ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 18, 2025

மந்திரம் தந்திரம் தெரிந்தவர்களிடம் பழக்கம் வைப்பது நல்லதல்ல

மந்திரம் தந்திரம் தெரிந்தவர்களிடம் பழக்கம் வைப்பது நல்லதல்ல


இன்றும் நமது நாட்டில் பல நிலைகள் இருக்கின்றது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் திருநெல்வேலியில் டாக்டர் இருக்கின்றார் அவர் பல நிலைகளில் சென்று வந்தவர். இருந்தாலும் குட்டிச் சாத்தான் என்ற நிலைகளை வைத்து மந்திரவாதிகளிடம் பழக்கம் உள்ளவர்.
 
ஆனால் அந்தக் குட்டிச் சாத்தான் இவர் வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்துக் கொண்டு போகிறது. இங்கே தபோவனத்திற்கு வந்து ஒரு வாரம்  தங்கி இருந்தார்கள்.
 
இங்கே தங்கி இருக்கும் பொழுது நகைகள் போகவில்லை. மறுபடியும் அங்கே வீட்டிற்குப் போனவுடன் நகைகள் போகின்றது.
 
நான்கு பவுன் செயின் கழுத்தில் இருந்தால் எடுக்க முடியாது. இவர் கழுத்தில் உள்ளதைக்  கழட்டி என்ன செய்கின்றார்…? தலையணைக்கு அடியில் வைத்தார். எடுத்துக் கொண்டு போய் விட்டது. இரவு எனக்குப் போன் செய்கின்றார்.
 
இது வரை பத்தாயிரம் நோட்டு கட்டாக அப்படியே எடுத்துக் கொண்டு போய்விட்டது. குட்டிச்சாத்தான் ஏவல் தான் அது.
 
இந்த மந்திரவாதிகள் ஜீபூம்பா வரும் என்று சொல்கிறார்கள் அல்லவா.
1.நமக்குச் சொத்து கிடைக்கும் சுகம் கிடைக்கும் என்று அவர்களிடம் ஜாஸ்தி பழகியவர்.
2.இப்பொழுது பழகியவுடன் என்ன ஆகிவிட்டது…? இங்கே இருக்கும் காசு எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகின்றது.
 
சிலருக்கெல்லாம் இந்த நோட்டைக் காட்டுகிறார்கள் அல்லவா. சில தாயத்துகளை எடுத்துக் காட்டுவார்கள். வீட்டில் வைத்துவிட்டு அதை அப்படியே எடுத்து வரும்.
 
அதே மாதிரி நீங்கள் வீட்டில் நோட்டை வைத்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும். இன்னொரு வீட்டில் லட்டு வைத்திருந்தால் அதை எடுத்துக் கொடுக்கும். ஆனால் அந்த மந்திரவாதியை லட்டைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டான்.
 
இந்த மாதிரி ஒரு குட்டிச்சாத்தான் ஒரு மனித உணர்வின் தன்மையை இப்படி முச்சந்தி மண்ணை எடுத்துக் கொண்டு போய் அதுவும் மாவாசை காலம் கூப்பிட்டோம் என்றால் அது குட்டிச்சாத்தான் என்றால் கரு கலைந்த சிதைந்த அதற்கு மேல் இதை வைத்து அதற்காக வேண்டி சில மந்திரங்களைச் செய்து இந்த உணர்வை எடுத்து அந்த ஆவியை அழைத்துக் குட்டிச்சாத்தான் ஆக வைத்துக் கொள்வார்கள்.
 
அதை மற்ற பக்கம் ஏவல் செய்யும் பொழுது அது இவன் சொல்லும் வேலையை எல்லாம் செய்யும்.
1.நகையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னால் எடுத்து வரும்.
2.ஒரு பொருளைத் தொட்டுக் கரைத்து விடு என்றால் கரைத்து விடும் ஆவியாக மாறும் அவன் கைக்கு வந்துவிடும்.
 
