ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 19, 2025

தீமையை நீக்கும் சக்தியைப் பற்றி குருநாதர் எனக்கு உணர்த்திய விதம்

தீமையை நீக்கும் சக்தியைப் பற்றி குருநாதர் எனக்கு உணர்த்திய விதம்


மனிதனான பின் நாம் என்ன செய்கின்றோம்…? மனிதன் ஆன பின் பண்பு பரிவு பாசம் என்ற நிலை வருகின்றது பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனைகளையும் பங்கு கொள்கின்றோம் கேட்கின்றோம்.
 
நம்மிடம் சம்பாத்தியம் இருந்தால் உதவி செய்கின்றோம். சம்பாத்தியம் இல்லை என்றால் கூட உடலால் சிறிது உதவி செய்கின்றோம். ஆனால் அவர் கஷ்டத்தை நுகர்கின்றோம்.
 
நாம் நுகர்ந்த அந்த உணர்வைச் சுத்தப்படுத்துகின்றோமா…? இல்லையே…! அதற்கு என்ன வழி…?
 
ற்குத்தான் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று
1.அந்தப் பழங்கால நிலைகளில் வாழ்ந்த அந்தப் புலஸ்தியர்கள்
2.தங்களுக்கு வரும் தீமையிலிருந்து எப்படித் தப்பித்துக் கொண்டார்கள்…? என்பதைச் சொண்னார்.
 
காட்டிற்குள் கூட்டிக் கொண்டு போனவுடனே ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கச் சொல்கின்றார்.
 
யானைகள்… கூட்டமாக வரும் நேரத்தில் கொண்டு போன உடனே அந்தப் பச்சிலையை நசுக்கச் சொன்னார்/
 
யானை மனிதனைப் பார்த்த உடனே சும்மா விடுமா…? அது என்ன செய்கின்றது. அது தனக்குள் காதை விடைத்துத் தலையைத் தூக்குகின்றது.
 
அப்பொழுது
1.கையில் பச்சிலையை நசுக்கி “ஃபூ…” என்று ஊது என்கின்றார்..
2.ஊதியவுடன் அந்த விஷத்தினால் அந்த யானையிக்கு ஒரு மயக்கம் வரச் செய்கின்றது.
3,அப்பொழுது அதற்குப் பெயர் யானை மிரட்டி.. அந்தப் பச்சிலையைப் பார்த்தவுடன் யானை மிரண்டு ஓடுகின்றது.
 
இதே மாதிரி புலி வருகின்றது. அந்த புலியின் தன்மைக்கு என்ன செய்கின்றார்…? அதே மாதிரி ஓரு பச்சிலையை எடுத்து நசுக்கி இதே மாதிரி “ஃபூ…” என்று ஊது என்கிறார்.
 
அப்பொழுது அந்தப் பச்சிலையின் மணத்தை நுகர்ந்தவுடனே விஷம் ஒடுங்குகின்றது… புலி விலகிச் செல்கிறது.
 
அப்போது இன்னொரு பச்சிலை எடுக்கின்றார். ஒரு தேன்கூடு இருக்கின்றது. நீ பச்சிலையைத் தேய்த்து விட்டுக் கையைக் கொண்டு போய்க் கூட்டிற்குள் விடு என்கின்றார்.
1.தேனீ என்னைக் கொட்டவில்லை.
2.அதுபாட்டிற்கு விலகிச் சென்று விட்டது. அப்பொழுது அந்த பச்சிலையைப் பார்த்தவுடன் அதனின் விஷங்கள் ஒடுங்குகின்றது.
 
அப்புறம் ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொள்ளச் சொன்னார்/ தேளைப் பிடித்து என் மீது விடுகின்றார். சாமிசாமி…! என்கின்றேன்.
 
அட நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா. தேள் உன்னை என்ன செய்யும் என்கிறார்…? பச்சிலையை கையில் கொடுத்து விட்டு தேளை விடுகின்றார். தேள் என்னை ஒன்றும் செய்யவில்லை.
 
பச்சிலையைக் கீழே போடு என்கின்றார். கீழே போட்டவுடன் பட்டீர் என்று அடித்தது. கீழே போட்ட உடன் பொட்டென்று டித்தது.
 
ஏன்டா இப்பொழுது கொட்டுகின்றது என்றார்…? எனக்கென்ன சாமி தெரியும்…! என்றேன்.
 
1.உன் உடலில் இருந்த அந்தப் பச்சிலையின் மத்தினால் தேளின் விஷத் தன்மை ஒடுங்குகிறது.
2.பச்சிலைகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரியுமா…?
3.பச்சிலை நம்மைக் காக்கவும் செய்கின்றது மருந்தாகவும் பயன்படுகின்றது
4.பல விஷ ஜந்துகளிடமிருந்து நம்மைக் காக்கவும் செய்கின்றது.
 
இந்தப் பச்சிலைகளைத் தான்… உயிரணு புழுவில் இருந்து எல்லா உயிரினமும் எல்லாவற்றையும் சாப்பிட்டு வந்தது. இத்தகைய நிலைகள் கொண்டு தான் மனிதனாக இருக்கிறோம்.
 
மனிதனான பிற்பாடு என்ன செய்கின்றோம்…? இதையெல்லாம் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்த பிற்பாடு கெட்டது வராதபடி தடுக்கின்றோம்.
 
இப்படித்தான் புலஸ்தியர் என்று சொல்பவர்கள் காட்டு விலங்குகளுடன் விலங்குகளாய் வாழ்ந்து வந்த அந்தக் காலத்து மனிதர்கள் இந்த மாதிரி விஷங்களை ஒடுக்கக்கூடிய பச்சிளைகளை எல்லாம் சந்தர்ப்பத்தால் தெரிந்து கொள்கின்றார்கள் என்று என்னைத் தெளிவாக்கினார் குருநாதர்.