ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 8, 2026

ஆயுள் கால மெம்பர் இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆயுள் கால மெம்பர் இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்


துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் ஒவ்வொரு குணங்களிலும் சொல்லி வரும் போது அந்தந்த உடலில் ஏற்பட்ட உணர்வெல்லாம் சேர்த்துச் சேர்த்துக் கலந்து விடுகிறோம்.
 
இது தான் “தொட்டுக் காட்டுதல்…” என்பது.
 
உங்கள் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விட்டு… அடுத்து உங்கள் கண்ணின் நினைவை என் புருவ மத்தியிலே ஈஸ்வரா…” என்று உற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டுமென்று ஏங்குங்கள்…”
1.இவ்வாறு ஏங்கிப் பெறும் பொழுது உங்கள் எல்லோருடைய செவிகளிலும் படுகின்றது
2.எல்லோரும் சொன்ன உணர்வைக் கண் கவர்கின்றது மூக்கு நுகர்கின்றது உயிருக்குள் பர்கின்றது
3.உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் ரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது.
 
வியாழன் கோள்…” 27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துப் புதுவிதமான கருக்களை உருவாக்கக்கூடிய குருவாக இருக்கின்றது. இதே மாதிரி
1.”நம் குருவின்…” அருள் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
2.எல்லோரையும் ஒன்று போல் இணைக்கும் பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பர்கின்றது.
3.தீமையான உணர்வுகளை மாற்றி விட்டுத் “துருவ நட்சத்திரத்துடன் ஒன்று சேர்த்து இணையும் சக்தியாக மாறுகின்றது.
 
கூட்டுத் தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய சக்திகள் உங்கள் உடலுக்குள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கும் நிலையாச் சந்தர்ப்பம் உருவாகின்றது.
 
1.என் நெற்றியிலிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின்ளி வரும்.
2.அந்த ஒளியான உணர்வுகள் உங்கள் உடலிலும் பாயும்.
3.கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் உங்கள் உடலுக்குள் ஊடுருவி உள்ளுக்குள் செல்வதும்… ந்த உணர்வு தெரியும்.
4.இந்த அடிப்படையில் நீங்கள் கொண்டு சென்றால் ருள் ஞானச் சக்கரத்திலும் ஒளி வரும்…”
 
எப்பொழுது எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் ஆந்தச் சக்கரத்திற்கு முன்பு நின்று அதை உற்றுப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எடுத்து வலுவாக்கிக் கொண்டு செல்லுங்கள். உங்கள் காரியங்கள் நல்ல முறையில் செயலாகும்.
 
உபதேச வாயிலாக உங்களுக்குத் தொடர்ந்து துருவ நட்சத்திரத்தைப் பற்றிப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.
 
அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணி ஏங்கித் தியானிக்கின்றேன். அதே போல் நீங்களும் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி என் புருவ மத்தியைப் பாருங்கள். அப்படிப் பார்க்கும் போது
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய ஒளி ங்கிருந்து இங்கே வந்து என்னிடமிருந்து உங்களுக்குள் பாயும்.
2.என்னால் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நேரடியாக உங்களுக்குப் பெறச் செய்வதற்காக இது மாதிரிச் செய்கின்றேன்.
 
இந்த உணர்வு பாய்ந்த பின் அதை எடுத்து நீங்கள் வலு கூட்டிக் கொண்டால் இது விஷ்ணு தனுசாக மாறுகின்றது. கடைசி நிலையாக
1.உடலை விட்டு உயிர் போவதற்கு முன் இந்த உணர்வை எடுத்தோம் என்றால் தனுசு கோடியாக
2.உயிரும் இந்த உடலில் இருக்கும் அனைத்தும் ஒன்றாகின்றது.
 
அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் பயிற்சியாக இவ்வாறு கொடுக்கின்றேன்.