
ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?
நாம் எல்லாம் துருவ நட்சத்திரத்துடன்
ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்திருக்கிறோம் என்றால்… குருநாதர் என்னை ஆயுட்கால
மெம்பராகச் சேர்ப்பதற்கு முன்னாடி இதையெல்லாம் வரிசைப்படுத்தி
எனக்குள் உபதேசித்தருளினார். அதாவது
1.நாம் எப்படி வாழ்கின்றோம்…?
2.நம் வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பம் நம்மை
எப்படி எல்லாம் பல இன்னல்களைக் கொடுக்கிறது…?
3.இதிலிருந்து எல்லாம் நாம் எப்படித் தப்ப வேண்டும்…? என்பதை உணர்த்தினார்.
அதன் வழிப்படி துருவ நட்சத்திரம் என்பது அகஸ்தியன் துருவனாகி
அவர்கள் திருமணமான பின் அவர்கள் இரு மனமும் ஒன்றாகித் துருவத்தின் நிலையை எண்ணி ஏங்கி அந்த ஆற்றலைப்
பெற்று… அவர்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து
நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து
சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி அவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை
வென்று பேரருள் பெற்று…
1.எந்தத் துருவத்தின்
எல்லையை அது குறியாக வைத்து
2.அதனின்று வரும் உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக
இருக்கின்றனரோ
3.இந்த மனித உடலுக்குப் பின் கடைசி நிலை அது
பிறவியில்லா நிலை.
4.தங்கள் உடலில் உள்ள நஞ்சுகளைக் கரைத்து விட்டு
5.எத்தகைய நஞ்சினையும்
கரைத்து ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம்
ஆனார்கள்.
அதிலே தான் நாம் அங்கத்தினராகச் சேர்ந்திருக்கிறோம். இனி பிறவியில்லா நிலை என்ற
நிலை அடைவதற்குத் தான் ஆயுட்கால மெம்பராக இணைந்திருக்கின்றோம்.
துருவ நட்சத்திரம் எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றதோ அதே போல்
நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை நீக்கி இந்த வாழ்க்கையிலே துருவ
நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று நமது உடலில் தீமைகள் புகாது பாதுகாத்து
1.அந்தத் துருவ
நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த அந்த அருளை நமக்குள் பெருக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை
அடைவதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது நாம் தியானிக்கும்
முறைகள்.
3.குரு வழி வகுத்த இந்த முறைப்படி நாம் நடந்தோம்
என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.
ஆகவே நாம் இதை முழுமையாகக் கடைப்பிடித்தல் வேண்டும். ஆக ஆயுள் கால மெம்பராக எதிலே சேர்த்திருக்கின்றோம்…?
இப்பொழுது இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் நாம் இந்தத்
தியானத்தில் கொடுத்த சக்தியின் துணை கொண்டு தீமைகளை வராதபடி
அதை மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத்
தனக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் நாம் அதை கடைப்பிடித்தோம்
என்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.