மோதிய பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகிறது.

ஒவ்வொரு குணங்களையும் பற்றி அதனின் இயக்க நிலைகளைத் இந்த உபதேசத்தின் வாயிலாகத் தெளிவாகச் சொல்கின்றோம். அதற்குள் தீமை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளைக் கலக்கும்படி சொல்கிறோம்.

அப்போது தீமையை நீக்கும் அந்த மெய் ஞானியின் உணர்வுகள் யாகத்தீயிலே… அதாவது உங்கள் உயிரிலே படுகின்றது.

அந்த அருள் உணர்வை இயக்கச் சக்தியாக மாற்ற வேண்டும்… துருவ நட்சத்திரத்திந் உணர்வு உங்கள் உடலில் படரப்படும் பொழுது ஒளியின் அறிவாக… உணர்வின் ஞானமாக வளர்கின்றது

ஆக… இப்பொழுது அந்த உண்மையான யாகத்தை நாம் அனைவரும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

எம்முடைய அருள் உபதேசத்தைக் கேட்டு உங்களுக்குள் அதை வளர்த்து நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் வெளியிலே பரவும் பொழுது எல்லோருக்கும் நல்லதாகிறது.

உதாரணமாக என் உடலில் மேல் வலி தலைவலி கை வலி கால் வலி இடுப்பு வலி என்று சொல்வார்கள். இடுப்பு வலி இருக்கும் போது இங்கே குருநாதர் சொல்வதை “உட்கார்ந்து கொண்டு நான் எப்படிக் கேட்பது...? நான் எப்படி அமர்ந்து தியானம் செய்வது...?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் அவர்கள் எல்லாம் இப்பொழுது இந்த உபதேசத்தைக் கேட்க ஆரம்பித்தால்… நேரம் ஆக ஆக அந்த வலி எல்லாம் காணாமலே போய்விடும்... உட்கார்ந்து தாரளமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வலியே தெரியாதபடி இருக்கும். அடுத்தது ஒன்றுமே இல்லை என்று சொல்வார்கள்.

ஆனாலும் ஏற்கனவே இடுப்பு வலியால் வேதனைப்பட்டுத் தனக்குள் பதிவான உணர்வுகள் என்ன செய்யும்…? “அந்த ஞாபகம்” வந்தவுடனே என்னிடம் (ஞானகுரு) வந்து இடுப்பு வலிக்கின்றது என்று தான் மீண்டும் கேட்பார்கள்.

முதலில் வரும்போது வலி இருந்தது… உபதேசம் கேட்கும் பொழுது இடுப்பு வலி இல்லையே… ஆகையினால் இப்பொழுது இல்லை அல்லவா…! என்று நான் திருப்பிச் சொன்னால் ஏற்கனவே பதிவான நினைவோடு தான் மீண்டும் கேட்கின்றார்கள்.

அது போல் ஒரு சிலருக்குக் கை கால் குடைச்சல் இருக்கும். இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின்… அவர்கள் உடலில் இருக்கும் அந்தப் போர் முறை மாறுகின்றது… கலக்கங்கள் நீங்குகின்றது.

மகரிஷிகள் உணர்வுகளைச் சுவாசித்த பின்… தீமைகளை அது நீக்குகின்றது. வலி நீங்கி… உங்கள் உடல் வெடுக்கென்று “சொடக்கு எடுத்தது போன்று…” இலகுவாக இருக்கும்.

நீங்கள் கதைப் புத்தகம் படிக்கின்றீர்கள்… அல்லது சினிமா பார்க்கின்றீர்கள் என்றால் ஊங்கள் உடல் ஏதாவது நெளிகிறதா…? கையையோ காலையோ நெளித்து அசைக்கின்றோமா…? இல்லை. கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோம்… கவனிக்கின்றோம். இடுப்பு வலி தலைவலி எதையுமே நினைப்பதில்லை… கால் வலியைக் கூட நினைப்பதில்லை.

