
“சாமி மாதிரி பெரிய சக்தி பெற்று…” உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்
உதாரணமாக…
வேதனை என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தால்
நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சண்டை
வருகிறது. தொழில் செய்யும் இடங்களில் நிம்மதி இல்லை.
ஆனால்
நாம் அருள் உணர்வுகளைப் பெற்று வளர்த்தால்
1,நாம் போகும் இடமெல்லாம் அனுசரனையாக நம்மைப் பாதுகாக்கும் நிலையாக வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெற்றோமென்றால் அதுவே “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்பாக…” வருகின்றது.
சந்தர்ப்பத்தால் தடைகள் வருகிறது என்றால் ஓரளவுக்கு அதிலிருந்து நம்மை
மீட்டிடும் நிலையாக
1.“ஏதாவது ஒரு ரிமோட் பண்ணி…” வேறு ஒரு பாதுகாப்பான
இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்
2.அதற்கு தகுந்தாற் போல் ஒளியாக மாற்றக்கூடிய சக்தி
கிடைக்கும்.
ஆகவே…
உங்களை நீங்கள் நம்புங்கள்.
எல்லாமே சாமி தான் என்று எண்ணுவதற்குப் பதிலாக “சாமியைப் போன்று பெரிய சக்தி பெற வேண்டும்…!” என் பேச்சால் மூச்சால்
பிறருடைய நோய்கள் அகல வேண்டும் அனைவரும் நன்மை பெற வேண்டும்… என்ற உணர்வை எடுத்து வளர்த்து வாருங்கள்.
இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்கும் பரவும்.
உங்களைத் தெளிவாக்கி எல்லோருக்கும்
அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தான் சதா தியானம் இருக்கின்றேன்.
அருள் வழியில் நீங்கள் தயாரானால் அனைவருக்கும் இது நல்லதாகும்.
இந்த உடல் தான்… நாம்
செய்யும் தொழில் தான்… சொத்து தான்…
என்று இல்லாதபடி இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதே நமக்கு அழியாச் சொத்து என்பதை உணர்ந்து அதன் வழி வளர்வோம்.
1.துருவ நட்சத்திரத்தினை மறந்து விடாதீர்கள்… எந்த நிமிடமானாலும் அதனின் சக்தியை
எடுங்கள்…
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்த்துப் பழகுங்கள்… எந்த இருளும் உங்களை நாடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது… அதன் வழி உங்களைக் காக்கின்றது, அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ
அதுவாகின்றாய் என்று சொல்வது.
எல்லோருக்கும் நன்மையைத்தான்
நான் செய்தேன்… இப்போது இப்படி ஆகிவிட்டது என்று வேதனையாக
எண்ணினால் நாம் அதுவாகி விடுகின்றோம்.
ஆனால்… அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க
வேண்டும்… அந்த அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று
எண்ணி எடுத்தால் நாம் அதுவாகின்றோம்.
எல்லோருடைய உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது எல்லோரையும் காக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள்
வருகின்றது. அதை நாம் அனைவரும் இணைந்து செயல்படுத்துவோம்.
1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்…. உலகத்தைக் காப்போம் என்ற நிலையில்
2.நீங்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் உங்கள் ஊரிலும்
இந்த உணர்வுகள் நல்ல சக்தியாக மாறும்.
3.அது
உங்களையும் காத்து ஊரையும் காக்கும்.
4.நீங்கள் உங்களைச் சாதாரண மனிதனாக எண்ண வேண்டாம்.
5.உலகையே காக்கும் திறன் உங்களிடமிருந்து
வெளிப்பட வேண்டும்.