ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2023

ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு

தியானம் செய்யும் அன்பர்களுக்குள் கொஞ்சம் குறையாக வந்து விட்டால் குறையை வளர்த்துக் கொள்ளத்தான் முடியுமே தவிர “மகரிஷிகள் உணர்வை எடுக்க முடியாது...”

1.கூட்டமைப்பாக இருக்கும் ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்ற நிலை வரும் ஆனால் குறைகள் தான் வளரும்...
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்பது முதலில் வராது.

தன்னுடைய நிலைகள் முன்னணியில் எது போகும்...?

எதன் வளர்ச்சி வந்ததோ நம்மை அறியாமலே ஸ்தாபனத்தின் உணர்வுகள் குரு கொடுத்த உணர்வுகளை பெறாதபடி தடுக்கும் நிலை தான் வருமே தவிர இதை வளர்க்க முடியாது. காப்பதாக நினைப்போம்... அதைக் காக்க முடியாது.

காப்பதாக நினைத்துக் கொண்ட பற்று என்ன செய்யும்...?
1.உயர வேண்டும் என்று ஆசை இருக்கும்
2.ஆனால் காக்க வேண்டும் என்ற நிலை இருக்காது
3.நம்மை அறியாமலே காக்கும் நிலைகள் தவறிவிடும்.

காக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கும் ஆனால் அந்தப் பற்றின் தன்மை என்ன செய்யும்...? அறியாதபடி “பிழைகளாக” வந்துவிடும்.

எப்படி...?

நான் (ஞானகுரு) ஸ்பின்னிங் மில்லுக்குள் இயந்திரம் எவ்வாறு ஓடுகின்றது என்று பார்ப்பதற்குச் செல்கிறேன். அப்பொழுது என்ன நடந்தது...?

வழியில் இருந்த சாக்கடையைத்தான் நான் கவனித்தேன் தலைக்கு மேல் உயர்ந்த இடத்தில் இருக்கும் கம்பியை நான் பார்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு நான் எல்லாவற்றையும் உபதேசிக்கின்றேன் அதே சமயத்தில் அந்த அவசர காலம் அதில் மோதுகின்றது மோதும் பொழுது மண்டையில் இடித்து விட்டது.
1.தவறிப் போய் இடித்து இருந்தால் ஆள் அவுட் ஆயிருக்கும் (நான் இறந்திருப்பேன்). அந்த மாதிரியான இடத்தில் தான் மோதி இருக்கின்றது.
2.ஆகவே... தவறுகள் யார் எதைச் செய்தாலும் அந்த சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது...?
3.அதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செல்லும் பாதைகளில் அது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது அந்த தீமை நம்மை இயக்கி விடாதபடி அந்த நேரத்தில் “நம்மைப் பாதுகாக்கும் உணர்வை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்...”

ஒரு சந்தர்ப்பம் இப்படி நடந்து விட்டது என்றால் உடனே
1.ஈஸ்வரா...! என்று அந்த உணர்வை நுகர வேண்டும். உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நாம் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

உதாராணமாக சமையலே செய்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பிலே வைத்திருக்கின்றோம்... அதிலே வேறு ஒரு பொருள் தவறி விழுந்து விட்டால் என்ன ஆகும்...? ஒரு பல்லியே விழுந்து விட்டால் சமைத்த பொருள் அனைத்தும் விஷமாக மாறிவிடும்.

நல்ல குழம்பை வைக்கின்றோம் அதிலே கசப்பை அதிகமாகப் போட்டு விட்டால் குழம்பின் ருசி கேட்டுவிடும் அதை நாம் மாற்ற வேண்டும் அல்லவா...?

இதைப் போன்று நாம் நல்ல செயல்கள் செயல்படும் பொழுது
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் “வந்தே தீரும்...!”
2.அப்படி வரும் பொழுது அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

அதை நீக்குவதற்கு வழி...?

அதற்குத் தான் “குரு வழி” என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடனுக்குடன் தீமைகளைத் தடைப்படுத்த வேண்டும் என்று திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்வது...!

இதை இராமாயணத்தில் தெளிவாகவே காட்டுகின்றார்கள். இராமன் குகை மீது இருக்கும் பாறையைத் தட்டி வாலி வெளியே வர முடியாதபடி பாதையை மூடி விடுகின்றான். வாலி செயல் இழந்து விடுகிறான்.

குகை மேல் என்கிற பொழுது...
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இங்கே நம் புருவ மத்தியில் வைத்து மூடி விட்டால்
2.தீமை உள்ளே புகுவதற்கு வாய்ப்பு இல்லை... புறத்தால் தடுக்கப்படுகிறது.

உடலுக்குள் வாலி என்ற (தீமை செய்யும்) உணர்வுகள் அதிகமாகி விட்டால் இரண்யன் நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும் ஆகவே தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து அதை நிறுத்த வேண்டும் என்று சொல்வது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “சுக்ரீவன்” என்று காரணப் பெயராக வைக்கிறார்கள்.