ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 27, 2025

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்


இப்பொழுது நம் உடலில் வேதனை என்ற உணர்வுகள் அடர்த்தியானால் கேன்சருக்குண்டான அணுவாக உருவாகின்றது. அப்பொழுது விஷத்தைத் தான் அது உணவாக உட்கொள்கின்றது.
 
அந்த அணுக்கள் உருவானவுடன் விழுதுகளைப் பரப்புகின்றது. எந்தப் பாகத்தில் போகின்றதோ அந்தப் பாகத்தில் எல்லாம் பரப்புகின்றது. அந்த விஷத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.
1.விஷம் இருந்தால் தான் அது இயக்கும்.
2.அப்பொழுது என்ன செய்கின்றது…? நம் உடலில் கேன்சர் வருகின்றது.
3.ஆக வேதனை ஒரு பக்கம் அதிகமாகக் குமியும். நல்ல அணுக்களைச் செயலற்றதாக்கும்.
 
இப்பொழுது நமக்குள் சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று அதிகமானால் நம் நுரையீரல்களில் அது அதிகமாகச் சேர்கின்றது. அப்பொழுது அது சளி கட்டும் தன்மை வரும்.
 
இந்த வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் கிட்னி ஃபெயிலியர் ஆகி ரத்த நாளங்களில் இருக்கக்கூடியது நீர்ச்சத்தாக மாறி நெஞ்சுகளில் அதிகமாக ஆகும்.
1.கிட்னி சரியாக இயங்குவதில்லை நீர்ச்சத்தாக மாறும்.
2.துரித நிலைகள் கொண்டு மனிதனை அழித்துவிடும்.
 
அடிக்கடி வேதனை என்ற உணர்வு அதிகமானால் பித்த சுரப்பியின் உணர்வுகள் அதிகமாகின்றது. இந்தப் பித்த சுரப்பிகள் அதிகமாகி விஷத்தின் தன்மை கூட்ட நம் ரத்தத்துடன் அது கலக்கப்படும் பொழுது தலை சுற்றும் கிறு… கிறு… என்று வரும்.
 
ஆகவே இந்த வேதனை என்ற உணர்வுகளை நாம் பார்த்தால் நினைப்பு வேதனை. ஆனால் இங்கே பித்தங்கள் அதிகமாகும். நாம் தவறு செய்யவில்லை. அந்த விஷத்தின் தன்மை பெருகுகின்றது.
 
அதே மாதிரி இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது நம் உடலில் மேலே தடிப்பாகின்ற மாதிரி கல்லீரலில் அதே மாதிரித் தடிப்பானால் நம் உடலில் இனம் புரியாத வலி ஏற்படும்.
 
அப்பொழுது அந்தக் கல்லீரல் வீக்கம் ஆகத் தொடங்கி விடும். கல்லீரல் வீக்கமானால் மண்ணீரலிலும் இதைப் போன்று பல வீக்கங்கள் தொடரும். அதைப் பார்த்தோம் என்றால் ஈரல் பக்கம் முழுதும் பெரிதாகிவிடும். அது நீண்டு வளரத் தொடங்கிவிடும்.
1.ஆக அந்த மாதிரி அணுக்களை உருவாக்கினால் ஈரலைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
2.டாக்டரிடம் சென்றால் ஈரலை குறைத்தால்தான் நல்லது என்று சொல்வார்கள்.
3.ஆனால் அதைக் குறைத்து யாரும் பிழைத்த மாதிரிக் கண்டதில்லை.
 
ஆகவே இதைப் போல உறுப்புகளை மாற்றி உறுப்புகளை வளர்த்தாலும் சிறிது காலமே இருக்க முடியும்.
 
தேடிய செல்வம் எல்லாம் கொஞ்ச நாள் வாழ்க்கைக்கு பல லட்சங்கள் இருப்பதைப் போட்டு தப்பித்து வந்து விடுகிறார்கள். அடுத்தாற்படி வாழ்க்கைக்கு இல்லை என்றால் மறுபடியும் அந்த வேதனையைத்தான் உருவாக்கும்.
 
ஓரளவுக்கு அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் நிம்மதியாக இருக்கும். உதவிக்கு ஆள் இருக்க வேண்டும். காசு போய்விட்டால் கடன்காரனாகி விடுவோம். இருக்கிற வீட்டை விற்றுவிட்டுச் சிறிய வீட்டிற்குச் செல்வார்கள்.
1.ரொம்பச் செல்வந்தர்களாக இருந்தாலும் கடைசியில்
2.இதை எல்லாம் எதற்கு…? போ…! என்று போகின்ற நேரம் தான் வரும்.
3.ஆகவே இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்.
 
என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வுகள் நாம் பெறுவதற்கு நாம் இப்பொழுது சொல்லும் இந்த ஆயுட்கால மெம்ராகப்படும் பொழுது உங்களுக்கு கொடுத்த இந்தச் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
 
என் பிள்ளை இப்படி வரவில்லையே அது வரவில்லையே என்று கூறிக் கொண்டு அதாவது இந்த உணர்வின் தன்மைக்கு நீங்கள் செலவழித்தால் இதிலிருந்து நாம் என்றைக்கும் மீள முடியாது.
 
அப்பொழுது
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வை நீங்கள் பெருக்கி
2.என் பிள்ளைக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும் அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
3.கல்வியிலோ அல்லது வேறு எந்த நிலைகளிலோ தவறானாலும்
4.அவன் செய்யும் அந்தத் தவறான உணர்வு நமக்குள் வராது காத்துக் கொள்ள வேண்டும்.
 
அவன் செய்யும் தவறின் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனை ஆகி இந்த உணர்வுகள் வந்த பிற்பாடு நமக்கு நோயாகின்றது. நோயாகி வெளியே வந்த பிற்பாடு யார் உடலுக்குள் செல்வோம்…?
 
யாரைப் பற்றி எண்ணி இந்த விஷங்கள் உருவானதோ அவர் உடலுக்குள் தான் செல்வோம். அவனும் பாழானான் நாமும் பாழானோம். இது தான் நடக்கும்.
 
ஆகவே தெரிந்தும் தவறு செய்யக் கூடாது.
1.நீங்கள் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகி
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வளர்ந்து தீமைகளை அகற்ற வேண்டும்.
 
கணவன் மனைவி ஒன்று சேர்த்தே வாழ்தல் வேண்டும். கணவன் வெளியில் சென்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும். அவர் செய்யக்கூடிய காரியங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.
 
கணவன் வெளியில் போகும் பொழுது மனைவிக்கு அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும். ஒன்றுபட்ட உணர்வோடு நாங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
1.பண்பு கொண்ட உணர்வுகளை மனதால் நினைத்து அருள் உணர்வைச் சேர்த்து
2.அந்த ரசத்தை பெண்பாலின் உணர்வைக் கணவன் எடுத்துக் கொண்டால் வெறுப்பு என்ற நிலைகள் மாறும். இருவருக்குமே இது பாதுகாப்பாக இருக்கும்.