ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 6, 2025

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்


குருநாதர் காட்டிய அருள் வழியில் உலக அனுபவங்களைப் பெறுவதற்காக பல இன்னல்களை என்னை அனுபவிக்கச் செய்தார்.
1.நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயலாக்குகின்றது…?
2.இதிலிருந்து மாற்றியமைக்கும் தன்மை எப்படிக் கொண்டு வர வேண்டும்…? என்று உணர்த்தினார்.
 
எறும்புக் குழியில் அமர்ந்து தவம் இருக்கும்படி செய்கின்றார். அமைதியாக நான் இருக்கும் பொழுது ஒன்றும் நடக்கவில்லை ஒரு எறும்பு என் காதிற்குள் சென்றது. அது உள் செல்லாதபடி விரலை வைத்துத் தள்ளினேன். அது துடித்து  விட்டது.. மடிந்து விட்டது.
 
அந்த உணர்வின் அலைகளை மற்ற எறும்புகள் நுகர்ந்து துரித கதியில் இயங்கத் தொடங்குகிறது. புற்றிலிருந்து வரக்கூடிய எறும்புகள் அனைத்தும் இந்த உணர்வின்லியை எப்படி அறிந்ததோத்தின் தன்மை எப்படி அறிந்ததோ தெரியவில்லை.
 
என்றாலும் அதன் உணர்வின் தன்மையை வேகமாக அறிந்து கொண்டு என் உடலில் பல நிலைகள் கொண்டு கடிக்கின்றது. கடி தாங்காது அதையெல்லாம் நான் தேய்க்கத் தொடங்கினேன்.
 
1.நீ தேய்த்து நசுக்கிய எறும்புகள் அனைத்தும் உன்னுடைய ஈர்ப்புக்குள் வந்து விடுகிறது.
2.உனது உணர்வைக் கவர்ந்து கருவாக மாறுகின்றது.
3.ஆனால் எறும்பின் உடலில் உள்ள விஷமும் அது நசுக்கப்படும்போது அதனின் வேதனையையும் நுகர்ந்து நீ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாய்.
4.அந்த உணர்வுகள் உன் உடலுக்குள் செல்லும்போது உன் ரத்த நாளங்களில் விஷ அணுக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.
 
நீ எத்தனை எறும்பை நசுக்கினாயோ உன் உடலில் 48 நாட்களுக்குள் இது ஒரு கூட்டமைப்பான உணர்வுகள் விளையப்பட்டு
1.உன் உடலில் கை கால் குடைச்சல் என்றும்
2.அந்த எறும்புகள் சாகும்போது எந்தத் துடிப்பு அவைகளுக்கு இருந்ததோ
3,பளீர் பளீர் என்று ஊசி குத்துவது போல் அதை நீ உணரலாம் என்று உணர்த்தினார்.
4.அதனுடைய இயக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதையும் காட்டுகின்றார்.
 
மனிதனான பின் ஒன்றைக் கொன்றோம் என்றாலும் அல்லது மனிதனாகப் பிறந்தாலும் கொல்லும் பொழுது பட்ட வேதனையின் உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது.
 
கொல்லவில்லை என்றாலும் விஷம் தாக்கப்பட்டு அதன் உணர்வின் நினைவானால் உடலுக்குள் செல்கின்றது. இதிலிருந்து மீளும் மார்க்கம் என்ன…? என்று இந்த வினாவை எழுப்புகின்றார்.
 
ஆக மொத்தம் எறும்பு தான் வாழ அது செயல்படுகிறது. அதனைக் காக்க அதன் உணர்வால் நம்மைத் தீண்டுகின்றது. நம்மைத் தீண்டும் போது அதன் உணர்வு நமக்குள் பட்டால் நாம் அதுவாக மாறிவிடுகின்றோம். இது இயற்கையின் நியதிகள்.
 
ஆறாவது அறிவு கொண்ட மனிதன் நாம் அதைக் கொன்றால் உடலுக்குள் வந்தாலும் அதனின் வேதனையை நாம் துடைக்க வேண்டும் அல்லவா அதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்கின்றார் குருநாதர்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீ நுர்ந்தால் அது உனக்குள் பதிவாகி இருந்தால் அந்தச் சக்தியை நீ பெற முடியும்.
 
