
“என்னுடைய சீடர்கள்…” படிக்க வேண்டிய மிக முக்கியமான உபதேசம்
எமது உபதேசங்களைக்
(ஒலி நாடாவில்) கேளுங்கள்.. நூல் வடிவில் வந்த புத்தகங்களைப் படியுங்கள். அதனின் விளக்கத்தைச் சொல்லிப் பழகுங்கள்.
1.சாமி இந்த மாதிரிச் சொல்லி
இருக்கின்றார்…
2.ஆகவே இந்த மாதிரி நடக்க வேண்டும் என்று
வெளிப்படுத்துங்கள்.
காரணம்… எம்முடைய உபதேசங்களைக் கேட்டாலும் வாழ்க்கை நடைமுறைகளில் அதை வெளிப்படுத்தும்
போது ஆழமாகப் பதிவாகும்.
1.அப்படிப் பதிவாக்கி விட்டால் தவறு என்று வந்தால்
2.“டக்…” என்று பிரேக்
போட்டு… “திருத்தி வாழச்
செய்யும் உணர்வுகள்…” நமக்குள் வரும்.
உதாரணமாக… ஒரு இன்ஜின் ஓடிக்கொண்டிருக்கின்றது
என்று வைத்துக் கொள்வோம். கற்றுக் கொண்ட என்ஜினியர்கள் அதில்
வரக்கூடிய சப்தத்தை வைத்தே “இன்ன இடத்தில் குறைபாடுகள் இருக்கிறது…” என்று கண்டுபிடிக்கின்றார்கள். அதே போல மெக்கானிக் இதை எல்லாம் செய்கின்றார்.
இந்த இடத்திலே இன்னென்ன உலோகங்கள் இப்படி இப்படிச் செய்தால் இயந்திரத்தில்
அந்த இடத்தில் வலுவாக இருக்கும் என்று இஞ்சினியர் சொல்வார்.
1.அவ்வாறு அதைச் செய்து
கொண்ட நிலையில் ஓடும் பொழுது சப்தம் வந்தால்…
2.அதிலே இன்ன இடத்தில்
பலவீனமாக இருப்பதால் தான் குறைபாடாகின்றது என்று கண்டறிந்து
3.அந்த மெக்கானிக் அதைச்
சரி செய்கின்றார்… இல்லையா…?
அதே போன்று தான் மேலெழுந்தவாரியாக யாம் கண்டுபிடித்த உணர்வுகளை உங்களிடம்
உபதேசிக்கின்றேன். நீங்கள் மெக்கானிக்காக ஆக மாற
வேண்டுமா இல்லையா…!
அதை எடுத்து
1.“சாமி…!” இன்ன இடத்தில் இந்த மாதிரி இருக்கிறது…
2.எப்படித் திருத்தி வாழ்வது என்று கேட்டால் சொல்ல முடியும்
அல்லவா…!
ஆகவே… எமது உபதேசத்தைக்
கேட்டுப் பதிவாக்கி அதை வளர்த்துக் கொண்டவர்கள் அனைவருமே இந்த அருள் வழியில் தயாராக வேண்டும்…
அருள் சேவைக்கு முன்னுக்கு வர வேண்டும்.
ஏனென்றால் ஆரம்பத்திலே நானும்
1.குருநாதர் காட்டிய வழியில் வளர்த்துக் கொண்ட
அருள் உணர்வுகளை முதன் முதலில் வெளிப்படுத்தும் போது
2.கூட்டத்தைக் கண்டபின் பட…பட… என்று சொல்லக்கூடிய நிலையாகி மறந்து போயிருக்கிறது.
எல்லோருக்கும் அப்படித்தான்…! துணிவுடன் பேசும் பொழுது தன்னாலே வந்துவிடும்.
தியானத்தில் எடுத்து சக்திகளைப் பெறுகின்றீர்கள்… இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று சொல்கிறோம். தியானத்தை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோமே…! என்று சோர்விலே கொண்டு போய் விட்டு விட்டால் என்ன செய்வது…?
தோசையைச் சுட வேண்டும்… எல்லோருக்கும் அதைக் கொடுக்க வேண்டும் என்று ஆசை
இருக்கின்றது. ஆனால் நெருப்பைக் கூட்டி
விட்டால் என்ன ஆகும்…? அடிபிடித்து விடும்… நெருப்பு அதிகமாகும் இடமெல்லாம் கருகிவிடும்.
சீக்கிரம் எல்லோருக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினோமே…
இப்படிக் கருகிப் போய்விட்டது என்று தோசைச் சட்டியைச் சுரண்டு சுரண்டு என்று இப்படி ஒரு இரண்டு தரம் ஆகிவிட்டால் “அந்தச் சட்டியையே தூக்கி எறிந்து விடுவோம்…”
1.தியான வழியில் நம்முடைய மனது அது போல்
ஆகிவிடக்கூடாது.
