
காற்றிலே எத்தகைய விஷமான உணர்வு வந்தாலும் அது நமக்குள் புகாது தடுக்கும் ஒரு பயிற்சி வேண்டும்
பூச்சி புழுக்களைக் கொல்லத் தாவரங்களுக்குப் பூச்சிக்கொல்லி
மருந்துகளை அடிக்கிறோம். பூச்சிகள் சாகின்றது. அந்த விஷங்களை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக்
கொள்கின்றது.
எந்தச் செடிகளிலும் சேராது அந்த விஷங்கள் ஒதுங்கி நிற்கும். செடியிலே இணைந்தது வித்திற்குள் சிறிதளவு
உருவாக்குகின்றது.
1.ஆனால் எதிலும் ஈர்ப்பு இல்லாது ஒதுங்கி
நிற்பதை நாம் அந்தப் பாதையில் சென்று அந்த வாசனையை நுகர்ந்தோம் என்றால்
2.நம் உடலில் உள்ள அணுக்களில் சிறிதளவு சேர்ந்து
விடுகிறது.
3.அந்த விஷத்தை உணவாக உட்கொள்ளும் அணுவாக
உடலுக்குள் உருவாகின்றது.
ஒரு தரம் அந்த விஷத்தை நுகர்ந்து விட்டால் அணுக்களில் அது
இணைந்த பின் அதற்கு அந்த ருசி தேவை. அது விஷத்தை உணவாக எடுத்துக் கொள்கின்றது.
இன்று எத்தனையோ புதுவிதமான விதைகளை விஞ்ஞானிகள்
உருவாக்குகின்றார்கள். இதே போன்று நாம்
எத்தனையோ கெமிக்கல் கலந்த ரசாயணங்களை உபயோகப்படுத்துகின்றோம். ஆடைகளிலே நிறங்களுக்காகச் சாயம் பூசுகின்றார்கள்.
இந்த விஷத்தன்மைகளை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி
கவர்கின்றது… நீரிலும் கலக்கின்றது… ஆவியாக மாறி மேலே படர்கிறது… காற்றிலும் படர்கின்றது.
மனிதனால் இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த விஷங்களை
1.மனிதர்கள் மீண்டும் சுவாசிக்கப்படும் பொழுது
தீமையான அணுக்களாகவே உடலுக்குள் உருவாகின்றது.
2.ஆசையின் நிமித்தம் செய்தாலும் இது நமக்குள்
மாறிவிடுகின்றது.
3.இப்படி எல்லாம் நம்மை அறியாதபடியே தீமைகள்
வருகிறது. உறுப்புகள் கெடுகிறது…!
அப்படி ஆகாமல் தடுக்க வேண்டும் அல்லவா…!
இராமாயணத்தில் உணர்வுகள் உணர்ச்சிகள் என்று
காட்டியிருப்பார்கள். கிரேதா யுகம்…! கோள்கள் செடி கொடிகள் இவையெல்லாம் கிரேதா.
திரேதா…! சுவாசித்த உணர்வு அதாவது
மனிதர்கள் நாம் அதை நுகர்ந்த பின் உடலுக்குள் சேர்த்த பின் திரேதா யுகத்தில் சீதா
ராமனாகத் தோன்றுகின்றார். “எந்தச்
சுவையோ அதன் எண்ணமாக…” நமக்குள் வருகின்றது.
வேதனைப்பட்டு விட்டால் “அம்மா…!” என்று சொல்கிறோம்.
மயக்கமாக வருகிறது என்று சொல்கின்றோம். எதனால் வருகிறது…? மயக்கப்படச் செய்யும் உணர்வை நாம் நுகர்ந்ததால்...!
1.ஆனால் “மயக்கமாக
இருக்கிறது…” என்ற அந்தச் சொல்லை இன்னொருவர் காதில் கேட்டால்
2.அவர்கள் தைரியமானவர்களாக இருந்தாலும் சிறிது
நேரத்தில் அங்கேயும் ஒரு மயக்கம் வருகிறது.
தவறு செய்யவில்லை… இப்படி எல்லாம் வருகின்றது. ஆக தவறு செய்யாமலேயே
நம்முடைய உணர்வுகள் இப்படி மாறிக் கொண்டே வருகிறது.
நம்மை அறியாமலே எத்தனையோ தீமைகள் சுவாசத்தின் வழி வருகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள்
பெற வேண்டும் என்று அதைச் சுவாசிக்க வேண்டும். ஆயுள் கால மெம்பர்களுக்கு அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்திக்
கொடுக்கின்றோம்.
ரோட்டிலே செல்கின்றோம்…
1.ஒரு கெட்ட வாசனை வருகிறது என்றால் அது
நமக்குள் அணுவாக உருவாகாதபடி தடுக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளியை எடுத்து “ஈஸ்வரா…” என்று
உயிரை எண்ணி நிறுத்திப் பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும்
படர வேண்டும் என்று நமக்குள் வலுக் கூட்டி விட்டோம் என்றால்… நம் ஈர்க்க மறுத்த அந்தக் கெட்ட வாசனையைக்
கொஞ்சம் கொஞ்சமாக நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து (ஆன்மாவிலிருந்து) அகலச் செய்து அப்புறப்படுத்திவிடும்.
1.ஏனென்றால் அதைக் காட்டிலும் இந்தத் துருவ
நட்சத்திரம் சக்தி வாய்ந்தது… நம்முடைய ஆன்மா சுத்தமாகிறது.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முடைய
ஆன்மாவிலே சக்தி வாய்ந்ததாக நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அதற்குத்தான் தியானத்திலே உங்கள் நினைவுகளை எல்லாம் “துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு
செல்கின்றோம்….” அதை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ள
வேண்டும்.