ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2023

குருநாதர் என்னை உதைத்தார்… உங்களை நான் அடித்தால் என்ன செய்வீர்கள்…!

என் குருநாதர் சொன்னதை நான் (ஞானகுரு) செய்யவில்லை என்றால் உதை கொடுத்தார். உங்களை நான் அடித்தால் என்ன செய்வீர்கள்…! வாங்கிக் கொள்வீர்களா…?

எனக்குத் திருப்பிக் கொடுப்பீர்கள்…!

என்னடா… சாமி என்னென்னமோ சொல்ல்லிவிட்டுக் கடைசியில் உதைக்கின்றார் என்பீர்கள்…! உங்களை நான் உதைக்க முடியுமா…?

ஒருவர் என்ன செய்தார்…? ஐயோ… என் கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று அலறுகின்றார். நான் என்ன சொன்னாலும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார்.

போய்யா…… உனக்குக் கஷ்டமும் இல்லை ஒன்றுமில்லை போ…! என்று சொன்னேன்.

என்ன… சாமி இப்படிக் கோபிக்கின்றார்…? என்கிறார். உங்களிடம் நான் இப்படிச் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்…?

1.இந்த அழுத்தத்தைக் கொடுத்த பின் என்ன செய்யும்…?
2.சரி.. இதனுடன் அந்தத் துன்பம் போனது என்று நீங்கள் நினைத்தால் பரவாயில்லை. துன்பம் போய்விடும்.

இது நடந்த நிகழ்ச்சி.. ஒரு அம்மாவிற்கு ரொம்பக் கஷ்டம்… சொத்துக்களை இழந்துவிட்டது. வீட்டையும் கூட எடுத்துக் கொண்டு தொல்லை கொடுக்கின்றார்கள்.

எப்படியாவது இந்தச் சொத்துகள் கிடைத்து விட்டால் நான் பிழைத்துக் கொள்வேன் என்று என்னிடம் கேட்டது.

சரி.. நீ நான் சொல்வது போன்று செய் என்றேன். அவருடைய கஷ்டத்தையும் மற்ற நிலைகளையும் பார்த்துவிட்டு இது போன்ற நிலைகளைச் செய்து வந்தால் உங்களுக்கு அது கிடைக்கும் என்று தெளிவுபடுத்தினேன்.

ஆனால் சொத்தை வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
1.கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள் என்று நீ சொல்லாதே… அதை விட்டுவிடு…
2.”கிடைக்க வேண்டும்…” என்று சொல்லித் திருப்பி எண்ணிப் பாருங்கள்… உங்களுக்குக் கிடைக்கும்…! என்று நான் சொன்னேன்.

எங்கெங்கே… எங்கெங்கே…! என்று அப்படியே கேட்கின்றது.

பின் நான் கோபமாகச் சொல்லி “உங்களுக்குக் கிடைக்கும்மா…” இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று அழுத்தமாகச் சொல்லி அடுத்து நீங்கள் அடுத்து நல்ல செய்தி கொண்டு வருவீர்கள்…! என்று சொன்னேன்.

அப்படிங்களா… சரி…! என்று அதன்படி செய்தது. முதலில் கேஸ் நடத்துவதற்கே பணம் இல்லை என்று சொல்லி இருந்தார்கள். எப்படியோ எல்லாம் கிடைத்து… கேசும் ஜெயித்து விட்டது… வீடும் கிடைத்தது அந்த அம்மாவிற்குச் சந்தோஷமானது.

அதோடு விட்டார்களா என்றால் இல்லை… “விடவில்லை...!” அன்றாடப் பிழைப்புக்குத் தொழில் செய்யலாம் என்றால் அதற்குப் பணம் இல்லையே என்று அடுத்து இதைச் சொல்கின்றது.

அதற்கு நான் என்ன செய்வது…?

திரும்பத் திரும்ப… திரும்ப திரும்ப… பணம் இல்லை… பணம் இல்லை என்று கஷ்டத்தைச் சொல்லி அழுகின்றது. எல்லாம் வந்ததுங்க… இருந்தாலும் இப்பொழுது தொழில் செய்யாமல் எப்படி வாழ்வது…? என்று தெரியவில்லை. வீட்டை வைத்துத் தான் ஏதாவது வாங்க வேண்டும் என்று சொல்கிறது.

முதலிலே கடன் வாங்கி எல்லாம் போனது அல்லவா..! ஆனால் அதிலிருந்து மீண்டு வந்தது அல்லவா…! அதே போன்று
1.இப்போது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்று விரும்பி அதைச் செயல்படுத்துங்கள்
2.“அதற்குண்டான வாய்ப்புகள் வரும்…” என்று சொன்னேன்.

