ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2016

மகரிஷிகளின் அருள் சக்தியை சாமானிய மக்களும் பெறும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

இன்று ஒருவர் லேசர் (LASER) கதிரியக்கத்தால் மற்றவரை ஆழம் கண்டு
அவனைத் தொலைத்துவிடவேண்டும் என்று எண்ணுகின்றார்.

மற்றொருவரோ நீ எனக்குள் கண்டுபிடித்த விஷத்தின் தன்மை என்னிலே உண்டு. நான் சாகப்படும் போது நீயும் சாவாய் என்ற நிலைகள் கொண்டு சிந்தனையற்ற நிலைகளில் செயல்படுகின்றார்.

தான் இறப்பதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
தன் கௌரவத்தைக் காக்க
நான் இறந்தாலும் உன்னைக் கொல்வேன்.
உன்னை மடியச் செய்வேன்.

நான் இறப்பதாக இருந்தால் உன்னை மடியச் செய்தபின் தான் நான் இறப்பேன் என்ற மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்று உலகெங்கிலும் இதைப் போன்று பரவிவிட்டது.

மனிதனென்ற சிந்தனை இழந்து
மனிதன் நாம் அடையும் மார்க்கத்தைத் தடைப்படுத்தி
மனிதர்களையெல்லாம் கொன்று ரசிக்கும் உணர்வுகளே
இன்று பெருகி வருகின்றது.

இது போன்ற நிலைகளிலிருந்து நாம் எல்லோரும் மீள்வதற்குத்தான் இதையெல்லாம் உபதேசிக்கின்றேன்.

நான் பேசுகின்றேன் என்று எண்ண வேண்டாம்.
இது எனக்குத் தெரியவே தெரியாது.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளால் அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை மக்களுக்கு எட்ட வேண்டும். மக்கள் அனைவரும் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும் என்ற நிலையில் தான் திரும்பத் திரும்ப இங்கே உபதேசிக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை சாமானிய மக்களும் பெறும் வாய்ப்பாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் என்ற ஸ்தாபனத்தை அமைத்ததும் அவரின் உணர்வின் செயலே.

என்னால் முடியாது.

அவரின் உணர்வின் இயக்கமே இங்கே செயல்படுகின்றது. எப்படி இங்கே பொருள்கள் வந்ததென்று நமக்கும் தெரியாது. இதன் வழிகளிலே தான் குரு அருளின் நிலைகள் இன்று வழிப்படுகின்றது.

நாம் அனைவருமே இந்தக் குரு அருளின் தன்மை கொண்டு நமக்குள் மதத்தில் சிக்காது இன பேதமோ மொழி பேதமோ இல்லாது அரசியல் பேதமோ இல்லாது
உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்த்து
மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

அத்தகைய மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்றால் அந்த மகரிஷிகளுடன் நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை கொடூர நஞ்சின் தன்மை தனக்குள் சேர்த்துக் கொண்ட அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்த நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையை அங்கே கரைத்துவிட்டு ஒளிக் கடலிலே அந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை பெறச் செய்ய வேண்டும்.

அவர்கள் முன் சென்றால்; அதனின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறமுடியும். எமது குரு அருள் இதைத்தான் திரு அருளாக உபதேசித்தது.

ஆகவே, ஒவ்வொரு மனிதனையும் காத்திட வேண்டுமென்றால் நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

தன் வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக்ள் கேட்டறிந்தாலும்

  • ·         அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் பதியாது
  • ·         அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்,
  • ·         எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
  • ·         எங்களை அறியாது சேர்ந்த தீமைகள் மறைய வேண்டும்
  • ·         மெய்ப் பொருள் காணும் திறன் பெறவேண்டும்
  • ·         எங்கள் சொல்லால் கேட்போர் உணர்வுகள் இருள்கள் நீங்க வேண்டும்
  • ·         அவர்களும் பொருள் காணும் நிலைகள் பெறவேண்டும்
  • ·         அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலைகள் பெறவேண்டும்
என்று இவ்வாறு எண்ண வேண்டும்

இப்படி நாம் எண்ணினாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியைப் பெறவேண்டும்

இல்லையென்றால் வெறும் சொல்லாகத் தான் அமையும்.

