ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2025

நல்லது எது…? கெட்டது எது…?

நல்லது எது…? கெட்டது எது…?


குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலையச் செய்து ஒவ்வொரு உணர்வுகளும் நீ நுகரப்படும் போது என்ன செய்கின்றது…? என்று பச்சிலையின் ரூபமாகக் காட்டினார்.
 
1.ஒரு பச்சிலையை நுகர்ந்த பின் அது உனக்குள் எப்படிப் பேசுகின்றது…? என்று பார் என்கின்றார்.
2.அதை நுகர்ந்த உடனே அந்தப் பச்சிலை பேசுமா…? என்று கேட்கின்றார்.
 
எப்படி சாமி பேசும்…! என்றேன்.
 
இப்பொழுது பேச வைக்கின்றேன் பார்…! என்று பச்சிலையை நசுக்கி என்னை நுகரச் செய்தார். நுகர்ந்தவுடனே “ய் என்று பேச ஆரம்பிக்கின்றது… ஐய்யய்ய… என்று ஒரு மாதிரியாக மட்டலாக வருகின்றது.
 
1.இப்பொழுது எது பேசுகின்றது…? நீ பேசுகின்றாயா…? இல்லை அந்தப் பச்சிலையா…?
2.இப்படி ஒவ்வொரு இலைகளையும் நுகரப்படும் பொழுது உணர்த்துகின்றார்.
 
திடீரென்று என்னை ஓங்கி அடிக்க வருகிறார். அப்பொழுது அடிக்க வந்தவுடன் நுகர்ந்தவுடன் என்ன செய்தது…? யார் அடிக்க வந்தது…? நுகர்ந்த உணர்வு உனக்குள் வந்து உன்னைப் பயப்பட வைக்கிறது.
 
அப்பொழுது நீ பயந்தாயா…? நான் செய்த செய்கையை நீ நுகர்ந்த பின் உன்னைப் பயமுறுத்தச் செய்கின்றது. அப்பொழுது நீயா…? இல்லை நானா…?
 
1.இதில் இரண்டையும் சொல்லி இப்படி எல்லாம் வினாக்களைக் கேட்பார்.
2.ஏனென்றால் இதை அனுபவ ரீதியில் ஒவ்வொன்றையும் உணர வைக்கின்றார்.
 
சில நேரங்களை எடுத்துக் கொண்டோம் என்றால் இதை ஏதாவது ஒன்று சொல்வார். இது நல்லதா கெட்டதா…? என்பார். நல்லது என்று சொன்னால் எப்படி நல்லது…? என்பார் கெட்டது என்று சொன்னால் எப்படிக் கெட்டது…? என்பார்.
 
இந்த வினா கொடுப்பதற்கு முன்பே கெட்டது என்று சொன்னாலும் கூட எப்படி கெட்டது என்று…! நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல என்பார்.
 
இப்பொழுது நீங்கள் நல்ல தேனும் பாலும் சுவையாகச் சாப்பிடுகிறீர்கள் அது நல்லது தானே…!
1.ஆனால் உடம்புக்கு முடியாத நேரத்தில் இதைச் சாப்பிட்டால் என்ன செய்கின்றது…? எதிர்நிலையாகின்றது.
2.அப்பொழுது இது நல்லதா கெட்டதா…? என்பார்.
 
இதைச் சொல்லிவிட்டு இது எல்லாம் நல்லது தானே..! எப்படி நீ நல்லது என்று சொல் பார்ப்போம்…? என்று கேட்பார். உடம்பு முடியாமல் போனால் நல்லதை நீ சாப்பிட்டவுடன் அது நல்லது செய்கின்றதா இல்லை கெட்டது செய்கின்றதா…? என்பார்.
 
1.எவ்வளவு நாசூக்காக அவருடைய உணர்வுகளை உணர்த்துவதற்காக வேண்டி அனுபவரீதியாகக் கொடுக்கின்றார்.
2.ஆனால் மனிதன் வாழ்க்கையில் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல.
 
இப்பொழுது நாம் மருந்து சாப்பிடுகின்றோம்… அது கசப்பாக இருக்கின்றது. ஆனால் நோயை நீக்கக்கூடிய தன்மை இருக்கின்றது. மருந்தைச் சாப்பிட்டவுடன் என்ன செய்கின்றது…?
1.நமக்குள் இருக்கக்கூடிய கெட்டதை நீக்கிவிட்டு நல்லது ய்கின்றது.
2.அப்பொழுது அந்த மருந்துக்குள் இருக்கக்கூடிய கசப்பின் உணர்ச்சி என்ன செய்கின்றது…? நமக்கு நல்லது செய்கின்றது அல்லவா…!
 