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் உடலில் படர வேண்டும்.
2.கொன்ற உயிரான்மாக்கள் என் உடலுக்குள் வந்தாலும் அருள் உணர்வு பெற வேண்டும் அருள் ஒளி என்ற உணர்வைப் பெறுதல் வேண்டும்…”
3.அருள் ஞானம் பெறும் உயர்ந்த உணர்வாக எனக்குள் வளர வேண்டும் என்று உடனுக்குடன் அதை மாற்றப்படும் பொழுது
4.அதைக் கொன்றாலும் நமக்குள் வந்து அருள் ஞான உணர்வை வளர்த்திடும் கருத்தன்மை அதிலே இணைந்து வளரும் தன்மை வருகின்றது.
 
இவ்வாறு இந்த உணர்வின் தன்மை இணைத்து விட்டால் உடனடியாக நமக்குள் அந்த அணுக்கள் ரத்தத்தில் வளரப்படும் பொழுது தீமையை மாற்றி நன்மையின் உணர்வை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
 
இது அனைத்தும் நம் இரத்த நாளங்களில் வந்த பின் தான் உடலை உருவாக்கும் கரு விந்து என்ற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அதனின் வலுக் கொண்டு தான் மனிதனை உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.
 
1.அப்படிக் கருத்தன்மை அடைவதற்கு முன் இந்த உணர்வினை மாற்றி விட்டால்
2.நாம் ஏங்கிய அருள் உணர்வுகள் கரு அறைகளுக்கு செல்லப்படும் பொழுது
3.அதை மாற்றி அமைத்து விடுகின்றது என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

April 5, 2025

துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்


ஆசையின் வாலிப பருவத்தின் உணர்வில் ஆணைக் கண்ட பின் அந்த உணர்வின் தோற்றமானால் அந்த உணர்வுக்கு நாம் அடிமையாகி விட்டால் அதன் உணவின் வளர்ச்சியாகி நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு நாம் இழுக்கு தேடும் நிலையே வருகின்றது.
 
தாய் வேதனைப்படுகிறது என்பதனை உணர்வதில்லை. நம் இச்சைகள் இப்படி வளரப்படும் போது இப்பொழுது உலக மாற்றங்கள் ஏற்படும் போது இதனுடைய விளைவுகள் எத்தனையோ ஆகிறது.
 
1.தாய் தந்தையை மறுத்து வெளியே சென்று தனித்து வாழும் உணர்வுகள் அனைத்தும்
2.துயர்படும் நிலைகள் தான் வாழ நேருகின்றது.
3.அது தவிர தாயையும் தந்தையையும் துயரத்தில் ழ்த்துகின்றோம்.
 
தேடிய செல்வங்கள் இருப்பினும் அதைக் கொண்டு தன்னைக் காத்திடும் நிலை இல்லாதபடி வேதனை என்ற உணர்வுகளை உருவாக்கித் தன் தந்தைக்குள் விஷத்தன்மை ட்டப்பட்டு
1.பாம்பாய் இருந்தேன்… என்னை அடித்து உன்னிடம் வளர்த்து மனிதனாக்கினாய்
2.நீ பாம்பாகப் போ என்று வேதனை உணர்வைத் தன் தாய் தந்தைக்கு ஊட்டி
3.அந்தப் பாம்பினத்தில் சேர்க்கும் தன்மை தான் இன்றைய குழந்தைகளுக்கு உள்ளது.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுதல் வேண்டும்.
 
மனிதனா பின் உணர்வின் தன்மை எல்லாவற்றையும் கடந்து உணர்வின் ஒளியானது நட்சத்திரம். தீமையை நீக்கும் ஆறாம் அறிவின் தன்மை கொண்டு அவன் தெளிந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரம் ஆனான்.
 
