
புத்தாடை
ஒருவன்
தீமை செய்வதைக் கண்களால் பார்க்கின்றோம் தீமை செய்பவனைப்
பார்க்கப்படும் பொழுது கண்கள் கூர்மையாகப் பார்க்கின்றது.
அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றது. அவன் செய்த தவறின்
உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல குணங்களைக் கொல்கிறது.
நமது
வாழ்க்கையில் அறிந்து கொள்ள நம் எண்ணங்களைச் செலுத்துகின்றோம். நோயோடு வாடுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம்.
கேட்டு உதவி செய்கின்றோம்… இதே கண்களால் தான்…!
1.கண்கள் கொண்டு பார்த்து உதவி செய்தாலும் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தே
விடுகின்றது.
2.நம் உடலுக்குள் சேர்ந்த பின் பூராம் நரகாசுரனாக மாறி விடுகின்றது.
எத்தனையோ
கோடி உடல்களைக் கடந்து இன்று பார்த்து உணர்ந்து நுகர்ந்து மற்றவர்களுக்கு உதவி
செய்தாலும் நமக்குள் “திருடனைப் போன்று” அந்த
வலிமை புகுந்து நம் நல்ல குணங்களைக் கொன்று குவிக்கின்றது.
நரகாசுரனைக்
கொன்ற நாள் எது…? தீபாவளி.
தீமை
என்ற உணர்வைத் தெரிந்து தீமையை நுகர்ந்ததனால் நமக்குள் இத்தனை நோய்கள் வந்தது… அதைக் கண்களால் பார்த்தோம்.
1.அதே கண்களால் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள்
பெற வேண்டும் ஈஸ்வரா என்று
2.அந்தக் காலையில் 4 மணிக்கு எண்ணப்படும் பொழுது
3.கண்ணுற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உடலில்
உள்ள இரத்த நாளங்களில் கலந்து
4.நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் ஜீவணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பாய்ச்ச வேண்டும்.
யாரையெல்லாம்
நாம் பார்த்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவர்கள்
குடும்பங்கள் நலம் பெற வேண்டும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் தொழில்கள் வளம் வர
வேண்டும் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அன்றைக்கு முழுவதுமே
இப்படிச் சொல்ல வேண்டும்.
இப்படி
நமக்குள் தீமைகளை மறந்து செயல்பட்டால்
1.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை காலை 6 மணிக்கெல்ல்லாம்
சூரியன் அதை எடுத்துச் சென்று விடுகின்றது.
2.பரமாத்மாவில் உள்ள அசுர குணங்களும் மாற்றப்படுகின்றது.
நாம்
எடுத்துக் கொண்ட அருள் உணர்வுகள்… எல்லோரும் அன்புடன் பண்புடன்
இருக்கப்படும் பொழுது நம் ஆன்மாவிலே அன்பு கொண்ட புத்தாடையாகின்றது.
தீமைகளை
நீக்கி நல்ல உணர்வு கொண்டு நமது வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்று தான் இந்த புத்தாடை அணியும் நிலையைக் காட்டுகின்றார்கள்.
நாம்
துணிகளைப் புதிதாக அணிவதல்ல…!
தீமைகளை
நீக்கும் துருவ நட்சத்திரத்திண் உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி… நமக்கு அது புத்தாடையாகி பகைமை உணர்வு வராதபடி நம்மை எப்படிக் காத்துக்
கொள்ள வேண்டும்…? நாம் எப்படி மற்றவர்களைப் பார்க்க வேண்டும்…? என்பதற்காகத்தான் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.
நாம்
அதை எல்லாம் மறந்திருக்கின்றோம் விஞ்ஞான உலகால் உலகம் அழியும் தருணத்தில் நமது குருநாதர்
காட்டிய வழியில் ஞானிகள் காட்டிய நெறிகளைப் பின்பற்றினால் வரும் விஷத் தன்மைகளிலிருந்து
நம்மை மீட்டிக் கொள்ளலாம்.
வருடம்தோறும்
ஒவ்வொரு மாதத்திலும் விழாக் காலங்களில் அருள் உணர்வுகளைப் பெருக்கிப் பாருங்கள்.
1.உடலுக்குள் இருக்கும் பகைமைகள் மாறுகின்றது.
2.இந்த காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய தீமையான உணர்வுகளும்
தூய்மையாக்கப்படுகின்றது
3.எல்லோரும் இதை செயல்படுத்தும் பொழுது பரமாத்மா பரிசுத்தம் அடைகின்றது.