February 5, 2016

மின்சாரம் பாய்வது போன்று உங்கள் உடலுக்குள் அருள் ஒளிகள் பாய்ந்து நோய்கள் நீங்கும்

அம்மா அப்பா அருளால், குருவின் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷிகளின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷிகளின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து
எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற்று
சர்வ நோய்களும் சர்வ தோஷங்களும் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா
என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடலிலுள்ள இடுப்பு வலியோ, கை கால் வலியோ தலை வலியோ அல்லது வயிற்று வலியோ, இருதய வலியோ கிட்னியில் கோளாறோ மூல நோயோ இதெல்லாம் இருந்தால் ஏங்கித் தியானித்து எங்கள் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று தியானியுங்கள்.

உங்கள் உடலில் சர்வ நோய்களும் நீங்கி
எல்லோரும் இந்த நிலை பெறவேண்டும்
என்று எண்ணியபின் இந்த உணர்வை ஏங்குங்கள்.

நீங்கள் நோயினை நீக்கிடும் அரும் பெரும் சக்தி பெறுகின்றீர்கள்.

உங்கள் உடலுக்குள் இப்பொழுது கரண்ட் (மின்சாரம்) பாய்கின்ற மாதிரி இருக்கும்.

உங்கள் உடலில் சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ, ஆஸ்மா நோயோ மூல நோயோ, இருதய நோயோ இதைப் போன்று இருந்தால்
அதில் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலப் பாய்ந்து
அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.

மின்சாரம் பாய்வது போலப் பாயும்.
உங்கள் உடலிலுள்ள வலிகள் குறையும்.
தலை வலியோ, இடுப்பு வலியோ எந்த வலி இருந்தாலும்
அதை நீக்கிடும் அருள் சக்தி பெறுகின்றீர்கள்.

கேன்சர், டி.பி. எல்லாமே இப்பொழுது உங்கள் உடலிலுள்ள சர்வ நோய்களும் குறையத் தொடங்கும்.

“அது களைந்து” கீழே இறங்கும் சக்தியை நீங்கள் உணரலாம்.

February 4, 2016

கடவுளின் பெயரால் தவறு செய்யாதே, “தெய்வீகச் செயலாக நீ செய்” என்பதே ஞானிகள் உரைத்தது

இன்று தவறான வழிகளில் பணத்தைச் சம்பாதிப்பர்வகள் என்ன செய்கிறார்கள்? அதிலே வரக்கூடிய சம்பாத்தியத்தை மற்ற ஏழைகளுக்குக் கொடுத்தால் இந்தப் பாவம் போய்விடும் என்று எண்ணுகின்றார்கள்.
அதே சமயத்தில் தவறு செய்யக் கூடாது என்றால் தவறான செயல்களைச் செய்து தவறால் வரும் பணத்தை வைத்து மற்ற தன் இன மக்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்.

அடமானமாக சொத்தையோ, வீட்டையோ, பொருளையோ வாங்கிக் கொள்வார்கள், பணத்தைக் கொடுப்பார்கள். இந்தச் சொத்துகளை அபகரித்துக் கொள்வதற்கு எதுவோ, அதையெல்லாம் செய்வார்கள்.

நாங்கள் கணக்கில் தப்ப மாட்டோம் என்பார்கள்.

காசைக் கொடுப்பார் இடையில் வாங்கிவிடுவார். ஆனால், ஒரு பைசா தள்ளிக் கொடுக்க மாட்டார்.

அதே சமயத்தில் இந்தப் பாவத்தையெல்லாம் போக்குவதற்காக பணத்தைத் தனித்து வைத்து அதற்காக வேண்டி கோவில்களில் அபிஷேகம் ஆராதனைகள் செய்வார்கள்.

பின், “உனக்காக வேண்டி நெய் அபிஷேகம் செய்கின்றேன்” என்ற நிலைகளில் உனக்குப் படைத்த படைப்புகள் என்று அதைக் கொடுப்பதற்காக சில சாமியார்களை அங்கங்கே கூட்டிக் கொண்டு போய் சாப்பாட்டைப் போட்டு “நீ வா... நீ வா... நீ வா... நீ வா...,” என்று அழைப்பார்கள்.

ஆனால், இவர்களிடம் வரவு செலவு செய்வோரிடம் அவனால் கொடுக்க முடியவில்லை, ஒரு ஒரு ரூபாய் குறைத்துக் கொள் என்றால் அது மட்டும் உதவாது.

