ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 22, 2026

டெலிபதி என்பது உண்மைதான்

டெலிபதி என்பது உண்மைதான்


இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களைத் தியான நிலைக்கே அழைத்துச் செல்கின்றோம்.
1.வாழ்க்கையில் வந்ததை எல்லாம் மறந்து விட்டு
2.உங்களை எல்லாம் நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்திற்குத் தான் கொண்டு செல்கின்றோம்.
3.இந்த உணர்வுகள் சேரச் சேர உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எல்லாம் ஒளியாக மாறும்.
 
யாம் உபதேசம் கொடுக்கும் பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…? வீட்டில் பொருட்களை எல்லாம் அப்படியே வைத்து விட்டு வந்திருக்கின்றோம்…! கதவு திறந்திருக்கிறது…! ஒருவேளை திருடன் வந்து விடுவானா…! என்று நினைத்தால் திருடன் நிச்சயம் அங்கே போவான்.
 
அதே போன்று வீட்டை விட்டு விட்டு வந்து விட்டோம்நம் பிள்ளைகள் எல்லாம் அங்கே என்ன செய்கின்றதோ…? ஏது செய்கின்றதோ என்று எண்ணினால் அங்கே ஏதாவது அவர்கள் நிச்சயம் குறும்புத்தனம் செய்வார்கள்.
 
நான் நினைத்தேன்நினைத்த மாதிரி நடந்து விட்டதே என்று சொல்வீர்கள்.
 
ஆனால் வீட்டில் எல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எப்படி எண்ண வேண்டும்…?
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
2.அங்கிருப்பவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கிருந்து எண்ணி அதை அங்கே அனுப்ப முடியும்.
3.டெலிபதி போன்று இது வேலை செய்யும்.
 
உங்கள் அனுபவத்தில் நீங்கள் அதை நிச்சயம் உணர முடியும்.
 
துரோகம் செய்தான் பாவிஅவன் உருப்படுவானா…? என்று பகைமை கொண்டவனை நாம் எண்ணினால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும்…” அவனைச் சென்று இந்த உணர்வு ஆட்டிப் படைக்கிறது எல்லவா…!
 
அது போன்று தான் நம் குடும்பத்தில் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு என்றோ நாம் செய்யும் தொழிலுக்கு நல்லதோ என்று இருந்தாலும்
1.நாம் பாய்ச்சும் அந்த உயர்ந்த சக்தி அங்கே சென்று நல்லதாக அது இயக்கும்.
2.அருள் உணர்வு கொண்டு அங்கே நாம் இணைத்து விட்டால் எதையும் நாம் சீராக்க முடியும்.
 
ஏனென்றால் குருநாதர் எம்மைத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைத்தார். யாம் உங்களை எல்லாம் இந்த உபதேசத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றோம்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்ளுங்கள்.
1.சூரியன் எடுத்து வைத்துக் கொள்கிறதுஅதை இந்தக் காற்று மண்டலத்தில் பரவச் செய்கிறது.
2.அதே போல் உங்கள் வீட்டிலேயும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகமாகப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்குடும்பத்தில் சந்தோஷம் வரும்.
 
அதே போன்று நாங்கள் வசிக்கும் எங்கள் தெருவெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று பரப்புங்கள். உங்கள் தெருவிலும் அமைதி வரும்.
 
ஒரு சிலர் தவறான நிலைகள் கொண்டு செயல்பட்டாலும் அவர்களுக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பாய்ச்சி அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்தால் தீமைகளை நீக்கக் கூடிய அரும்பெரும் சக்திகளாக நாம் வளருவோம்.
 
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் வளர்த்து குடும்பத்தில் பெருக்கி ஊரிலும் உலகிலும் பெருக்கி
2.தீமைகளை அகற்றிடும் சக்தி வாய்ந்த நிலைகளாக நாம் உருவாக்க வேண்டும்.
 
அது தான் கூட்டுத் தியானத்தின் நோக்கம்.