இந்த மாதிரி எல்லாம் இன்றைக்கு மனிதனைப் பயன்படுத்துகிறார்கள். அரசர் காலங்களில் செய்த கொடுமை. ஆனால் இனி விஞ்ஞான உலகம் ந்த பின் நாம் அறிந்து கொண்டோம். இனி நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
1.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.ஆக நாம் அதைத்தான் அதிகமாக விரும்ப வேண்டும்.
 
எத்தகைய நிலைகள் இருந்தாலும் ஆயுள் கால மெம்பராகச் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து என்றும் பிறவியில்லா நிலையை அடைவது தான் நம்முடைய முழு நோக்கம்.
 
ஆக அந்த அருளைப் பெற்றால் இருளை நீக்க முடியும். கையில் விளக்கை எடுத்துக் கொண்டால் என்ன செய்யும்…? அங்கிருக்கும் பொருள் தெரியும்.
1.அவ்வப்போது ஆத்மசுத்தி செய்து கொண்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கும் பொழுது
2.நாம் எப்படிச் செயல்படுவது…? என்கிற சிந்தனை வரும்.
3.அதற்குத் தக்க உபாயமும் கிடைக்கும். ஆக நாம் நல்வழிப்படுத்தி நம்மை வழி நடத்திக் கொள்ள அந்தச் சக்தி கிடைக்கும்.
 
இல்லை என்றால் நாம் கோயிலுக்குப் போய் எல்லாம் செய்து மந்திரம் செய்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கி விடுவோம் என்றால் அது நடவாது.
 
இடைஞ்சல் வந்தது என்றால் வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்து இந்த வீட்டு வாசல்படியை இப்படி இடித்துப் போடு அப்படி இடித்துப் போடு இதை மாற்று…!” என்றால் சம்பாதித்த காசைஸ் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
 
ஆசையின் நிமித்தம் இன்னொருத்தர் செய்தால் இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்பான் இன்னொரு வாஸ்து சாஸ்திரக்காரன். அப்பொழுது எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்ப்பது…?
 
ஜாதகத்தை பார்த்தாலே இன்றைக்கு எடுத்துக் கொண்டால் இன்றைக்கு ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் ஒன்று போல எல்லாம் இருக்கின்றதா…? என்றால் இல்லை.
 
கௌரி பஞ்சாங்கத்தில் ஒரு விதமா ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஒரு விதமாய் இருக்கின்றது இந்த மாதிரி பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் மூன்றையும் பார்த்தால் மூன்றும் மூன்று விதமாக இருக்கின்றது.
 
நீங்கள் எதை நம்புவீர்கள்…?
 
அவரவர்கள் எடுத்துக் கொண்ட்து இதுதான் சரி என்கின்றார்கள். அவர்கள் அதைத் தான் சரி என்கின்றார்கள் ஆனால் அவன் சொன்னது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்து இது தான் பதிவாகி இருக்கின்றது இதுதான் எனக்குச் சரியாக இருக்கும் என்பான்.
 
அந்த உணர்வை எடுத்து வழிபடும் பொழுது இப்படி ஆகின்றது. அடுத்தவன் சொன்னால் இதை மோசம் என்போம்
 
ஆக இதன் வழி தான் உலகம் முழுவதற்கும் பஞ்சாங்கங்களைப் பார்த்து நடப்பதும் நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் பார்ப்பதா…?  என்று ஆகிவிடும்.
 
நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் உருவாக்கியவன் மனிதன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்.
 
1.மனிதனால் நல்ல நேரங்களை நல்ல காலங்களை உருவாக்க முடியும்.
2.நல்ல காலங்களை உருவாக்கக்கூடிய திறனை உங்களுக்கு கொடுத்து
3.ஆயுட் கால மெம்பராக இருப்பவர் எல்லாம் அடுத்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்க வேண்டும்.