இது சட்டத்திற்கு விரோதமானது. என் கணக்கிற்கு விரோதமானது என்று இப்படியும் பேசுவோரும் உண்டு. திருப்பிக் கொடுக்கவில்லையென்றால் அதிகாரிகளை வைத்துத் தட்டித் தீர்ப்பதும் உண்டு.

இதைப் போன்ற நிலைகளில் தான் நாம் கடவுளை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

எந்தத் தொழில் செய்தாலும் தனக்குள் வரும் பணத்தைக் கடவுளுக்காகக் கொடுப்பார்கள். உனக்குப் பங்கு உண்டு. ஆகவே, எனக்கு நீ உதவி செய் என்ற நிலையில் செய்வார்கள்.

ஆக, இவர்கள் எண்ணும் உணர்வை இவர்கள் உயிர் இயக்கி உணர்வின் நிலையாக அந்த உடலிலே இது உருவாக்கப்படுகின்றது என்ற நிலையை உணர்வதில்லை. இதைப் போன்ற நிலைகள் தான் நாம் மீண்டும் மீண்டும் சுழன்று நாம் இங்கே வந்து கொண்டிருக்கின்றோம்.

யாரையும் குறை கூறுகிறேன் என்று வைக்க வேண்டாம்.

தம்மையறியாது இயக்கும் இந்த நிலைகளை உணர்ந்து
மனிதனை மனிதனாக மதித்து
மனிதனின் உயிரைக் கடவுளாக மதித்து
மனிதனாகப் பெற்ற பெருமையை மகிழ்ந்து
தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்பதே
நமது ஞானிகளால் வகுக்கப்பட்ட நிலைகள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனிதனுடைய நிலைகளும் தனக்கென்று இல்லாது ஒவ்வொரு மனிதனையும் பார்க்கும் போது மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் அவர்கள் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்று பேதமற்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்திடும் நிலைகளைத்தான் எல்லா ஞானிகளும் உணர்த்தியுள்ளார்கள்.

ஆகவே, நமக்குள் எந்தப் பெருமை இருக்க வேண்டும்?

உலகெங்கும் அன்று தோன்றிய எல்லா மகான்களும் சரி, வான்மீகியும் சரி, வியாசரும் சரி, இன்றைய நிலைகளில் இராமகிருஷ்ண பரமகம்சரும் சரி, கடவுளின் பெயரால் தவறுகள் செய்யாதீர்கள்..,” என்றுதான் மக்களுக்குப் போதித்தார்கள்

.கடவுளின் பெயரால் தெய்வ குணத்தை உனக்குள் வளர்த்து, விளையச் செய்து
"நீ கடவுளின் செயலாகச் செய்" என்றுதான்
அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

February 3, 2016

உயிரால் உருவாக்கப்பட்ட அணுக்களின் மலம் உடலாகின்றது, உயிர் - உடல் - உணர்ச்சி

நமது பிரபஞ்சத்தில் எது எது எவ்வாறு உருவாகினும் நாம் நஞ்சினைச் சுவாசிப்போம் என்றால் அதைச் சுவாசித்தபின் நம் உயிரில் பட்டு நம் உடலிலுள்ள அணுக்களில் நஞ்சு பாய்ந்துவிடுகின்றது.

நமது உடலிலுள்ள அணு செல்கள் இயங்கவில்லை என்றால் உயிரும் அதை இயக்குவதில்லை.

ஆகவே, அதுவும் ஓம் நமச் சிவாய என்று நாம் எண்ணும் போது நம் உடலின் தன்மை அனைத்துமே இழந்து விடுகின்றது. இதைப் போல காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எண்ணிய உணர்வுகள் நல்லவை கெட்டவை அனைத்தும் நம் உடலாக அமைந்து விடுகின்றது.

இதைத்தான் ஓம் நமச் சிவாய ஓம் நமச் சிவாய என்பது. அப்படியென்றால் நம் உடலை சதா சிவமாக்கிக் கொண்டயுள்ளோம்.

அதே சமயம் நாம் எண்ணியதை உயிர் ஜீவ அணுவாக மாற்றும் போது நம் உடலாக உருவானாலும்
உடலில் அந்த ஜீவ அணுக்களில் தாக்கப்படும்போது
அந்த வேதனையின் உணர்ச்சியை
நம் உயிர் நமக்குள் மீண்டும் உணர்த்துகின்றது.

