தொழிலைச் செய்து சொத்தைச் சேர்க்கலாம் என்று விரும்புகிறோம். இருந்தாலும் அது எல்லாம் அழியக்கூடிய சொத்து தான்… காரணம் நம் உடலே அழியக்கூடியது தான்.
உடலால் செல்வத்தைச் சம்பாதித்தாலும் “அது இந்த வாழ்க்கைக்கு தான் உதவும்…!” ஆனால் அதுவும் சீராகப் பார்க்கவில்லை என்றால் அந்தச் செல்வத்தையும் காக்க முடியாது.
சொத்தைச் சம்பாதித்து வைத்திருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் நோயாகி வேதனை வேதனை என்று வந்தால்
1.அப்படி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலே
2.சம்பாதித்த சொத்தை எல்லாம் கையிலே கொடுத்தால் “இது எதற்கப்பா…?” என்று கேட்பார்கள்.
சம்பாரித்த சொத்து அவர்களுடையது தான். அதை விரிவாக்கி அங்கே இவ்வளவு இருக்கின்றது… இங்கே இவ்வளவு இருக்கிறது… இதை எல்லாம் என்ன செய்யலாம்…? எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டால்
1.எங்கேயாவது தொலைந்து போங்கள்…!
2.என்னிடம் ஏனப்பா சொல்கிறீர்கள்…?
இந்த உணர்வின் தன்மை வந்துவிடுகிறது.
சம்பாதித்து வைத்திருந்தாலும் வேதனையாக இருக்கும் பொழுது இந்த சொத்தைப் பற்றிச் சொல்லும் போது என்ன ஆகிறது…?
எங்கேயாவது கொண்டு விடுங்கள்…! என்ற நிலை தான் வரும்.
சொத்தைச் சம்பாதித்து வளர்த்துக் கொண்டிருக்கும் போது உடலிலே நோயான பின் “எனக்கு இப்படி வந்து விட்டதே…!” என்று வேதனையில் உடலின் பற்று தான் வருகின்றது… அதனால் நஞ்சாகி விடுகின்றது.
உடலின் பற்று வரும் பொழுது யார் மேல் நம் நினைவுகள் பற்று அதிகமாக வருகின்றதோ… இந்த உணர்வின் தன்மை வந்தபின் அதைப் பற்றிக் கொள்கின்றோம்… அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்… அங்கே சென்றுவிடும்.
இந்த உடலுக்குள் வந்து பிறவிக்கு வரும் பொழுது என்ன செய்கின்றோம்…?
1.இந்த உடலிலே விளைந்தது சாகாக்கலையாக உருவாகி
2.ஆசையை அங்கே தூண்டி அதன் வழியில் அந்த உடலையும் மடியச் செய்யும்
அதன் உணர்வு பேயாக அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி பூத கணையாக விளைகின்றது… அது தான் பூதங்கள்…! இத்தகைய உணர்வின் தன்மை விளைய வைத்த பின் எதனை அடக்கி அதற்குள் வளர்ந்ததோ அது அந்த உணர்வின் தன்மை வந்த பின் உயிரினங்கள் எதனின் வளர்ச்சி பெற்றதோ அங்கே கொண்டு போய் அதுவாக உருவாகி அதனின் செயலாகவே உருவாக்கிவிடும்.
புலியோ நரியோ பாம்போ இவையெல்லாம் தன் இரையத் தேடி இரக்க்கமற்றுக் கொன்று சாப்பிடுகிறது. மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. அதைக் கொடூரமாக தாக்கி உணவாக எடுக்கிறது.
இந்த மனித வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிலைகளைச் செய்பவர் எவரோ அந்த எல்லைக்குத் தான் இந்த உயிர் அழைத்துச் செல்லும். அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது.
ஆக… பிறர் படும் வேதனையை நாம் எடுத்து விளைய வைத்துக் கொண்டால் இத்தகைய நிலை வந்து விடுகிறது.
நம் குழந்தை மீது நமக்குப் பற்று இருக்கின்றது. குழந்தை வேதனைப்பட்டால் பாசத்தால் நாமும் அதைக் கண்டு வேதனைப்படுகின்றோம்.
ஆனால் எனக்கு பிடிக்காதவர்கள் ஏதாவது வேதனைப்பட்டார்கள் என்றால் வெறுப்பால்… “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசிக்கின்றோம்.
நம் பையன் சரியாக வரவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். ஆனால் பிடிக்காதவர் என்றால் “நினைத்தேன்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… அப்படித்தான் நடக்கும்…!” என்று இந்த விஷத்தை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்.
1.ஏனென்றால் எது அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும்
2.அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!
ஆகவே அதனின் உணர்வின் செயலாகவே அதனின் அறிவாகவே நம்முடைய இயக்கமும் நம் பார்வை எதுவோ இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் கூர்மை அவதாரம்.
எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ அப்படிப்பட்ட அவதார புருஷனாக இது மாற்றி விடுகின்றது.
ஆனால் தீமையை நீக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து ஒளியாக ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டால் கல்கியின் அவதாரம்.
எது மற்றவருக்குள் தீமையாக உருவாக்கியதோ அந்த இருளில் இருந்து விலக வேண்டும் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.வெறுமனே சொன்னால் அவர்கள் உணர்வு தான் நமக்குள் புகுந்து விடும்
2.ஈஸ்வரா என்று உயிரிடம் சொல்லி அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.கேட்டறிந்த உணர்வின் தன்மையை ஆன்மாவிலிருந்து முதலில் பிளக்க வேண்டும்… நரசிம்மா…!
இப்படி… அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மையை முதலில் நமக்குள் சேர்க்க வேண்டும். தீமைகளைப் பிளந்து ஒளியாக மாற்றி… நஞ்சினை வென்றிடும் நிலையாக…
1.மற்றவருக்கு வழிகாட்டும் உணர்வின் தன்மையாக
2.இதைத்தான் நாம் கொண்டு வர வேண்டும்.