ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2023

வாழ்க்கையில் வரும் சிக்கல்களுக்குக் காரணம் தாய் கருவிலே உருவானதும்… சந்தர்ப்பத்தில் நுகரும் சாப அலைகளும் தான்

குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது

அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.

1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்த0 படம் ஆடும். அதுவும் பதிவாகும் அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.

இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரியவரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.

1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்

இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.

இதைத் துடைப்பது யார்…?

இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” - பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!

எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகிவிட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.

முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”

ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சக்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.

அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”