இந்த உடலில் எந்த நிலைகளில் எந்தத் திசையில் எந்தக் கோணத்தில் நாம் இருந்தாலும் நமது தலை முடி இருக்கிறதென்றால் அது நம்முடன் ஒட்டி அதற்குண்டான அமிலச் சக்தியை அது கவர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அதிலிருக்கும் ஒரு அணுவின் மலம்தான் அது.

அந்த அணு நம் சிரசின் மேல் நம் உடல் மேல் ஒன்றியிருக்கப்படும் போது அதை இழுத்தோம் என்றால் அதே சமயம் நம் உயிருக்கு அந்த உணர்வுகள் வருகின்றது.
                           
அந்த அணு எதனால் உருவானதோ
அதனிடமே அதனின் நிலைகளை எண்ணி அதைச் சொல்கிறது.
அதை உணர்வால் உணர்த்துகின்றது.

இதைப் போன்றுதான் நம் உடலில் எந்த மூலையில் எதனுடைய நிலைகளை எடுத்தாலும் சிறு ஊசியில் தைத்தாலும் உடனே உயிரான ஈசனுக்கு அறிவிப்பாகின்றது.

ஏனென்றால், நாம் எண்ணிய உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் சத்தை “ஓ” என்று ஜீவனாக்கி “ம்” என்று நம் உடலாக்கப்படும் போது
உடலிலிருந்து ஜீவ அணுவாக இயக்கி
நாம் சுவாசிக்கும் உணர்வை அதனைத் தனக்குள் ஆகாரமாக ஏற்று
அதனின் மலம் நம் சரீரமாக மாறிக் கொண்டே வருகின்றது.

நம் உடலில் எத்தனையோ விதமான குணங்களின் அணுக்கள் உருவானாலும் அதனின் மலங்களே நம் சரீரமாக ஆகின்றது. இருப்பினும் சில மலங்களில் அதனுடைய தன்மைகள் வேதனை தெரியாது.

இப்பொழுது நகம் இருக்கிறதென்றால் பல அணுக்களின் மலமே நகம். பல அணுக்களின் மலமே முடி. இருப்பினும் நகத்திற்கு உணவாக மலத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் அம்முகப்பில் உடலுடன் ஒட்டியிருக்கும் இந்த நிலையை இந்த நகத்தை நாம் பெயர்த்தால் அது வேதனைக்குண்டான நிலைகளாகி அது உயிருக்கு உணர்த்துகின்றது.

அந்த மலத்தின் தன்மை வளர்ச்சியின் தன்மை வரப்படும் போது தசைகள் அல்லாது வெளிப்பட்டதை (நகத்தை) நாம் தொட்டால் அந்த உணர்ச்சிகள் தெரிகின்றது. வேதனை தெரியாது.

ஆக, நகக் கண் நகத்திற்குள் இருக்கும் நிலைகளை இந்த உணர்ச்சிகளை உந்தி இந்தக் கை விரல்களுக்கு வலு ஊட்டும் நிலையாக இருக்கின்றது.

இருப்பினும் நகக் கண்ணுக்குள் சிறிதளவு அதனின் உயிரணுக்களில் அதனின் மலத்தை உமிழ்த்திக் கொண்டிருக்கும் போது
அந்த அணுக்களில் லேசாகப் பட்டாலும்
இந்த உணர்வின் வேகத்தை வேகமாக
நமக்கு அதனின் வேதனையை உணர்த்துகின்றது.

இப்படி, நமது உயிர் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தையும்
ஜீவ அணுவாக மாற்றி சிவமாக
ஒரு உருவாக மாற்றிக் கொண்டுள்ளது.

இதிலே வேதனைப்படும் அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் அந்த அணுக்கள் பெருகிவிட்டால் நாம் சிறிதளவு இப்படித் தொட்டாலும் மேல் முடி பட்டாலோ துணி பட்டாலும் அங்கே வேதனை உணர்ச்சிகளை அதிகமாகக் கூட்டும்.

ஆகவே அந்த வேதனை மற்ற அணுக்களில் ஊடுருவப்பட்டு அந்த அணுக்களும் இந்த வேதனையை அனுபவிக்கும் தன்மையில் இருப்பதால் சிறிதளவு அசைத்தாலும் அந்த நிலைகள் நமக்குள் உணர்த்துகின்றது.