2.ஏனென்றால் தியான வழியில் நாம் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
பொறுமையாக இருக்க வேண்டும்.
3.நாம் சுவாசிக்கும்
உணவுகள் அனைத்தையும் ருசியாக மாற்ற வேண்டும்.
அவசர புத்தி என்ன செய்யும்…? தப்புத் தப்பாகப் பண்ணிவிடும். அப்படிப்பட்ட நிலையினை மாற்றி நல்ல முறையில் செயல்பட வேண்டும்.
இதே போன்று வடை சுடும் பொழுதும் அந்தப் பக்குவ நிலை தேவை. முதலில்
சூடு ஏறிவிட்டதா…? என்பதைப் பார்ப்பதற்கு நீரைத் தெளிக்கின்றார்கள்.
சுர்…ர்ர்… என்று சத்தம் கேட்டபின்… சரி என்று சொல்லி வடையைச் சுட ஆரம்பிப்பார்கள்.
ஆனால்… மூன்றாவது வடையில் சூடு குறைந்து விடும். முதல் வடை
கருகும் இரண்டாவது ஓரளவுக்கு இருக்கும்… மூன்றாவது வடை
அப்படியே மிதந்து கொண்டிருக்கும்… எண்ணெயெல்லாம் கவர்ந்து கொள்ளும்… வடை
வேகாது… சுவையே கெட்டுவிடும்.
ஆனால் பதமான நிலைகள் கொண்டு அந்த எண்ணெயின் சரியான சூட்டைக் கணித்து வடையைச் சுட்டுப் பாருங்கள். “கரெக்டாகச்
செய்த பின்…” அது மொறு… மொறு… என்று எல்லா வடையுமே ஒன்று போலச் சுவையாக இருக்கும்.
ஆனால் ஒரே நெருப்பு தான்…!
1.காரணம் எது…?
ருசியாக்குவது யார்…? மனது…!
2.நம் மனதைப்
பக்குவப்படுத்தினால் ருசியாகின்றது…
மனதில் சிறிது அவசரப்பட்டால் கருகி விடுகின்றது.
ஆகவே மனம் தானே காரணம். இதை உருவாக்குவது யார்…? நம் மனதினை நாம் தெளிவாக்க வேண்டும்.
தெளிவானால் பொறுமை வரும். பொறுமையால்
ஞானத்தின் வளர்ச்சி வரும்.
ஆனால் அவசரப்பட்டோம் என்றால் எல்லாம் போய்விடும். இதையெல்லாம் நாம்
சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
1.நாம் அனைவரும் ஞானிகளாக மாற வேண்டும்.
2.சாமி மாதிரி நீங்களும் ஞானத்தைப் போதிக்கக் கூடிய வல்லுனர்களாக மாற வேண்டும்.
என்னுடைய உபதேசங்களைக் கேட்டுப் பதிவாக்கி அதனுடைய
விளக்கங்களைத் தெரிந்து கொண்டே வரவேண்டும். இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய
வைக்க வேண்டும்.
1.என்னுடைய உபதேசக்
கருத்துக்களை நிதானமாகப் படித்து
2.“முத்து…” மாதிரி
எடுத்துச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.
கட… கட… என்று படிக்கக் கூடாது. அப்படிப் படித்தால் படிப்பவருக்கும் அர்த்தமாகாது… அதைக் கேட்பவர்களுக்கும்
அர்த்தமாகாது. ஆகவே நிறுத்தி நிதானமாகப் படித்து முடிந்த பின்
1.குரு வழியில் அதன் உள் கருத்துக்களை
அறிந்து
2.“சாமி இதைத்தான்
சொல்கிறார்… நாம் இதைப் பெற வேண்டும்…” என்று விளக்கமாகச்
சொல்ல வேண்டும்.
3.ஏனென்றால் அருள் வழியில்
உங்களைப் பேச வைப்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.
நான்கு வரி நீங்கள் படித்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளை
1.“சாமி இவ்வாறு வெளிப்படுத்துகிறார்…! நாம் இதைப் படித்துப் பதிவாக்க வேண்டும்…! இந்த
மாதிரி நாம் செயல்பட வேண்டும்…! என்று
2.நிறுத்தி நிதானமாக அதை
விளக்கமாக எடுத்துச் சொல்லி கொண்டே வந்தால் எல்லோருக்கும் மனதில்
பதியும்.
புத்தகத்தை எடுத்து ஒரு பத்து நிமிடத்தில் வேகமாகப் படித்த பின்… அடுத்தாற்
போல் “அதிலே என்ன விளக்கம் இருக்கிறது…?”
என்று கேட்டால் படித்தது மட்டும் தான் மிச்சமாக இருக்கும்…
விளக்கம் தெரியாது.
ஏனென்றால்… யாம் கொஞ்சம் தான் கற்றிருக்கின்றோம்…!
1.என்னுடைய சீடர்கள் இதைக்
காட்டிலும் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.