திலிருந்து வரக்கூடிய உணர்வை
1.ஆறாவது அறிவின் வலிமையின் துணை கொண்டு காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின்ணர்வை நாம் நுகர்வோமென்றால்
2.நுகர்ந்த உணர்வுகள் வலிமைமிக்கதாக மாறி அந்த உணர்வுகள் தெய்வ ஆணையாகி
4.தீமைகளை வெளியேற்றும் உணர்வின் வலிமையாகி நமக்குள் தீமை புகாது உணர்வின் வலிமை பெறச் செய்யும்.
 
இவ்வாறு வலிமை பெற்ற உணர்வுகள் எதன் வலிமையைப் பெற்றோமோ நாம் இந்த உடலை விட்டுக் கடந்த பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை இணைத்து… ஆறாவது அறிவை ஏழாவது நிலையான இனி பிறவி இல்லா நிலை நிலையும் உடல் மாற்றம் இல்லாது இந்த உடலிலேயே ஒளியின் உணர்வாக நாம் மாறிடும் நிலை வருகின்றது.
 
எப்பொழுது துயரம் என்ற நிலைகளைச் சந்தர்ப்பத்தால் நுகர்கின்றோமோ அதை உடனே மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் வலிமையை
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

April 1, 2025

கலகப்பிரியன் நாரதன்

கலகப்பிரியன் நாரதன்

 
ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். அதில் ஒருவர் நல்ல மனுஷன்...! இவன் இப்படிப் பேசுகின்றானே...! என்று நினைக்கின்றோம்.
 
திட்டப் போகும்போது நம்முடைய மனது கேட்கிறதோ...? ஏம்பா இந்த மாதிரி எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றாய் என்கிறோம்.
 
உனக்கென்ன ஐயா...? என்று கேட்டால் இல்லாத வம்பெல்லாம் வரும். திருப்பி அதைத் திருத்த முடிகின்றதா என்றால் முடியவில்லை.
 
உங்களால் சொல்ல முடியுமா...?
 
1.தே உணர்வு நமக்கு வந்தால் விட்டுவிடுவோமா. நான் சொல்கின்றேன் கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.இரு நான் பார்க்கிறேன் என்று வம்பு தான் பேசுவோம்.
 
தெரியுது... ஆனால் சொன்னாலும் வம்பு தான். அப்பொழுது அந்தக் கலகம் வருகிறது.
 
ஆனால்
1.அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோம் என்றால் உயிருக்கு வருகின்றது
2.அந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கின்றது.
 
அந்தத் துருவ நட்சத்திரம் இதையெல்லாம் கரைத்தது. உள்ளுக்கே சென்று பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கும்படி செய்கிறது.
 
வாயிலே சொன்னால் அந்த சமயத்தில் கேட்காது. நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணிச் செலுத்துதல் வேண்டும்.
 
1.அப்பொழுது முன்னாடி பாதுகாப்பு வருகின்றது.
2.அதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
3.அதைச் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சேர்த்து விட்டால் நாம் எடுத்த உணர்வுகள் உமிழ் நீராகி சிறுகுடல் பெருங்குடலுக்குச் செல்லுகின்றது. இரத்தமாக மாறுகின்றது.
 
உடல் முழுவதற்கும் ஒரு நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.
 
வேதனைப்படுபவரைப் பார்க்கின்றீர்கள். அந்த உமிழ் நீர் வருகின்றது இந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கம் சென்று வேதனைப்படுத்துகின்றது.
 
ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் ககப் பிரியன். இந்த பிடிவாத குணங்களை விடுத்து விட்டு இருவரும் சமாதானமாகச் செல்லுங்கள் என்று விளக்கத்தைச் சொல்ல முடியும்.
 
நம் உடலிலும் அதைச் சமாதானப்படுத்த வேண்டும்
 
இந்த மனிதன் சும்மா இருந்தாலும் இவன் இப்படிப் பேசுகின்றான் பார்...!
1.அதை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
2.ஆனால் அவர்கள் செய்த தவறை நாமும் செய்கின்றோம்.
நாம் தவறு செய்யவில்லை ஆனால் இந்த உணர்வு வருகின்றது.
 
து தான் நாரதன் ககப் பிரியன் ககமோ நன்மையில் முடியும். நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ அதை எல்லாம் மாற்றி விடுகின்றது...”