அது போல் தான் எம்முடைய உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்கக் கேட்க இருதயத்தில் படபடப்பு இருந்தாலும் கூட துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தச் செலுத்த… அதை நீக்கி இதயத்தை வலுவாக்குகின்றது…. வேதனை குறைகிறது.

ஏனென்றால் நான் வெறும் சொல்லாக உபதேசிக்கவில்லை. அகஸ்தியன் பெற்ற அருள் ஆற்றலை அவன் கண்ட… அவன் பெற்ற… அவன் வளர்த்துக் கொண்ட பேராற்றல்களை… செவி வழி கூடி இந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் உந்தச் செய்து அதை நுகர வைக்கின்றோம்.

நுகரும் போது அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வெல்லாம் உங்கள் இரத்தங்களிலே கலந்து அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகிறது. தீமைகளை நீக்கக்கூடிய சக்தி உங்கள் உடலில் அது எப்படியும் ஊடுருவ வேண்டும்… நீங்கள் நலம் பெற வேண்டும் என்பதற்குத்தான் இப்படிச் செய்கிறேன்.

வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்தால் தன்னாலே வேதனை வருகிறது அல்லவா. அடுத்து இரவிலே கெட்ட கனவு வருகிறது…! மேல் வலிக்கிறது… உடம்பை அமுக்குகிறது… வயிறு வலிக்கின்றது… கண் வலிக்கின்றது எல்லாமே வரும்.

காரணம்… நாம் நுகர்ந்த அந்த வேதனைப்பட்ட உணர்வு ஆகாரத்துடன் கலந்த பின் அதற்குத்தக்க உடலுக்குள் சென்று உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கும் அதற்கும் எதிர்மறையாகி ஒன்றுக்கொன்று போராகிறது.

நுரையீரலுக்குச் சென்றால் வலி கல்லீரலுக்குச் சென்றால் வலி இதயத்துக்குச் செல்லும் பொழுது வலி… என்று இப்படி அந்தந்த உறுப்புகளுக்குச் செல்லும் பொழுது போராட்டமாகி… எதிர்மறையான உணர்வின் இயக்கங்களாக வலியாக வேதனைப்படும்படி செய்கின்றது.

இரத்தம் செல்லும் இடமெல்லாம் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு போர் நடந்து கொண்டு இருக்கின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்குத் தான் அன்று அகஸ்தியன் பெற்ற உணர்வை உங்கள் செவிகளிலே கேட்கும்படி செய்து… கண்ணின் நினைவாற்றலுக்குக் கொண்டு வரச் செய்து… அதை நுகரும்படி மூக்கின் வழியாகச் சுவாசிக்கும்படி செய்து… உயிர் வழி இந்த உணர்ச்சிகளை உடலுக்குள் பரப்பும்படியாகச் செய்து… இந்த உபதேசத்தின் உணர்வுகளை உமிழ் நீராக உங்கள் ஆகாரத்துடன் கலக்கும்படி செய்து… அதை நல்ல இரத்தமாக மாற்றும்படி செய்து… இரத்தத்தில் கலந்த பின் தீமைகளை நீக்கும்படியாக… உங்கள் தீமைகளைப் போக்கும் அரும்பெரும் சக்தியாகக் கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்…! நான் சும்மா வேடிக்கையாகச் சொல்லவில்லை… எல்லாம் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல வரவில்லை.

காரணம்… நமக்குள் எத்தனையோ விஷங்கள் இருக்கிறது. இதை ஒவ்வொரு நிமிடமும் மாற்றி எடுத்துக் கொண்டு வந்தால் அந்த விஷமே வலுவாகி உயர்ந்த சக்திகளைப் பெற (சரியான) வழியாகும்.

பாம்பிற்கு “விஷம் எப்படி வலுவாகிறதோ” இதைப் போன்று விஷத்திற்குள் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாகச் சேர்க்கப்படும் போது… நமக்குள் வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது… அதை நீங்கள் பெற முடியும்.

