ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 13, 2025

உயிரின் இயக்கம்

உயிரின் இயக்கம்


ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் நமது உயிரை ஈசனாக மதித்து உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குரு என்ற நிலையில் மதித்தல் வேண்டும்.
 
ஓம் என்றால்
1.நமது உயிர் ஓ என்று இயங்கிக் கொண்டே உள்ளது.
2.நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்த்து எல்லாம் நமது உயிரில் மோதும் பொழுது ஓ என்று அந்தக் குணங்கள் இயங்கி
3.அந்தக் குணத்தின் உணர்வுகள் ம் என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.
 
ஆதாவது ஓம் நமச்சிவாய…! நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரைப் போன்று ஜீவ அணுவாக மாற்றி அணுவின் மலம் நம் உடலாக சிவமாக மாறுகின்றது.
 
.இப்பொழுது நாம் எத்தனை வகை குங்களை நுகர்ந்து அறிகின்றோமோ அறிய உதவுகின்றது
1.உணர்வு அந்தந்த நிலைக்கொப்ப குணங்களுக்கொப்ப ந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் இயக்கினாலும் அந்த உணர்வின் தன்மை அணுவாக அந்தக் குணத்தை வளர்க்கும் சக்தி பெறுகின்றது..
 
ஒரு செடியில் வித்து ருவானால் நிலத்தில் அதை ஊன்றினால் எந்தச் செடியில் அது விளைந்ததோ அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய சத்தை இந்த வித்து நுகர்ந்து செடியில் விளைந்த வித்தைப் போல பல வித்துக்கள் உருவாகி அதன் செடிகளை உருவாக்கும்.
 
அதைப் போன்று ஒருவன் கோபப்படுகிறான் என்ற உணர்வை உற்றுப் பார்த்தால் நமது கருவிழி ருக்மணி நமது விலா எலும்புகளில் ஊழ் வினை என்ற வித்தாக பதிவாக்கி விடுகின்றது.
 
அதே சமயத்தில் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ
1.அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நமது ஆன்மாவாக மாற்றி
2.நம் உயிரிலே மோதும் போது அவன் கோப்த்தின் உணர்வு எதுவோ அதே போல அந்தக் கோப உணர்வுகள் நம் உயிரிலே மோதும் போது
3.அந்தக் கோபத்தைச் செயல்படுத்தும் உணர்ச்சிகளாக நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
4.கோபித்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி ம் என்று உடலாக அமையும் சந்தர்ப்பம் வருகின்றது.
 
காரணம் அது உமிழ் நீராக மாறும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுடன் கலக்கப்படும் பொழுது
1.அவன் எப்படிக் கோபித்தானோ அதே போல நாம் ஆகாரத்திற்குள் கார உணர்ச்சிகளை உருவாக்கி அதன் உணர்வுகள் இரத்தமாக மாறுகின்றது…”
2.இப்படித்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உயிர் நம் சுவாசித்ததை எல்லாம் இரத்தமாக அணுக்களாக உடலாக மாற்றிக் கொண்டே வருகிறது.