ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 20, 2025

வெள்ளிக் கோளும் அகஸ்தியன் ஒளியாக ஆனதும்

வெள்ளிக் கோளும் அகஸ்தியன் ஒளியாக ஆனதும்


தாய் கருவிலே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்ற இந்த அகஸ்தியன் அவன் வாழ்நாளிலே இது எப்படி செடிகளுக்கு மணம் வந்தது…? எப்படி இயக்குகின்றது…? என்ற வகையில் அறிய ஆரம்பிக்கிறான்.
 
ஏனென்றால் விஷத்தை முறிக்கும் ஆற்றல் வரப்படும் பொழுது அந்த உண்மையை அறியக்கூடிய சக்தி அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது. அப்பொழுது இவனைக் கண்டால் காட்டில் உள்ள விஷ ஜந்துக்களே மறைகின்றது.
 
1.மின்னல்கள் வந்தால் எப்படி வெள்ளிக் கோள் அதை எடுத்து அதன் உணர்வின் தன்மை ஒளிக்கற்றையாக மாற்றுகின்றதோ
2.இதே மாதிரி மின்னல்களிலிருந்து வரக்கூடிய உணர்வை இவன் எடுத்து ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றான் அகஸ்தியன்.
 
தாவது சூரியன் அருகிலே செல்லப்படும் பொழுது மோதும் உணர்வின் ஒளிகளை வெள்ளிக் கோள் எடுத்து ஒளியாக மாற்றுவது போல இவன் மனிதன் நிலையில்
1.பூமிக்குள் வரும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய உணர்வின் ஒளியைத் தனக்குள் எடுத்து
2.அந்த ஒளியின் அறிவாலே எங்கெங்கெல்லாம் அது மோதுகின்றதோ அங்கிருக்கும் இருள்கள் எல்லாம் நீங்குகின்றதோ
3.அதன் உணர்வின் இயக்கம் எதுவோ அதை எல்லாம் அறியக்கூடிய சக்தியாகப் பெறுகின்றான் இந்த அகஸ்தியன்.
 
அப்பொழுது அணுவை அறிந்து அகஸ்தியன் ஆகப்படும் பொழுது அவன் வாழ்க்கையில் தீமையை வெல்லும் சக்தி பெறுகின்றான். அந்தத் தீமையை வெல்லும் சக்தி பெற்ற பின் அவனுக்குப் பருவம் வரும் பொழுது திருமணத்தை முடிக்கின்றார்கள்.
 
திருமணம் முடிந்த பிறகு அவன் எதையெல்லாம் தெரிந்து கொண்டானோ அவை அனைத்தையும் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான். மனைவிக்கு எடுத்துச் சொல்லும்போது மனைவியும் அதைக் கேட்கிறது.
 
கேட்டுணர்ந்த பின் கணவன் மேலும் உயர வேண்டும் என்றும் தன் மனைவி ரொம்ப உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும் எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்… இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இரண்டு பேருமே இப்படி எண்ணி வாழ்கின்றார்கள்.
 
அப்போது இவர்கள் இரண்டு பேர் கண்ட உண்மையின் உணர்வுகள் ரெண்டு பேர் உடலிலும் உருவாக்கி இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் இந்த உடலுக்குப் பின்
1.எந்தத் துருவத்திலிருந்து வரக்கூடிய நிலையினை எதை இவர்கள் நுகர்ந்தார்களோ
2.அந்தத் துருவத்தில் வரக்கூடிய உணர்வை நுகர்ந்த பின் அதையெல்லாம் ஒளியாக மாற்றிய பின்
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் முதல் மனிதர்களில் இந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது.
 
இந்தப் பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. துருவ நட்சத்திரம் நமது துருவத்தின் நேராத்தான் அது இருக்கிறது.
 
ஏனென்றால் இந்தப் பூமியில் வந்து உயிரணு தோன்றி அந்தத் துருவத்தின் எல்லைக்குப் போன பிற்பாடு நம் பூமிக்கு வரக்கூடிய உணர்வெல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.
 
அதிலிருந்து விளைந்த உணர்வுகளைக் காலையில் சூரியன் எடுத்து நமது பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமி துருவ வழியில் கவர்ந்து வந்து நமது பூமிக்குள் பரவச் செய்கிறது.
 
அதைப் பெறச் செய்வதற்குத்தான் இப்பொழுது இந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்த்துவது.
 
என் குருநாதர் இதையெல்லாம் சொல்லி எனக்குள் பதிவு செய்தார்.
1.உனது வாழ்க்கையில் நீ எதையெல்லாம் நுகர்ந்தாயோ அதனால் உன் உடலில் எப்படி எல்லாம் கெடுதல் உண்டானது…?
2.அந்தக் கெடுதலை நீ எப்படி நீக்க‌ வேண்டும்…? என்று சொல்லி
3.அந்தத் துருவ நட்சத்தித்தினை எண்ணி எடுக்கச் சொந்னார்.
 
இந்த உடலுக்குள் அது சென்ற பின் எப்படித் தீமையின் வலு குறைகின்றது. அதனை உனக்குள் எப்படி நல்லதாக மாற்றி அமைக்க முடியும்…? என்பதனை உணர்த்தினார்.
 
ஆகவே
1.உன் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை நீக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீ எடுத்து உன் உடலில் செலுத்திக் கொண்டே வந்தால்
3.இந்த வாழ்க்கையில் அதனுடைய வலு பற்று அதிகமாகின்றது
4.அப்பொழுது உன்னை ஆயுள் காலம் மெம்பராக அதிலே இணைக்கின்றேன் என்றார் குருநாதர்.