2.உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லக்கூடிய
நிலை வரும்.
பகைமையுடன் அல்ல…! “நான் தெரிந்து கொண்டேன் என்ற நிலை இல்லாதபடி...” உபதேசக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் படித்துப் பதிவாக்குங்கள். அது ஞானத்தின் வழியில் உங்களை
அழைத்துச் செல்லும். அதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகிறேன்.
காரணம் இந்த உடலில் சிறிது காலமே வாழுகின்றோம். அதற்குள் இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும்
வெளிப்படுத்தும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்.
குருநாதர் என்னிடம் எவ்வளவோ சக்திகளைக் கொடுத்தார்.
1.ஆசைப்பட்ட உள்ளங்களுக்கெல்லாம் இதைச் செய்யப்பா என்றார்.
2.அதன் வழியில் நான் உங்களைத் தயாராக்க வேண்டும் அல்லவா.
ஆனால் ஒரு சிலர் யாம் கொடுக்கும் சக்திகளைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தி விடுகின்றனர். அது எல்லாம் வேலைக்கு ஆகாது.
நீங்கள் எல்லோரும்
அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது எல்லோருடைய உணர்வும் ஒன்றாகின்றது. அதைச் சீராக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றாக இருப்பீர்கள்.
1.உங்கள் வீட்டில் கர்ப்பம் என்று தெரிந்தாலே அங்குள்ள அனைவரும் சொந்தக்காரர்களும் ஒன்று சேர்ந்து
2.கருவில் வளரும் குழந்தை ஞானியாக வளர வேண்டும்
என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள். பெரிய தத்துவ ஞானியாக
அவன் வருவான்.
நாம் பாய்ச்சும் அருள் உணர்வை அந்தத் தாய் நுகர்ந்து அந்த
உணர்வுகள் தாயின் ரத்தத்தில் கலந்து அதே அருள் உணர்வு கருவிலிருக்கும் சிசுவிலும்
விளையும்.
அப்படிப்பட்ட நிலையில் வளர்ச்சி அடைந்து அந்தக் குழந்தை பிறந்தால் போதும்.
எந்த அருள் உணர்வுகளைப்
பாய்ச்சிக் குழந்தையை வளர்த்தீர்களோ அவன் பிறந்த பின் எண்ணம் சொல் வெளி வரும் பொழுது அது நமக்கு சொந்தமாகின்றது.
1.அவனால் பகைமையை நீக்கும்
உணர்வுகளைப் பெறுகின்றோம்.
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான்.
பல உணர்வின் தன்மையை எடுத்து நமக்குள் அணுக்களாக உருவாக்கப்படும் பொழுது அதை விளைய வைத்து
உணவாக உட்கொள்கிறோம்.
இதே போல தான் ஞானிகளாகப் பிறக்கச் செய்வதற்கு மனிதனுடைய ஆறாவது அறிவால்
1.கர்ப்பிணி “செவி கொண்டு நுகரப்படும் பொழுது…” தான் இதைப் பெற வேண்டும்
2.தன் கருவில் இருக்கும் குழந்தையும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்
3.உலக ஞானம் பெற வேண்டும் இருளை அகற்றும் அந்த
அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
நம்மைப் போன்றவர்களின் தூண்டுதல் ஆகி… அந்தத் தூண்டுதலை நல்ல நிலையில் எடுத்துத் தியானித்து ஞானக் குழந்தை உருவாக வேண்டும் என்று செய்தால் மிகவும் நல்லது.
எதிர்காலத்தில் இத்தகைய ஞானிகள் தேவை. தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்
இறைவா போற்றி என்று சொல்வது போல நாம் இதைச் செய்து பழகுதல்
வேண்டும். ஞானிகளை உருவாக்க வேண்டும்.
1.நம் தெருவிலே இரண்டு ஞானிகள் வளர்ந்தால்
போதும்
2.அந்தத் தெருப் பக்கம்
தீமைகள் வராது அருள் ஞானிகள் உணர்வுகளைப்
பெறச் செய்யும்.
ஒவ்வொருவரும் இதைப் போன்று ஆங்காங்கு வாழும் இடங்களில் செயல்படுத்தினால் இந்த நாட்டிலேயே
உயர்ந்த நிலைகளை உருவாக்கி நீக்கி விஞ்ஞான
உலகின் நஞ்சிலிருந்து மீட்டிடும் அருள் சக்தியாகப் பெருகும்.
ஆகவே அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க மறந்து விடாதீர்கள்…!
1.ஒவ்வொருவரும் குரு காட்டிய வழியில் ஞானிகளாக மாறுங்கள்.
2.கூட்டமைப்பாகச்
செயல்பட்டு உலகில் வரக்கூடிய தீமைகள் அனைத்தையும் நீங்கள் மாற்றி அமைக்க முடியும்…!
நிச்சயம் நீங்கள் செய்வீர்கள்…!