இவை அனைத்திற்கும் மூலமாக இருப்பது யார்? உயிர்”.

February 2, 2016

மெய்ஞானியின் பார்வையில் கேன்சர் நோய் - கேன்சல்

விஞ்ஞான அறிவால் உடல் கூறுகளுக்கு நாம் பல வசதிகளைச் செய்யலாம். இந்த உடல் கூறின் மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் பல இருப்பினும் இதிலே இன்று கேன்சர் என்ற நோயும் வருகின்றது.

கேன்சர் நோய் வந்ததென்றால் அதனின் விஷத் தன்மை நமக்குள் மற்ற விஷத்தன்மை வாய்ந்த நிலைகள் அதாவது
ஒவ்வொரு அணுவிலும் இருக்கக்கூடிய விஷத்தன்மையை
அதற்குக் கிடைக்காது அதை இது (கேன்சர்) உறிஞ்சிக் கொள்ளும்.

ஏனென்றால், ஒரு அணுவிற்குள் இருக்கும் விஷத் தன்மைதான் அதை இயக்கும் ஆற்றல் கொண்டது. அந்த விஷத் தன்மை உணர்வின் தாக்குதல் இல்லையென்றால் நற்குணங்களை இயக்குவதில்லை.

ஆக, அதைக் குவித்து மற்ற உணர்வுகளுக்குச் செல்லாது தடைப்படுத்தி
இது விளையும் நிலைகள் வரும் போதுதான் “கேன்சர்”
மற்றதை வளரவிடாதபடி இதனின் வேகத் துடிப்பு அதிகரிக்கின்றது.

ஆனால், இதை நீக்க அன்றைய மெய்ஞானிகள் என்ன செய்தார்கள்? இன்று (விஞ்ஞானிகள்) டாக்டர்கள் கொடுப்பது போல மருத்துவம் கொடுக்கவில்லை. 

கேன்சர் என்றால் மெய்ஞானிகள் பார்வையில் அந்தக் கேன்சர் நோய் - கேன்சல்” - சுத்தமாக அதை நீக்கிவிடும்.
ஆக அவருடைய எண்ணங்கள் கொண்டு
தனக்குள் சுட்டுப் பொசுக்கும் நிலையாகவே தான் இருந்த்து.

கேன்சர் நோயை நீக்கும் தாவர இனங்களும் அக்காலத்தில் உண்டு.

மற்ற மனிதனை நஞ்சு கொண்ட நிலைகள் இதைப் போன்று தாக்குமே என்றால் அந்த உணர்வின் தன்மையை உற்று நோக்கி நோயினை நீக்கியுள்ளான் அன்று அகஸ்தியன்

அந்த நோயினை வெல்லும் தாவர இனச் சத்தை அவன் அதற்கு நேராக வைத்து
சூரியனின் ஒளிக் கதிர்களை அதிலே பாய்ச்சப்படும் போது
அந்த ஒளிக் கதிரின் நிலைகள் ஊடுருவி
நோயுற்றவவன் உடலுக்குள் சென்றபின்
கேன்சர் நோய் நீங்கியது.

காலத்தால் இவை மறைந்துவிட்டது. ஆனால், நாம் இன்று விஞ்ஞான அறிவில் வளர்ந்து கொண்டதால் விஞ்ஞான அறிவினைத்தான் நாம் இன்று போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளோம்.

இன்று ஒவ்வொரு விஞ்ஞானியும்
அவரவர்கள் கணிப்பிற்குத் தக்கவாறு
புதுப் புது நோய்களை வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள்

உலகம் நாளைக்கு என்ன ஆகின்றதோ எது கெட்டுப் போகின்றதோ எது என்ற நிலைகளில் அவர்கள் அச்சுறுத்தும் உணர்வின் தன்மைதான் வருகின்றது.

உலகம் முழுவதற்கும் இந்த நிலை வரப்படும் போது இதைக் கேட்டுணர்ந்த உணர்வுகளில் தீமையின் உணர்வே அவர்களுக்குள் விளைந்து தீமையின் சக்தியைத்தான் விளைய வைக்க முடிகின்றது.

அச்சுறுத்தும் இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவிக்கும் போது அந்த உணர்வின் தன்மை பதிவு செய்து அதனின் ஆற்றலைப் பெருக்குவோம் என்றால் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் உணர்வுகள் இதை ஒவ்வொரு மனிதனும் நுகர்ந்தால் அதன் உணர்வு தீமைகளையே விளைய வைக்கும்.