எங்கெங்கே நடக்கப் போகின்றது…? என்று இப்படியே என்னிடம் பேசுகின்றது. இதற்கு நான் என்ன சொல்வது…!

சொத்து இல்லை என்று முதலில் வந்தாய்… அது எப்படி அம்மா உனக்குக் கிடைத்தது…? அதன் வழியில் இதுவும் வரும் அல்லவா…! என்று சொன்னேன்

வரும்…! ஆனால் இன்றைக்குப் பிழைப்புக்குச் சொல்லுங்கள்… நான் என்ன பண்ண வேண்டும்.

ஏனென்றால்
1.நான் சொன்னதை விடுத்து விட்டு
2.அந்தக் கஷ்டத்தை எடுத்துக் கொள்கின்றது அதையே பேசிக் கொண்டிருக்கின்றது.

நடந்த நிகழ்ச்சி.

எனக்குக் கோபம் வந்துவிட்டது ஏனம்மா…! நான் சொன்னபடி செய்யாதபடி மீண்டும் மீண்டும் இந்தத் தரித்திரத்தையே எண்ணிக் கொண்டிருக்கின்றாய்… “இந்தத் தரித்திரத்தை விட்டு விடம்மா… நன்றாக இருப்பாய்…!” என்று சொன்னேன்.

எங்கெங்கே என் தரித்திரம் என்ன விட்டுப் போகின்றது…? என்று மீண்டும் அழுகின்றது.

சீ… போ…! என்று அந்தத் தரித்திரத்தைச் சீ… போ…! என்று நான் சொன்னேன்.

அந்த அம்மா உடனே என்ன சொல்கிறது…!

சாமி என்னைப் போகச் சொல்லிவிட்டார். சாமியைத் தேடி நான் வந்தாலும் கூட அவர் என்னிடம் கோபித்துப் பேசுகின்றார் பாருங்கள்… என்று அதனுடைய உணர்வையே பேசுகிறது.

1.தரித்திரமே - சீ… போ…! நல்ல காலம் வரட்டும்… என்று யாம் கொடுக்கக்கூடிய வாக்கு
2.தீமை என்ற உணர்வை மாற்றுவதற்கு இப்படிச் சொன்னாலும் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லை.

கோ… என்று அழுக ஆரம்பித்து விட்டது. என் கஷ்ட காலம் பாருங்கள் சாமி கூட என்னைக் கோபமாகப் பேசுகின்றார்கள்.

ஏனென்றால் நான் எதைச் சொல்கின்றேன் என்ற அர்த்தம் கூடப் புரியாதபடி அதனுடைய உணர்வுகளிலேயே தான் நிற்கின்றது.

சாமி போகச் சொல்லிவிட்டார் என்று அழுது கொண்டே செல்கின்றது. அதனுடைய அழுத்தங்கள் அப்படி இருந்தாலும் நான் கொடுத்த வாக்கு எப்படியோ அங்கே நிறைவேறுகின்றது.

வட்டி இல்லாமல் ஒருவர் பணம் கொடுக்கின்றார் கடை வைத்து வியாபாரம் நடந்தது பணம் வந்தது. எல்லாம் நடந்த பின் இரண்டாவது தடவை என்னிடம் வந்து “என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்…” என்று சொல்கிறது.

அன்று தான் நான் விளக்கத்தைச் சொல்கின்றேன்.
1.உன்னுடைய தரித்திரத்தைத் தான் நான் போகச் சொன்னேன்
2.நீ கோபித்துக் கொண்டு சென்று விட்டாய் அம்மா…! என்று சொல்கின்றேன்.

என்ன பண்ணுவது…! அந்தத் தரித்திர நேரத்தில் என்னால் நல்லதைக் கேட்க முடியவில்லை. ஆனால் இப்பொழுது தரித்திரம் போய்விட்டது கடையில் வியாபாரம் நன்றாக நடக்கின்றது. கஷ்டமெல்லாம் நிவர்த்தியாகி விட்டது என்று சொல்கிறது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.சந்தர்ப்பத்தில் வரும் அந்த தரித்திரத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துக் கொள்கின்றீர்களே தவிர
2.அதை நான் “போ…!” என்று சொன்னவுடன் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது…?

ஏனென்றால் முதலில் அந்த அம்மாவிடம் நான் இதைச் சொன்ன பின் கோபித்து என்னிடம் ஒன்றும் சொல்லாமலே சென்று விட்டது. போய்… எல்லாம் நன்றாக ஆன பின்பு தான் இங்கு வருகின்றது.

ஆக “நான் மறைமுகமாகச் சொன்னாலும் கூட” ஏற்றுக் கொள்ளும் பண்புகள் இல்லை. சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா…!