ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2025

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் வலிமை

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் வலிமை


வராகன் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நல்ல பொருளை எடுத்து அது உணர்வுக்குள் நல்லதாக மாற்றி நாற்றமான உடலைப் பிளந்து மனிதனாகப் பிறக்கச் செய்தது
 
அதைப் போல் விஞ்ஞான அறிவால் இந்த காற்றுக்குள் இருக்கும் நச்சுத்தன்மைக்குள் மகா ஞானியின் உணர்வலைகள் நமக்கு முன் மிதந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் நுகர வேண்டும்.
 
1.அந்த மகா ஞானியின் உணர்வலைகளை உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்
2.உங்கள் நினைவின் எண்ணங்களைக் கூர்மையாக்க
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த நிலை.
 
பதிந்தபின் நீங்கள் தியானித்து அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காக…
1.நாம் அனைவரும் சேர்ந்து எண்ணி ஏங்கி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது எளிதில் கிடைக்கும்.
 
ஒரு நூலால் ஒரு கடினமான பொருளைத் தூக்க முடியாது ஆனால் பல நூல்களை இணைத்துப் பெரும் கடினமான பொருளையும் தூக்க முடியும்.
 
சாதாரண மனிதன் இந்தப் புவியின் ஆசையுடன் இருக்கப்படும் பொழுது நம் எண்ணத்திற்கு வலு குறைவு. ஞானிகள் பிறவிக் கடனை வென்று இன்னோரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி ஒளியின் சுடராகச் சென்றவர்கள்.
 
அவர்கள் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளுக்கு அருகிலே நம் உணர்வுகள் செல்ல அருகதையற்றது. அதனை நுகர்வது என்றால் மிகக் கடினமானது.
 
அந்த ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டி உணர்ந்து உணர்வின் தன்மையை எம்மை ஏங்கிப் பெறச் செய்து
1.அதை நீங்கள் பெற வேண்டும் என்ற க்கத்துடன்
2.ஞானிகள் கண்ட உணர்வினை உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி இந்த உணர்வுகளைக் கேட்க வைத்து
3.இந்த உணர்வுகளை நுகரச் செய்து நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து
4.இந்த நினைவின் ஆற்றல் எண்ணும் பொழுது
5.டிவியும் ரேடியோவும் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதை காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் காட்டுவது போல
6.இந்த மகா ஞானிகளின் உணர்வலைகளை நம்மால் எடுக்க முடியும். வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும்.
 
ஆலயங்களிலே தேரை இழுக்கப்படும் பொழுது பலரும் ஒன்று சேர்த்து அந்தக் கடினமான தேரை இழுப்பது போன்று நாம் அனைவரும் இந்நேரம் வரை கேட்டுணர்ந்த உணர்வை அந்த மகரிஷ்களின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் தியானிக்கப்படும் பொழுது காற்றுக்குள் மறைந்துள்ள இந்த ஞானிகள் உணர்வலைகளை இங்கே படரச் செய்வதுதான்…”
 
இங்கே படர்ந்த உணர்வின் சத்தை அவரவர்கள் ஏங்கிய நிலையில் கொண்டு பெற முடியும்.
 
இந்தத் தியானம் முடிந்த பின் தியானத்தில் அமர்ந்த அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும் எல்லோருக்கும் பெற வேண்டும் என்று உணர்வினை வெளிப்படுத்தும் போது சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து உயர்ந்த எண்ணத்தின் வலுவாக அது கூடி நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் புற நிலையில் ஈர்த்து உங்களுக்குள் சக்தி வாய்ந்தத உணர்வுகளாகப் பதியச் செய்வதே இந்தக் கூட்டுத் தியானம்.
 
கூட்டுத் தியானத்தின் மூலம்
1.அனைவரின் எண்ணத்தின் வலு கொண்டு நாம் ஈர்க்கும் திறன் பெற்று
2.இங்கே அணைத்து வந்த உணர்வுகள் நமக்குள் இணைத்திடும் சக்தியாக ஆக்கிய பின்
3.இதற்கடுத்து நாம் தனித்து இருந்தாலும் அந்த உயர்ந்த சக்திகளை எப்பொழுது வேண்டுமென்றாலும் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும்…”