ஏனென்றால், அவனுக்குள் தீமையென்ற உணர்வை விளையச் செய்தான். அந்த உணர்வின் அலையைப் பரப்புகின்றான். அதை உற்று நோக்கினால் அந்த உணர்வின் தன்மை ஊழ்வினையாக வித்தாக அது பதிவாகின்றது.

மீண்டும் நினைவாற்றல் அந்தத் தீமையே தனக்குள் வரும்படி செய்கிறான். அப்பொழுது இவனின் நல்ல உணர்வுகள் மாறுகின்றது, இவன் சிந்தனையற்றவனாக மாறுகின்றான்.

ஏனென்றால், விஞ்ஞான அறிவின் தன்மைகள்
எவ்வளவு உன்னிப்பான நிலையில் கவனிக்கின்றனரோ
மனித வாழ்க்கைக்கு உகந்ததல்ல.

ஆனால், அவனுடைய அற்புதங்கள் கண்டுபிடிப்பதிலே தான் இருக்கும். மனிதனின் உணர்வில் தீமையை அகற்றும் நிலை அங்கே இல்லை.

விஞ்ஞான அறிவில் இன்று கண்டுணர்ந்த சில மருந்துகள் கடுமையான நிலைகள் கொண்டது.

நம் உடலில் சாதாரணமாக ஒரு நோய் வருகிறதென்றால் அந்த நோயை உருவாக்கும் தன்மையை நீக்க அதைக் காட்டிலும் ஒரு நல்ல உணர்வின் தன்மை அதை வளர்க்கும் அதனுடன் நஞ்சைக் கலந்து அதை உடலுக்குள் கொடுப்பார்கள்.

அந்த மருந்தைக் கொடுத்தபின் வேகமாக எதை இந்த நஞ்சைத் தாங்கியதோ அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த மருந்து உடலிலே பரவும்.

ஆக, எது தீங்கு செய்கின்றதோ அதனின் நிலைகளில் இது தீங்கு செய்யும் உணர்வாக எதிர் மறையாகக் கொடுக்கப்பட்டு இதற்குள் சென்றபின் இந்த நஞ்சின் வேகம் அதற்குள் புகுத்துகின்றது.

நோயை உருவாக்கிய அந்த நஞ்சும் இதுவும் இரண்டறக் கலந்தபின் இதனின் உணர்வை அதற்குள் சேர்த்தபின் நோயை இது மாற்றுகின்றது.

இருப்பினும், இவன் எதை மாற்றி இதற்குள் எதிர்மறையாக அனுப்புகின்றானோ அது புதுவிதமான உணர்வாக அது மாறி மற்றொரு நோயை இது நிச்சயம் உருவாக்கும்.

ஆனால், மெய்ஞானிகளால் கொடுத்த உணர்வோ இயற்கையில் விளைந்த தாவர இனச் சத்தின் தன்மையும் அதைத் தன் எண்ணத்தால் உணர்வின் தன்மை செலுத்தப்பட்டு தன் நினைவாற்றலால் ஊடுருவச் செய்கின்றான்.

இந்த ஊடுருவல் அங்கே சென்றபின்
எந்தத் தாவர இனச் சத்தோ அதை நுகர்ந்து
இதை ஜீவன் பெறச் செய்யும் போது
தீமைகளை நீக்கிடும் நிலையாக வருகின்றது.

எந்தத் தாவர இனச் சத்தை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் சத்தாக ஜீவ அணுவாக மாறுகின்றதோ அந்த அணுவின் தன்மைதான் மற்ற நிலைகளை உருமாற்றும் நிலை உருவாகின்றது.

ஆக, இதைப் போல அன்று தத்துவ ஞானிகள் இயற்கையின் நிலைகளைக் கண்டுணர்ந்தவர்கள் ஏராளம், ஏராளம்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள், அவர்களுக்குள் விளைந்த நஞ்சினை நீக்கிடும் உணர்வின் ஆற்றல் இன்றும் நமது பூமியில் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக பரம் என்ற இந்தப் பூமியில் பரமாத்மாவாக சுழன்று கொண்டேதான் உள்ளது.

