ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 21, 2023

இராமாயணம் சாதாரணமானது அல்ல

சந்தர்ப்பத்தால் நமக்குள் பதிவான உணர்வுகள்… அது எதன் வலுவோ அதனைக் கொண்டு நம்மை இயக்குகின்றது. எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ “உள் நின்று இயக்குவது தான்…” அதன் தன்மை.

அதனைத் தான் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றனர்.

ஒருவன் சண்டை இடுகிறான் என்றால்
1.அது என்ன...? என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்துகின்றோம்...
2.அதனை நாம் கவர்கின்றோம்... அது தான் வசிஷ்டர்.

எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மை கவருகின்றோமோ... கவர்ந்த உணர்வுகள்
1.நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்…
2.இந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மமாகி (சிருஷ்டியாகி) விடுகின்றது

கவர்ந்து கொண்ட உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பது தான் வசிஷ்டர் பிரம்மகுரு. பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு.

ஒருவனின் செயலை நாம் பார்க்கும் போது
1.அவன் என்ன செய்கின்றான்... ஏது செய்கின்றான்...?
2.தவறு செய்கின்றானா...? குற்றங்கள் செய்கின்றானா...?
3.ரொம்பவும் பிழைகள் செய்கின்றானா...? பிறரை வேதனைப்படுத்துகின்றானா...? என்று உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டபின் வசிஷ்டர் பிரம்மமாகின்றது.

சூரியனிலிருந்து வெளிப்படக்கூடியது வெப்பம் காந்தம் விஷம். அதிலே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர்... ஆண்பாலாக மாறுகின்றது.

ஆண்பாலாக மாறும் பொழுது பிரம்மம் என்று பெயர். பிரம்மாவின் மனைவி சரஸ்வதி... எந்தச் சத்தின் தன்மை அது இயக்குகின்றதோ “அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்...” என்று பொருள்.

1.இந்த உலகம் எப்படி இயக்குகின்றது...? இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது...?
2.எதன் வழி நாம் செல்கின்றோம்...?
3.நாம் குற்றவாளியா... குற்றமற்றவர்களா...? குற்றங்கள் செய்வதன் காரணம் என்ன…?
4.குற்றத்தின் இயல்பை உண்டாக்குவது எது...? என்ற நிலையில்
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை முதலிலே உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்.

இந்த உண்மையின் இயக்கங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம்.

உடலில் தூசி பட்டால் பிசு…பிசு… என்று ஆகிறது. ஒரு பக்கம் மிளகாய் தூற்றுகின்றனர் என்றால் அது நம் மீது பட்டால் எரிகின்றது விஷத்தன்மையான பொருள்கள் நம் மீது பட்டு விட்டால் அரிக்கின்றது.
1.நாம் தவறு செய்கின்றோமா…? இல்லை.
2.ஆனால் காற்றுடன் காற்று கலந்து வந்து நம் மீது மோதும் பொழுது இத்தகைய உணர்ச்சிகளைத் தருகிறது.

இதே போல் தான் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் செல்லப்படும் போது “தீமை என்ற உணர்வுகளும்” நமக்குள் வருகிறது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைக் குற்றவாளியாக ஆக்குவதற்கு முன்
1.அந்தக் குற்றங்கள் எப்படி எதனால் செயல்படுத்தப்படுகிறது…?
2.அவரா…? சந்தர்ப்பமா… சூழ்நிலையா…? என்று இந்த உணர்வுகளைத் தெரிந்து
3.அந்தக் குற்றத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்…
4.தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான நிலை பெற வேண்டும் என்று உணர்வினை நுகர்ந்து பழக வேண்டும்.

அப்படி அல்லாதபடி அவர் குற்ற இயல்புகள் நமக்குள் வந்துவிட்டால் அதன் உணர்வு நம்மை இயக்கி… அதன் உணர்வினை நாம் அறிந்து… அதன் உணர்ச்சியின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது நாம் கவர்ந்தது அனைத்தும் வசிஷ்டர்.

இரத்தத்தில் கலந்து கொண்ட பின் இந்திரலோகம் என்றாலும்… அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பிரம்மமாகி உடலுடன் ஐக்கியமாகி விடுகிறது.

பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…! இராமாயணத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. காரணம் இராமாயணம் சாதாரணமானது அல்ல.

1.நாம் நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எண்ணங்கள் எப்படி வருகின்றது…?
2.எண்ணத்தின் உணர்ச்சிகள் உடலை எப்படி இயக்குகின்றது…?
3.அந்த உணர்ச்சியின் உணர்வுகள் நம் உடலில் எப்படி விளைகின்றது…? என்பதை
4.இராமாயணக் காவியத்தில் வான்மீகி உணர்த்தியுள்ளார்.