ஏனென்றால் குருநாதர் எனக்குக் கொடுத்ததை உங்களுக்குத் தொட்டுத் தொட்டுக் கொடுக்கின்றோம். அடுத்து அடுத்து வரும் போது ஒவ்வொரு நிலையிலும் நல்லதை உருவாக்குவதற்கு... ஞானத்தின் வழியில் வளர்வதற்கு இது உதவும்.

உங்கள் உயிர் கடவுள்… அவனால் உருவாக்கப்பட்ட உங்கள் உடல் ஆலயம்… அதில் அசுத்தங்கள் சேராது அந்தக் கோயிலை சுத்தப்படுத்த வேண்டும் என்ற சேவையாக… குரு சொன்ன நிலைகளைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன்.

ஆகவே நீங்கள் எல்லாம் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும்…!

நம்மைச் சித்தனாக்கும் “சிந்தனா சக்தி”

“ஒருமையுள் ஆமை போல் ஒன்றடக்கல்…” என்ற வள்ளுவச் சித்தனாரின் வேதம் உரைக்கும் பொருளின் உண்மை என்ன…?

1.பஞ்சேந்திரியங்கள் எனச் சொல்லப்படும் மெய் கண் மூக்கு செவி வாயினால்
2.உடல் இயக்கும் எண்ணத்தின் வழியாகச் செயல்படும் இந்த உறுப்புகளையா…?
3.அல்லது காற்று நூல் உரைத்த பஞ்சேந்திரியங்களின் உட்செயல் காட்டும் பஞ்சபூதங்களையா…?

அதாவது அடக்கப்பட வேண்டியது ஐம்புலன்களையா… அல்லது அவைகளை இயக்கும் காற்றையா…? (மூக்கு வழி புகும் காற்று)

குதிரையைச் செலுத்துபவன் அதற்குக் கண் முகப் படலமிட்டு… அதற்கு மேல் கடிவாளமிட்டு… தான் அமர்ந்து செல்வதற்காக வேண்டிய சேணத்தையும் இட்டு… இத்தனை அமைப்புகளுக்கும் பிறகு
1.எங்கே செல்ல வேண்டும்…? என்று உதித்திடும் எண்ணத்திற்கொப்ப
2.கடிவாளத்தின் தூண்டுதலை உணர்ந்து… நேர் பாதையாகத் தன் வழி உணர்ந்து செல்லுதலுக்கொப்ப
3.மனித சரீரத்தில் செயல்படும் பஞ்சபூதங்களின் செயலையே
4.உயர்ந்த நன்மார்க்க சிந்தனையாக… ஆத்ம பலம் பெற வேண்டும் என்ற சிந்தனையாக
5.சித்தின் நலம் பெற விளையும் சிவசக்தி தத்துவ சாரமாக…
6.(தன்) மன எண்ணத்தின் இலயிப்பு விளங்கிடல் வேண்டும்.

அதுவே சித்தனாக ஆகும் சீரிய வழியாகும்…!

அப்படி அல்லாதபடி… பஞ்சபூத புரவிகள் இயங்கிடும் இயக்கம்… செயலுறும் செயலில்… “மன எண்ணத்தின் எழுச்சி சிந்தனையை மாற்றிவிடும் கருத்தாக இருந்து விட்டால்…”
1.அப்புரவிகளின் வலு கட்டுக்கடங்காத செயல் நிலையாக
2.பஞ்சபூதங்களாய் வழி நடத்தும் “உயிரான்ம சக்தியின் உயர் நோக்க செயல்” என்ன ஆவது…?

ஆகவே…
1.சிந்தனை சக்தியின் கூர் பார்க்க… (பார்த்து)
2.சிந்திப்பின் அவலங்கள் நீக்கப்பட்டு…
3.தர்மத்தின் செயலுறும் வழியில்… சத்தியம் என்ற மெய்ப்பொருளை உணர வைத்து (தனக்குத் தானே உணர்ந்து)

4.அதிலே உவகை மகிழ்ச்சி தரும் பேரின்ப நிலையை அனுபவித்தலே சித்தின் நிலையப்பா…! 