அதை நாமும் பெற முடியும். பெற்று, எத்தகையை கொடிய நோயையும் தீமைகளையும் நீக்க முடியும்.

February 1, 2016

உள் நின்று அது இயக்குவது உயிர் – “கடவுள்”

எண்ணியதை இயக்கிக் காட்டுவது உயிர்.

எண்ணிய உணர்வின் தன்மையை தன் உணர்வால் அது கடவுளாக இருந்து
இந்த உணர்வின் சத்தை அந்த உடலுக்குள் சென்று
அதனின் உணர்வின் தன்மை கொண்டு அது உடலாக மாற்றுகின்றது.

ஆகவே, இதைத்தான் கடவுள் என்பது.

·         உள் நின்று உணரும் அந்த உணர்வின் தன்மையை உடலாக்குவதும் கடவுளே.
·         அதை இயக்கிக் கொண்டிருக்கும் உயிர் கடவுளே.
·         தான் நுகர்ந்த உணர்வை உள் நின்று இயக்கும் செயலாக மாற்றுவது உயிரே.
·         எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் அதுவே.
·         ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் அதுவே.

மகரிஷிகள் காட்டிய இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்ந்து கொண்டால் போதும்.

இப்படித்தான் பல கோடிச் சரீரங்களில் நம் உயிர் கடவுளாக நின்று எண்ணியதைத் தனக்குள் ஆன்மாவாக மாற்றி அதாவது பரமாத்மாவாக மாறுவதை ஆன்மாவாக மாற்றித் தனக்குள் ஜீவான்மாவாக (உடலாக) மாற்றுகின்றது.

 உயிரே உள் நின்று கடவுளாக ஒவ்வொரு உணர்வுகளிலும் உறுப்புகளிலும் நமக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

உருவுக்கு உறுதுணையாக இருக்கும்
உயிரின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது
என்ற நிலையைத்தான் தெளிவாக எடுத்துரைத்தார் அன்று வியாசர்.

ஆதியில் கண்டுணார்ந்த உணர்வின் தன்மையைப் பகுத்தறிந்து உணர்வின் செயலால் சாதாரண தன் இன மக்களுக்கும் இது கிடைக்க வேண்டும் என்று இந்த 4000 ஆண்டுகளுக்குள் இவ்வளவு தெளிவான நிலைகளில் தெளிவாக்கினார்.

ஆனால், இதைச் சாஸ்திரமாக்கப்பட்டு சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள்.

சாங்கியங்கள் செய்யும் நிலைகளால் இன்று நாம் மனிதனின் முழுமையின் உண்மையை அறியாதபடி மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலை தடுமாறி வாழ்ந்து கொண்டுள்ளோம்.

கடவுளுக்கு நைவேத்தியம் செய்தால் நம்மைக் காப்பான் என்றும், அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்தால் மகிழ்ந்து நமக்கு உதவி செய்வான் என்ற இந்த எண்ணங்களைத் தான் நமக்குள் உருவாக்கிவிட்டார்கள்.

மனிதன் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் எடுத்தால் இந்த வாழ்க்கையில் வரும் தீமையான உணர்விலிருந்து மீள முடியும். அந்த மகரிஷிகள் சென்றடைந்த இடத்தை நாம் சென்றடைய முடியும்.

அந்த மகரிஷிகள் சென்ற இடத்தை அடையத்தான் இந்த உபதேசத்தையே கொடுக்கின்றோம்.

அந்த மகரிஷிகள் ஒவ்வொருவர் சொன்னதையும் உபதேசித்து  உங்களுக்குள் தெளிவாக்கிப் பதிவாக்கி அதன் உணர்வை நினைவாக்கினால் உங்களைக் காக்கலாம். உங்கள் மூதாதையர்களையும் விண் செலுத்தலாம்.

நாம் இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலையை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு உணர்த்தினார்.

அவர் அருளிய அந்த அருள் வழிப்படி அனுபவத்தின் வாயிலாக இந்த உணர்வின் இயக்கங்களை அறியச் செய்கின்றோம். உங்கள் எல்லோருக்குள்ளும் உணர்வைப் பதியச் செய்கின்றோம்.

இந்த உணர்வால் தன்னைத் தான் அறிய முடியும்
இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றிட முடியும்

தீமையற்ற உணர்வை ஒவ்வொருவரும் தன்னுள் விளைய வைக்க முடியும்.