
அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகள்
அகஸ்தியனின் தாய் தந்தையர் காட்டிலே வாழும்
போது அவர்களுடைய புலனறிவால் தன்னைக் காத்துக்
கொள்ளும் ஞானத்தின் நிலைகள் வளர்கின்றது. அப்படி வளர்த்த அந்த தாய் தந்தையரின் கருவில்
வளர்ந்த நிலைதான் பிற்காலத்தில் அகஸ்தியன் என்ற நிலை வந்தது.
அகஸ்தியன் அங்கே குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே நஞ்சு கொண்ட எதுவுமே
வருவதில்லை. மிருகங்கள் கொஞ்சித் திரியும் நிலைகளுக்கு வந்து விட்டது.
1.ஆக தாய் தந்தையர் முலாம் பூசிக் கொண்ட அந்த நஞ்சு கொண்ட மணத்தை நுகர்ந்து கண்டு மற்ற மிருகங்கள் விலகிச்
சென்றாலும்
2/ஆனால் அதே சமயம் அந்த நஞ்சு கொண்ட மிருகங்கள்
அனைத்தும் அகஸ்தியனைத் தீண்டாமல் பாதுகாக்கும்
நிலைக்கே அமைகிறது.
இதைக் கண்ட அன்னை தந்தையர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
1.கடவுளின் அவதாரமாக நம் குழந்தை பிறந்து இருக்கிறது
என்று பேரானந்த நிலை பெற்று
2.அன்று சூரியனை வணங்கி வந்த வழக்கப்படி அந்தக் குழந்தைக்கு அவனே தான் இந்த அருள் கொடுத்தது
என்று
3.அவர்கள் அறியாது இயங்கிய
நிலைகள் கொண்டு அந்த குழந்தையைப்
போற்றிக் காத்து வந்தார்கள்.
இருப்பினும் அவர்கள் உடலிலே அதிகமான நஞ்சின் தன்மை பூசியதால் அதனின் உணர்வுகள் உடலில் சிறுகச் சிறுக விளைந்து இந்தக் குழந்தை ஐந்து வயது ஆவதற்கு
முன் அந்த உடல்கள் மடிந்து விடுகின்றது.
மடிந்தபின் இவன் தனித்து வாழுகின்றான் அகஸ்தியன். தன் அன்னை தந்தையர்
இறந்துவிட்டனர் என்று இந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு காலை
கதிரவன் அவன் சுடரை வீசி வரப்படும் போது கதிரவனைப் பார்த்து…
1.என்னை ஈன்ற அன்னை தந்தையர் மடிந்து விட்டனர்
2.அந்த அன்னை தந்தையரின் அருளை நான் பெற வேண்டும்
3.அவருடைய அணைப்பு எனக்கு வேண்டும் என்றும்
4.என் அன்னை தந்தையரை நான் பார்க்க வேண்டும்
என்றும் இந்த உணர்வினை விண்ணை நோக்கி ஏங்கி
4.அன்னை தந்தையரைப் பெற
வேண்டும் என்ற உணர்வில்… அறியாப்
பருவத்தில்
5.ஒளி சுடராக வீசி வரும் அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி அந்தக் கதிரவனின் காந்தப்புலனை
எண்ணி ஏங்கி வணங்குகின்றான்.
அப்படி வணங்கப்படும் போதுதான் தான் தாயின் கருவிலே அவன்
உடலுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வின் தன்மை… “நஞ்சினைக் காணும் நிலையை” அவனுக்குள் உருவாக்குகின்றது.
இப்படித் தன் தாய் தந்தையரை எண்ணி அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கம் கொண்டு கதிரவனைப்
கண்ணால் பார்க்கப்படும் பொழுது கதிரவனிலிருந்து வெளிப்படும்
அந்த நஞ்சின் தன்மையை அவன் உணர்கின்றான்.
விஞ்ஞானிகள் அல்ட்ரா வயலட் என்று இன்று சொல்வதை அன்று இவன் உடலில் இருந்த நஞ்சின்
ஆற்றலால் அந்தச் சூரியனிலிருந்து
வெளிப்படும் அந்த நஞ்சினைக் கண் கொண்டு பார்க்கின்றான்.
ஆக இவன் அறியாத நிலைகளில் இருந்தாலும்
1.இவன் உடலில் விளைந்த இந்த உணர்வின் தன்மைகள்
இவன் எதை எடுத்துச் சூரியனை வணங்கினானோ
2.அந்த ஞானத்தின் உணர்வின்
தொடராக அந்த காந்தப் புலனின் ஆற்றல் பெருகி
3.இவன் எண்ணத்தின் நிலைகள் வலுப் பெற்று
4.சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வினை
உற்று நோக்க அதனின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான்.
அதிலிருந்து வெளிப்படும் நஞ்சும்
சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப் புலன்களும் அதைக் கடந்து வரப்படும் பொழுது அந்த அணுவின் இயக்கங்கள் எவ்வாறு மாறுகிறது…? என்று முதல் முதலிலேயே அணுவின் இயக்க உணர்வின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
ஆகையினால் தான் அவன் விண்ணுலக ஆற்றலும்… அதனின் பரிணாம வளர்ச்சியும்… அணுவின் ஆற்றலும்… பிரபஞ்சம் உருப்பெற்றதையும்… அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலே அவன்
மெய்யுணர்வைக் காணும் நிலைகள் அங்கே வளர்ந்தது.
ஏனென்றால் தாயின் கருவில் இருந்து வளர்ந்த
நிலைகள்
1.அந்த நஞ்சு வலுக்கொண்டதாக… நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் வளர்ந்ததனால்
2.நஞ்சான உணர்வின் தன்மைகளைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை அகஸ்தியன்ன்
அறிந்திடும் பருவம் பெற்றான் முதல் நிலைகளில்.
அவன் உடலில் விளைந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் பிரபஞ்சத்தின்
இயக்கமும் பிரபஞ்சத்தில் அணுவின்
ஆற்றலின் பெருக்கமும் அதனின் நிலைகள் கொண்டு கோள்களானதும் கோள்கள் நட்சத்திரமாவதும் நட்சத்திரங்கள் சூரியன் ஆவதும் என்ற நிலையினை
வெளிப்படுத்துகின்றான்.
அந்தச் சூரியன் நட்சத்திரமாகும் போது அதிலிருந்து
வெளிப்படும் உணர்வுகள் அது எவ்வாறு கோள்களாக மாறி கோள்கள்
நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் அனைத்தும் விண்ணுலக ஆற்றலைப் பெற்று
இந்த நட்சத்திரங்கள் நஞ்சினை வென்று நல்ல உணர்வுகளைத்
தனக்குள் பாய்ச்சி இந்த பிரபஞ்சத்திற்குள் செலுத்துகிறது என்றும்
1.பிரபஞ்சத்திற்குள் இருக்கும் நிலைகள் அதனைக் கவர்ந்து கோளாக மாறி
2.அது உமிழ்த்தும் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து ஒளியின் சுடராக
மாற்றி
3.அதனுடன் கலந்த நஞ்சினைப் பிரித்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கும்
நிலை பெற்றது என்ற உண்மை நிலையை
4.முதன் முதலில் உணர்ந்து பரிணாம வளர்ச்சியும் அணுவின் வளர்ச்சி
நிலையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்,