சர்வத்தையும் அமுதமாக்கிடும் திறன்

1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்
2.நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இல்லையப்பா...!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.

நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது...! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக” முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர். ஜோதி நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவியியலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட 5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.

அதே தத்துவத்தை... அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான்.

நாம் சுட்டிக் காட்டும் தியான வழிகளில் உயர் ஞான சிந்தனை வசம் நிலைப்போர் ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவை வளர்ச்சி கொண்டதாக ஆக்கிட
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை
2.நவஜோதிகளாக உங்கள் உயிரான ஆத்ம ஜோதியில் கலக்கச் செய்யுங்கள்.

அந்த ஆதிசக்தியில் (இயற்கை) ஒன்றிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு உயர்ந்திட வேண்டும் என்று எண்ணுவோர் அனைவருக்கும் எமது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

தாய் தந்தையரிடம் தினமும் ஆசீர்வாதம் (நல்ல வாக்குகள்) வாங்கும் பழக்கம் நம்மிடம் இருக்கின்றதா...?

நாம் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்கச் சொல்கிறோம்…!

ஆனால் திடீரென்று கேட்பார்கள்… என் அம்மா என்னைச் சும்மா தினமும் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா எப்படி எப்படியோ செய்து என்னை என்னமோ என்னைச் சொல்கிறது…! என்று இப்படியெல்லாம் பேசுவார்கள்.

தாயைக் கடவுளாக மதிக்கச் சொல்கிறாயே… எங்கள் அம்மாவுக்காக வேண்டச் சொல்கிறாயா…? என்றெல்லாம் இப்போது சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்…? அது நமக்குத் தெரிகின்றது.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம். கர்ப்பமாக இருக்கின்ற தாய் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள்… எத்தனை வேதனைப்படுகின்றார்கள்… என்று.

அன்னை தந்தை நமக்காக வேண்டி நம்மை வளர்த்திட எத்தனையோ வேதனைகளையும் சிரமத்தையும் அனுபவித்தார்கள். அது அனைத்தும் அவர்கள் உடலில் தீய வினைகளாக இருக்கும்.

அது அனைத்தையும் நீக்க…
1.மகரிஷிகளின் அருள்சக்தி என் அன்னை தந்தை பெற வேண்டும்.
2.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைய வேண்டும்.
3.மகரிஷிகளின் அருளுணர்வு என் அன்னை தந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.என்னை வளர்த்திட்ட என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட… நான் பார்க்க வேண்டும்
5.அந்தப் பேரானந்த பெருநிலையான நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று
6,இதை வினையாக ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும்.

இப்படித் தான் அம்மா அப்பாவை வணங்கச் சொல்லி சொல்கின்றார்கள். அதை யாரும் நினைக்கவில்லையே…!

தன் பிள்ளை கருவில் இருக்கப்படும்போது எந்த நிலையை அந்தத் தாய் செய்ய வேண்டும்…?

கருவில் வளரப்படும்போதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று தாய் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கர்ப்பமான அந்தத் தாயைப் பார்ப்பவர்களும் இதை எண்ணி அந்தக் கருவில் வளரும் சிசு
1.இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உலகையே காத்திடும் உணர்வுகள் அதிலே விளைய வேண்டும் என்று
3.அந்த உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்றும்
4.அந்தக் கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு இந்த அருள் சக்திகள் எல்லாம் வினையாகச் சேர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

அதே தாய் உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வு பெற வேண்டும் என்று அதை எண்ணும்போது இந்த உணர்வுகள் அனைத்தும் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

பிறக்கும் குழந்தை ஞானக் குழந்தையாகப் பிறக்கும். அனைவரும் போற்றும்படியாக ஞானவானாக வளரும். இப்படித்தான் அன்று ஞானிகள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

நாம் இதைச் செய்கின்றோமா…?