ருசியின் தன்மை இருக்கும் போது நீ ருசியாகச் சாப்பிடுகின்றாய். சாப்பிடும் போது உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்கின்றது…? வயிற்று வலி வருகின்றது தலைவலி வந்து விடுகின்றது வாந்தி வந்து விடுகின்றது எல்லாம் வந்து விடுகின்றது. அப்பொழுது இது எப்படி நல்லதாகும்…? என்று கேட்கின்றார்.
 
ஆக நாம் நுகரும் உணர்வுகளை இயக்குவது யார்…? நமது உயிர். அப்பொழுது நமக்குக் கடவுள் யார்…? நமது உயிர். அந்த உணர்வின் தன்மையை நாம் இயக்கி உடலில் உணர்வின் தன்மை அணுவாகி விட்டால் நம் உள் நின்று குணத்தின் தன்மை உயிரைப் போலவே உள் நின்று கடவுளாக இயக்கும்.
 
1.அது தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் பிரணவத்திற்குள் பிரணவம்.
2.இயக்கத்தின் தன்மை எப்படி இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.
 
ஆகையினாலே நாம் இந்த ஆயுட்கால மெம்பராக இருப்பதெல்லாம் எப்போது நமக்குத் தீமை என்று தெரிகின்றோமோ அப்போதே அதைக் கொன்று பழக வேண்டும்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது நமக்குள் வளராது ஆத்ம சுத்தி செய்து அதை நாம் அடக்கிப் பழக வேண்டும். அதை வளரவிடக் கூடாது.
 
நாம் மிளகாயை அள்வாகக் குழம்பில் போடும்போது அது ருசியாக வருகின்றது. அதே மிளகாய் அதிகமாகி விட்டால் ருசி கெடச் செய்கிறது. ஆகவே நாம் தீமை என்ற கார உணர்ச்சிகளை நுகரும் போதெல்லாம் கொன்று பழக வேண்டும்.
 
குழம்பில் அதிகமாக காரம் இருந்தால் இரண்டாவது முறை சாப்பிடத் தோன்றுமா? உஷ்…உஷ்… என்று தள்ளி விட்டுவிடுகிறோம். அப்போது அதைச் சாப்பிடுகின்றோமா…? இல்லை.
 
இதை போல தான் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒருவர் தீங்கு செய்தான் என்று தெரிகிறது. இப்படித் தீங்கு செய்தானே இப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று நாம் உள்ளுக்குள் போட்டவுடன் என்ன செய்கின்றது…? நமக்குள் இருக்கக் கூடிய நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது. ஆக நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றும்.
 
ப்பொழுது நாம் எதைக் கொல்ல வேண்டும்…?
1.அவனை எண்ணி அவன் வழியில் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் கொல்வதா…?
2.ஆனால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காக்க தீமை என்று உணர்வு நமக்குள் வருவதை அதைக் கொல்வதா…?
 
நன்றாக யோசனை செய்து பாருங்கள். 
 
அந்த உயர்ந்த சக்திகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்காக குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராக என்னை இணைத்தாரோ அதே போல் ஆயுட்கால மெம்பராக உங்களையும் இணைக்கின்றேன்.
 
அகஸ்தியன் எப்படித் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்றானோ கணவன் மனைவி ஒன்றாக இணைந்தனரோ இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமாகப் பெற்றனரோ அதன் வழிப்படி இந்த ஆயுட்கால மெம்பர்கள் உங்கள் குடும்பத்தில் அன்புடனும் பற்றுடனும் பரிவுடனும் வாழ்தல் வேண்டும்.
 
தன்னை அறியாது வரும் தீயவினைகளை
1.இராமாயணத்தில் பரதன் சொன்னது போல அந்தத் தீமை என்ற உணர்வுகளை
2.அப்போதே அதைக் கொன்று அருள் உணர்வினைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
 
ஆயுட்கால மெம்பராக வந்தவர்கள் நீங்கள் இதனை வழிப்படுத்தி நடத்தி இந்த உடல் தான் கடைசி உடல் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுங்கள்.