ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2025

சந்தேக உணர்வின் விளைவுகள்

சந்தேக உணர்வின் விளைவுகள்


தன் கணவன் ஒருவரோடு பழகுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த உடனே.. நேரடியாகப் பார்க்கும் மனைவி அதைச் சந்தேகப்படுகின்றார்.
 
அந்தச் சந்தேகப்படும் உணர்வுடன் கலந்து மனைவி நுகர்ந்து விட்டால் அதன் உணர்வின் தன்மை திருப்பிப் பாய்ச்சப்படும் போது அந்த உணர்வின் அணுக்கள் இங்கே வருவதும் இதனால் தன் மனதில் மனக் கலக்கம் ஆகும் உணர்ச்சிகள் தோன்றுகின்றது.
 
அதே போல் கணவன் மனைவி மேல் வெறுப்படைந்து இதே போல் சந்தேக உணர்வு ஏற்பட்டால் இந்த உணர்வுகள் இதனுடன் கலக்கப்பட்டு இங்கே மனதில் கலக்கத்தின் தன்மை ஏற்படுகின்றது.
 
இப்படி வெறுப்படையும் உணர்வுகள் இருவருக்குள்ளும் வரும்போது
1.உடலுக்குள் எதிர்நிலைகள் உருவாக்கப்பட்டு
2.நல்ல குணங்களை உருவாக்குவதற்கு மாறாகத் தீமையின் உணர்வுகளைத் தான் அந்த அணுக்கள் மாற்றும்.
 
இப்படி மாற்றி வரப்படும் போது பகைமை உணர்வுகள் சேரத் தன் உடலுக்குள் மீண்டும் தீமையின் உணர்வுகளை விளைவிக்கும் தன்மையாக வந்துவிடும்.
 
ஆனால் அதே சமயத்தில் தொழில் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை என்ன செய்யும்…! இப்போது எதற்கடா…? என்று தோன்றும்.
 
ஆனால் அதே சமயத்தில் எப்படியும் சம்பாரிக்க வேண்டும் நம் குடும்பத்தைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.
 
பிறகு அந்த நிலைகளில் பலவீனமான நிலைகள் அடையும் பொழுது வளர்த்து வந்த தன்மையும் இழந்து மற்ற உணர்வின் தன்மை தன் உள்ளடக்கும் தன்மை வருகிறது பகைமை உணர்ச்சிகளே வரும்.
 
1.அப்போது நம்மை எது இயக்குகின்றது…?
2.நாம் தவறு செய்கின்றோமா…? என்றால் இல்லை…!
3.சந்தர்ப்பம்… இவ்வாறு நுகரப்படும்போது நம் உணர்ச்சிகளை மாற்றி சந்தேகப்படுபவர்களாக இரண்டு பேரையும் மாற்றி விடுகின்றது.
 
இதனின் விஷத்தன்மை மனித உடலையே அழிக்கச் செய்யும். தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் செல்லும். இல்லையென்றால் ஏன் எதற்கு என்று வாழ்க்கையையே விரயமாக்கச் செய்யும். கணவன் மனைவியைப் பிரித்து வாழச் செய்யும்.
 
ஆகவே பிரித்து வாழும் போது வேதனையின் தன்மை உருவாகும். இதைப் போல இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்தால் என்ன ஆகும்…?
 
மனிதனாகப் பிறந்தும்
1.விஷத்தின் தன்மை கொண்டு தனக்குத் தானே எமனாகவும் மனித உருவுக்கு எமனாகவும்
2.இரண்டு பேருமே பெற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.
 
இப்படி விளையும் உணர்வுகள் எதிர் நிலையாகப்படும் பொழுது  நரகலோகத்தையே சந்திக்க நேர்கின்றது…! ஏன் வாழ்கின்றோம்…? எதற்காக வாழ்கின்றோம்…? என்று இந்த உணர்வுகள் இரண்டு பாலருக்கும் இருக்கும்.
 
இரண்டு பேருக்குள்ளும் இப்படி மனப் போராட்டங்கள் ஏற்படும் பொழுது இந்த உணர்வுகள் பித்த சுரப்பிகளில் வேதனை உணர்வுகள் (விஷம்) அதிகரித்து கடும் நோயாக மாறிவிடுகிறது. அதை மாற்ற வேண்டுமல்லவா…!
 
அகஸ்தியனும் மனைவியும் நஞ்சினை வென்று ஒன்றாக இணைந்தனர். துருவத்தின் எல்லையில் இருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றினர். இன்றும் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.
 
என்னை குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுட்கால மெம்பராக  ஆக்கினார். அதே போல்
1.மனித வாழ்க்கையில் இருளை நீக்கித் துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ
2.அதிலே நீங்களும் ஆயுட்கால மெம்பராக இணைந்து என்றும் ஒளியாக நிலை பெற வேண்டும்.
3.இருள் சூழ்ந்த நிலைகள் உங்கள் மனதை மாற்றக்கூடிய நிலைகள் வரக்கூடாது.
 
தங்க நகை செய்யப் பித்தளை செம்பு போன்ற சில பொருட்களை அதனுடன் இணைக்கின்றோம். அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தால் இதைப் பிரித்து தங்கத்தைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.
 
இதைப் போல் நமக்குள் மனப் போராட்டங்கள் பல சந்தர்ப்பத்தில் இணைந்தாலும் திரவத்தை ஊற்றித் தங்கத்தைத் தெளிவாக்குவது போல
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் இப்படி சந்தேக உணர்வுகளும் மற்ற நிலைகளும் கடும் விஷத்தின் தன்மையை உருவாக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து தனக்குள் இணைத்தோம் என்றால்
3.கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் நிலை ஏற்படும். மகிழ்ந்து வாழச் செய்யும்.