
அன்றாட வாழ்க்கையில் உடனுக்குடன் நாம் செய்ய வேண்டியது
நாம் எப்போது பிறருடைய உணர்வுகளை எடுக்கின்றோமோ அதன் உணர்வின்
தன்மை நமக்குள் வந்து விடுகின்றது. அப்போதே நாம் அதைக் கொன்று விட்டால் தீமை செய்யும் இயக்கமாக வராது.
வேதனையான உணர்வு வரப்படும் பொழுது
ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதை
அடக்கி விட்டால் நமக்குள் அந்தப் பரம்பரை என்ற நோய்கள் வராது.
தொழிலில் நஷ்டம் ஆகிறது... வேதனைப்படுகின்றோம்.
1.அந்த வேதனை உணர்வு
நமக்குள் வளராது
2.நாம் அப்பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வை எடுத்துக் கொன்று விட்டால்
3.அந்த உணர்வின் தீமைகள் நமக்குள் செயல்படாது.
உணர்வின் உணர்ச்சிகள் நுகர்வது எண்ணங்களாக எப்படி
ஆகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை
நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்
குருநாதர்.
காரணம் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்ம குரு. இப்பொழுது நாம் ஒருத்தர் பேசுவதை நாம் கவர்ந்து
கேட்டால் வசிஷ்டர். உணர்வின் தன்மை நுகர்ந்தால் நம் உடலில் அக்குணத்தின்
தன்மை நமக்குள் உருவாக்கும் பிரம்மம் ஆகி அணுவாக உருவாகிவிடுகின்றது.
அந்த அணுத்தன்மை ஆகிவிட்டால் வசிஷ்டர் பிரம்மகுரு. பிரம்மகுருவின் மனைவி யார்…? அருந்ததி.
1.எந்தக் குணத்தின் தன்மை கவர்கின்றோமோ அது
உணர்வின் தன்மை அணுவாகும் பொழுது
2.அதன் இனத்தின் தன்மையே தான் இயக்கும் அருந்ததி… என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.
ஆக இங்கே விஷ்ணு உயிர். விஷ்ணுவின் மகன் பிரம்மா. சீதாராமன்
விஷ்ணுவின் மறு அவதாரம் என்ற நிலைகளைத் தெளிவாக கூறுகின்றனர்.
நாம் எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை
பிரம்மம் ஆகும்பொழுது அந்த பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
1.இங்கே அதன் ஞானமாக இயக்கும் என்றும்
2.வசிஷ்டரின் மனைவி அருந்ததி எதைக் கவர்ந்தோமோ
அது உருவாக்கப்படும் பொழுது பிரம்மம் ஆனாலும்
3.அது இணைந்தே அந்தச்
சக்தியாக இயக்குமென்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றது.
4.எந்த உணர்வின் தன்மையோ அந்த ஞானத்தின் தன்மை
இங்கே இயக்கும் என்று கூறுகின்றனர்.
ஆனால் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். எதன் சுவையின் உணர்ச்சிகள் எண்ணங்களாக இயக்குகின்றதோ
அப்பொழுது அது அணுவாகப் படும் பொழுது அதனுடைய இயக்கமும் ஈசன்… அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம்
லட்சுமி.
உயிரின் இயக்கமும் இதே தான். விஷ்ணு என்று இருக்கும் பொழுது
இயக்கம் ஈசன் அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.
ஆகவே விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். ஆக எந்த உணர்வின்
தன்மையோ அதன் உணர்ச்சியின் அணுவாகி அந்த உணர்வின் தன்மை உடலாகி அதன் வழியே இயக்கும்
என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.
ஆகவே இங்கே இராமாயணத்தில் பரதன் கைகேயிடம் என்ன சொல்கின்றார்…? உன்
தாயார் பாட்டன் வீட்டில் எதைச் செய்ததோ… அதையே நீ இங்கேயும் செய்கின்றாய். அதாவது
1.பரம்பரை நோயும் பரம்பரை குணங்களும் நமக்குள்
வருகின்றது.
2.ஏனென்றால் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் தன்மையை
நாம் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மையே நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது நமக்குள் அது
வளராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அதைக் கொன்று பழக வேண்டும்.
சங்கடத்தையோ சலிப்பையோ வேதனையோ வெறுப்பையோ சந்தர்ப்பத்தால்
நுகரும்போது ஆசையின் நிமித்தம் வரப்படும் பொழுது அதன் அருகிலே நாம் செல்கின்றோம்.
தொழிலில் நாம் வேலை செய்து வரப்படும் பொழுது எல்லோருக்கும் நன்மையை
செய்கின்றோம். அதில் எதிர்பாராத நிலைகளில் ஒருவன் குறை கூறினால் நாம் நல்லது செய்தும்
குறை கூறும் போது அவன் நம்முடைய இடத்தைப் பிடிப்பதற்காக அவன் குறை கூறுகின்றான்
அந்தக் குறையின் உணர்வை நுகரப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் விளைந்த பின் அது
தான் தாய் ஆகின்றது.
அந்த உணர்ச்சியின் தன்மை வெறுப்படைந்து… “என்னை இப்படிச் செய்கின்றானே..” என்று வேதனை உணர்வை நமக்குள்
எடுக்கப்படும் பொழுது அவனை நினைக்கும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.
அப்பொழுது நாம் வேதனைப்படும் செயல் வரப்படும் பொழுது நம் சிந்திக்கும்
தன்மை எல்லாம் இழக்கின்றது. நமக்குத் தீங்கு செய்தவன் உணர்வு
தான் வளர்கின்றதே தவிர நமது நன்மை செய்த உணர்வை நாம் வளர்க்க முடியவில்லை.
1.ஆனால் அந்தத் தீமை செய்யும் உணர்வு நமக்குள்
வளராது “அப்போதே அதைக் கொன்று பழகுதல்
வேண்டும்…”
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம்
பெற வேண்டும் என்று அந்த இயக்கச் சக்தியை நாம் மாற்றினோம் என்றால்
3.நமக்குள் அந்தத் தீமை என்ற நிலைகள் வராது.