
அருள் ஞானச்சக்கரம்
“அருள் ஞானச்சக்கரம்” பூஜை அறையில் வைக்க வேண்டும். சில சிரமங்களையோ சங்கடங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளையோ உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும் “எந்தக் காரணத்தைக் கொண்டும்…”
1.கணவன் மனைவிக்குள் பேரானந்த நிலையைத் தான் என்றும் உருவாக்க வேண்டும்.
2.கோபங்கள் வரலாம்… ஆத்ம சுத்தி செய்து உடனே அதைத் தடுத்துப் பழக வேண்டும்…
3.நானும் விடுபட வேண்டும்… மனைவியும் அதிலிருந்து
விடுபட வேண்டும் என்று
4.ஆனால் இதை நீங்கள் சீராகச் செய்தால் “நான் செய்வது தான் சரி” என்று வராது.
பால் ருசியாகத் தான்
இருக்கின்றது… அதிலே பாதாமைப் போட்டால் ருசியாகத் தான் இருக்கிறது. ஒரு துளி காரம் பட்டு விட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சி
தான் வரும்.
ஆது போல் நம் நல்ல மனதில் வெறுப்பை ஊட்டினால் என்ன செய்யும்…? விடாப்பிடியாக
அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைத் தணித்துச் சுவையாக மாற்ற
வேண்டும்.
தியானம் செய்தேன் என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என்றால் நீங்கள் எதைச்
செய்கின்றீர்கள்…? இந்த உணர்வைக்
கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகிறீர்கள்.
1.தியானத்தைக் கூட்டி நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.அந்த உணர்வு பெறுக வேண்டும் என்று மனதிலே
பெருக்க வேண்டும்.
வேதனை உணர்வுகளை எடுத்து “எல்லாம் செய்தேன்… இப்படி ஆகிவிட்டது என்னத்தைத்
தியானம்…?” என்று கொண்டு போனால் அது நமக்கு அல்ல. கடைசியில் நாம் எதை எடுத்து எண்ணுகின்றோமோ அதைத்தான்
உயிர் உருவாக்கும்.
ஆகவே எந்த காரணத்தைக்
கொண்டும் தனுசுக்கோடி…! வரக்கூடிய தீமைகளை மாற்றி… கோடி என்று சொன்னால்
எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்குவது…
பிறவில்லா நிலை அடையச் செய்வது.
உணர்வின் எண்ணங்களைப் பற்றி இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.
அதை நாம் கடைபிடித்து நம் வாழ்க்கையை இந்த
உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும்.
என்னதான் ஒழுங்குபடுத்திச் செல்வத்தைத் தேடினாலும் அது நிற்குமா…? இந்த உடலே சொந்தமில்லை என்கிற போது உடலால் தேடிய செல்வம் எப்படி நிலைத்து இருக்கும்…!
1.அந்தப் பேரருளை இந்த உடலிலே கூட்ட வேண்டும்
2.எந்த அளவுக்குக் கூட்டுகின்றமோ இது அழியாச் செல்வமாகின்றது.
3.என்றும் ஏகாந்த நிலை வருகின்றது… அழியா ஒளிச்சரீரம் பெறுகின்றோம்
4.அதைத்தான் ஒவ்வொரு மகரிஷிகளும் பெற்றார்கள்… அதையே நாமும் பெறுவோம்.