
விஞ்ஞானத்தின் விளைவால் வரும் விஷத்தை அடக்கி அதை ஒளியாக மாற்றுங்கள்
இன்று “பல கெமிக்கலைக் கலந்து…” பல விதமான வர்ணங்களை உருவாக்குகின்றார்கள். அத்தகைய வர்ணங்களை ஆடைகளில் ஏற்றப்படும் பொழுது
விஷத்தன்மையாகின்றது.
1.அந்த ஆடையை நாம்
அணிந்திருக்கும் பொழுது அது உடலுடன் ஒட்டி
2.எந்த விஷத்தின் தன்மை (வர்ணமாக) ஆடையில் கலக்கப்பட்டதோ
3.அது வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டுக்
காற்றிலே கலந்திருப்பது
4.நம் ஈர்ப்பிற்குள் வந்து
உடலில் ஜீவன் பெறும் சக்தியாக மாறும்.
இதன் வழி அந்த
விஷத்தன்மைகள் நம் உடலுக்குள் சிறுகச் சிறுக ஊடுருவத்
தொடங்கும். எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!
விஞ்ஞான உலகில் வாழுகின்றோம்… ஆனந்தமாக இருக்கின்றோம். ஆனால் மேலே சொன்ன விஷ
தன்மைகள் பரவி அணுக்களின் தன்மை மாற்றப்படும் பொழுது உறுப்புகள் சிதைந்து விட்டால்
“மாற்று உறுப்புகளைச் செய்து…” மனிதனை வாழ வைக்கின்றார்கள்.
எத்தனையோ வகையான மாற்றங்களை
இன்று பார்க்கின்றோம் அல்லவா…!
சர்க்கரைச் சத்து உடலில் அதிகமாகும் பொழுது…
1.மற்ற இணைந்து வாழ்ந்து மகிழ்ச்சியூட்டும்
உணர்வுகளில் அது பிரிக்கப்படும் பொழுது…
2.ஒன்று சேர்த்து வாழும் அந்த சர்க்கரைச் சத்து என்ற நிலைகள் ரத்தத்தில்
அதிகமாகி விடுகின்றது.
3.சர்க்கரைச் சத்து என்று சுவை
மிக்க நிலை வரும் போது தீய அணுக்களைப் பரப்பும் தன்மை வருகின்றது.
4.ரத்தத்திலே கலக்கும் நல்ல அணுக்களை மாற்றி… ரத்தத்தில் இருக்கும் உணர்வை இது எடுத்துக்
கொள்கின்றது.
5.ஆனால் நீராக மாற்றி விடுகின்றது.
ரத்தம் நீராக மாறி விட்டால் என்ன ஆகும்…? ஊடுருவித் தன் நிலைகளை மாற்றி விடுகிறது.
மனிதனாக வாழும் காலத்தில்… உடலுக்குள் தீய விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய கெமிக்கல்களை நுகர்ந்து விட்டால் “டாக்டரிடம்
சென்றால்… ரத்தத்தைத் காணோம்…” என்பார்.
மனித வாழ்க்கையில் இப்படி எல்லாம் விஞ்ஞான உலகில் சர்வ
சாதாரணமாக நடந்து கொண்டுள்ளது.
இதை மாற்றுவது யார்…? இதை மாற்றி அமைத்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? இந்த விஞ்ஞான உலகில் இத்தகைய
தீய விளைவுகளிலிருந்து மனிதன் தப்ப வேண்டுமா
இல்லையா…?
அதற்குத் தான் ஆத்ம சக்தி
என்ற கடுமையான ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். பல விதமான உணர்வுகள் தாக்கப்படும் பொழுது
1.அந்த உணர்வின்
உணர்ச்சியின் இயக்கங்களைப் பற்றி இந்த உபதேச வாயிலாகச்
சொல்லப்படும் பொழுது இதுவும் பதிவாகின்றது.
2.இந்த உணர்வால் வரப்படும் பொழுது தன்னை எது இயக்குகின்றது…? என்பதைத்
தன்னை அறிந்து கொள்ள முடியும்.
அடுத்த நிமிடமே ஆத்ம சுத்தி செய்தால் உங்களுடைய மனக் கலக்கம் நீங்குகின்றது… வரும் வேதனை உணர்வுகள் தடுக்கப்படுகின்றது… துருவ நட்சத்திரத்தின் சக்தி ஈர்க்கப்படுகின்றது…
அதன் வலுவின் தன்மை நமக்குள் சேர்க்கப்படுகின்றது.
காரணம்… இன்று மின்னல்கள் தாக்கப்படும் பொழுது வெள்ளிக் கோள் அந்த
உணர்வின் அலைகளைத் தனக்குள் எடுத்துக்
கொள்கின்றது. இதைப் போல்
1.உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்யப்படும் பொழுது
2.மின்னல்கள் கடுமையான நிலைகளை எடுத்தாலும்
3.இந்த உணர்வின் தன்மை கண்
கொண்டு பார்த்தாலும் உயிர்வழி ரத்தத்தில் கலக்கப்பட்டு
4.உடலில் உள்ள அணுக்கள் ஒளிக்கற்றைகளாக மாற்றும்.
மின்னல் (ஒளியின்
தன்மை) என்பது 27 நட்சத்திரங்களின் எதிர்நிலையான
போர் மறை தான் அது.