எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும் ஆத்ம வலுக் கொண்டு ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு உயர் காந்த மின் ஒளியை ஜெபத்தால் எடுக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
1.இப்படிப்பட்ட வாழ்க்கை தொடரில் வளர்த்துக் கொள்ளும் உயிராத்மா இணைப்பில்
2.கணவன் மனைவியின் கூட்டு ஜெபத்தால் மனிதன் தெய்வ நிலை பெற முடியும்.
அண்டத்தின் அகிலமாய்... ஆதி சக்தியின் அனைத்துப் படைப்பிலும்...
1.ஆண்டவன் என்ற உயர்ந்த நிலையில்
2.அதன் தொடர் பெற்று வளரும் தன்மையை இறை நிலையாக்கி
3.இறை சக்தி கொண்டு... இறை உணர்வு பெற்று...!
4.தெய்வத் தன்மை கொள்ளும் தொடர்பு நிலை தான் “இயற்கையின் உண்மை நீதி நிலை...!”
மனிதனின் எண்ணத்தின் உணர்வில் பகுத்தறியும் உயர் ஞானத்தின் வழித் தன்மை கொண்டு இறை நிலை பெற்று... இறை சக்தியாய்... இறை உணர்வு குணத்தை... இச்சரீர வாழ்க்கையில் வலுப்பெறும் வளர்ச்சிக்கொப்ப... மனிதன் தெய்வமாகும் நிலை உண்டு.
மனித வாழ்க்கைக்குத் தேவையானதை... நாளை செயல் கொள்ள இன்றே சேமிக்கும் செயலை... அந்தத் திறமை கொண்டு வழி அமைக்கும் பக்குவம் “மனிதனுக்குதான் உண்டு...!”
வாழ்க்கையின் நடைமுறைக்கு உழுது பயிரிட்டுப் பலன் பெற்றுத் தான் இன்றைய மனிதன் சமைத்து உண்ணுகின்றான்.
உடலின் சுக நிலைக்கு ஏற்ற பல வழி முறைகளைத் தன் ஞானத்தால் மனித வாழ்க்கை நடைமுறையில் செயல்படுத்தும் நாம்...
1.நம் ஞானத்தின் உயர்வால் உயிராத்மாவைத் தெய்வத் தன்மை கொள்ளும் பக்குவத் தொடர் தான்
2.இங்கே இந்த உபதேச வாயிலாக விளக்கப்படும் இயற்கையின் உண்மையின் நியதிகள்.
மிருகங்கள் தனக்குக் கிடைத்ததை உண்டு உறங்கும் வாழ்க்கையாக அதனின் உணர்வின் எண்ணத்தின் நிலை இருந்தாலும் உயர் ஞானத்தால் செயல்பட முடியாத உண்மை நிலையை அன்றே ஞானிகள் தன் உணர்வின் எண்ணத்தால் கண்டுணர்ந்தனர்.
ஆனால் காலப் போக்கில் ஞானத்தின் வழி செல்வது என்பது பல நிலைகளில் மாற்றப்பட்டு... உண்மைத் தத்துவங்கள் மறைக்கப்பட்டு விட்டது.
தன்னுள் உள்ள இறை சக்தியை இறை உணர்வாக்கும் நிலையை மனிதன் அறிய முடியாமல்
1.இறைவன் என்பதையே யாரென்று அறிய முடியாமல்
2.பூஜித்துப் பலன் காணும் வேத விற்பனர்களிடம் அடிமைப்பட்டு
3.சிதறுண்ட நிலையாகத் தான் இன்றைய நிலை உள்ளது.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உணர்வின் எண்ணத்தில் தன் எண்ணத்தாலே சக்தி பெற்று... உயர்வை வளர்க்கும் உயர்ந்த தத்துவத்தை ஆதிசங்கரர் அத்வைத முறைப்படுத்திக் காட்டினார்.
அதற்கடுத்து வந்தவர்கள் நான்கு வகை வேதங்களாக்கி... மனித உருவங்களை அமைத்து... மந்திர ஒலி எழுப்பி... அறியக்கூடிய நிலைக்கும் பக்தி மார்க்க நிலைக்கும்... வானசாஸ்திரத்தின் தொடரை அறியவும் கொண்டு சென்றனர்.
அந்த நான்கு வேதங்களின் தொடரில் இது தான் பெரிது... இல்லை அது தான் பெரிது... என்று பல வேதங்களைப் பிரித்து மனிதனின் எண்ண உணர்வால் தெய்வத் தன்மை பெறக்கூடிய வழியை மாற்றி விட்டனர்.
அரசு நிலைக்கும்... குடிமகன் நிலைக்கும்.. நாட்டியக்கலை மற்ற இசைக்கலைகளுக்கும்... வேதத்தின் விற்பன்னர்களுக்கும்... என்று நான்கு மறையாக்கி வகுக்கப்பட்ட நிலையில் அந்தந்தத் தொடருக்குப் பல நிலைகளைப் பிரித்தனர்.
அது மட்டுமல்லாமல் காலப்போக்கில் ஒலி அலையின் தொடர் பெற்று உருவகங்கள் மாறி மாறி
1.அன்று கண்ட ஞானியின் உண்மைத் தத்துவத்தை
2.இன்றைய நிலையில் உணரும் தன் ஞானமும் அற்றுப் போய்
3.விஞ்ஞானப் பிடிப்பிலேயே வாழுகின்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது.
இதிலிருந்து மீள வேண்டும் என்றால்... ஞானத்தின் வழித் தொடரில் உயர் ஞானமாக்கும் ஆத்ம தியானத்தால்... தன்னைத்தான் தான் உணரும் பக்குவம் பெற்று மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான “தெய்வ நிலை” பெற முடியும்.