
நன்மைகள் பல செய்யத் துணிவோம்
உலகில் பக்தி மார்க்கங்களில் எத்தனையோ தவறுகள் செய்து
வருகின்றனர். அகண்ட அண்டமும் இந்தப் பிரபஞ்சமும் இந்த உடலும் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அறியாமையிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும்..
ஒருத்தர் இங்கிருந்து போகிறார் என்றால் அங்கே சாக்கடையாக இருக்கின்றது…! என்று
சொல்கின்றோம். அந்தச் சாக்கடையில் அவர்
விழுகாமல் இருப்பதற்காகச்
சொல்கின்றோம்.
ஒருத்தர் குளிக்கப் போகின்றார். இந்த இடத்தில் மடுகு இருக்கின்றது நீ விழுந்து விடாதே என்று சொல்வதற்கு நாம் தயங்கக் கூடாது. ஏனென்றால்
அவன் அங்கே சென்றால் செத்துப் போய்விடுவான் என்று காப்பாற்றுவதற்காகக் கட்டாயப்படுத்தி நாம் இழுக்கின்றோம்.
சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான்… “போகட்டும்…!” என்று விடுவதற்கு மனது வருகின்றதா…?
1.அதே போல் நம்முடைய ஞானத்தால் மற்ற மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
2.அவன் அகராதி பிடித்தவன் என்று சொல்லக்கூடாது
அந்த உணர்வு நமக்குள் வந்து நம் நல்லதையே மாற்றிவிடும்.
அதே சமயத்தில் நம் வீட்டிலோ அல்லது மற்றவர்களோ சில சந்தர்ப்பங்களில் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்… குறைபாடுகள் வந்துவிடும்.
அந்த அறியாமை என்னும் இருளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்ற வகையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற
வேண்டும் என்று அவர்களுக்கு நாம் பாய்ச்ச வேண்டும்.
அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் நமக்குள் முதலில் இயங்கிவிடக் கூடாது. முன்னால் தடுத்துப் பழக வேண்டும் இல்லை என்றால்
அவர்களுடைய தவறு செய்யும் உணர்வு நம்மையும் தவறு செய்பவர்களாக மாற்றுகின்றது.
இப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…?
1.நான் சொல்லிப் பார்த்தேன் முடியவில்லை என்றால்
2.அதைக் காட்டிலும் நாம் கடுமையான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.
வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் வரப்படும் பொழுது தேடிய
செல்வத்தைக் கூட நம்மால் பாதுகாக்க
முடியவில்லை. நல்ல ஒழுக்கங்கள் எல்லாம் போய் என்ன வாழ்க்கை…? என்ற இந்த உணர்வுகள் நம்மைத் தவறு
செய்பவனாக மாற்றுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும். இராமேஸ்வரத்தில் என்ன செய்கின்றோம்…? நாம் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. இப்பொழுது மனிதனாக ஆனபின் என்ன செய்கின்றோம்…? தனுஷ்கோடி.
அகஸ்தியன் என்ன செய்கின்றான்…? தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றினான்.
1.ஆக நமது வாழ்க்கையில் தீமையின் நிலைகள் வந்தால்
2.அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
இப்பொழுது நோயாளியைப் பார்த்து இரக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினால் சிவ தனுசு ஆகின்றது. அந்த உணர்வின் தன்மை நாம் இயக்கப்பட்டு அந்த நிலைக்குப் போனால் நாம் அடுத்த பிறவிக்குப் போகின்றோம். மனிதனல்லாத
பிறவிக்குத் தான் போக வேண்டும். அவன் வேதனை எப்படிப் பெறுகின்றானோ அந்த உணர்வாகின்றது.
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன பிற்பாடு அந்த துருவ நட்சத்திரம் என்பது விஷ்ணு
தனுசு.
1.உயிருடன் ஒன்றிடும்
உணர்வுகளை அது ஒளியாக மாற்றும்.
2.நமது குருநாதர் காட்டிய வழியில் அதை நமக்குள் பெருக்கி எல்லோரையும்
பெறச் செய்ய வேண்டும்.