ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 7, 2023

அரசர்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு உயர்ந்த தத்துவங்களை ஞானிகள் கொடுத்தார்கள்… நாம் காப்பாற்றுகின்றோமா…!

குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும்… எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம் ஆனால் அவன் சரியாக வரவில்லை என்றால் “இப்படிப் பண்ணுகிறானே…” என்று வேதனைப்படுகின்றோம்.

ஒருவர் கஷ்டத்தைக் கேட்டால் வேதனை…! ஒரு காரியத்திற்காகப் போகிறோம்… அது தடையானால் வேதனை…
1.இது எல்லாம் விஷமாக மாறுகிறது… நாம் தவறு செய்யவில்லை.
2.வேதனை என்றாலே விஷம் தான்.

உதாரணமாக… சிறிதளவு விஷம் குடித்தால் மயக்கம் வரும்… அதிகமாகி விட்டால் மனித எண்ணமே இல்லாது போய்விடும். இதைப் போன்று வேதனை என்று விஷத்தின் தன்மை கொண்டு சிந்திக்கும் நிலை இல்லாது போய்விடுகிறது.

தேள் கொட்டி விட்டால் கடு…கடு… என்று இருக்கும். அந்த நேரத்தில் யாராவது சந்தோஷமாகச் சிரித்தால் இன்னும் கொஞ்சம் எரிச்சல் அதிகமாகும். நான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்… உனக்குக் கேலியாகத் தெரிகிறதா…? என்று ஆத்திரம் வரும்.

ஆனால் இப்படி எல்லாம் நீ வேதனைப்படாதே…! என்று சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு சொன்னால் “என்னைக் கிண்டல் செய்கின்றாயா…?” என்று எரிச்சல் வரும்.

இது போன்றுதான் இந்த விஷத்தின் தன்மை நம்மை அறியாமலேயே சேர்ந்து விடுகின்றது. வேதனை என்ற விஷத்தைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

அதற்காக வேண்டித் தான் ஞானிகள் ஆலயத்தை உருவாக்கி இந்த உண்மைகளை உணர்த்தி அங்கே உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்தார்கள். ஆனால் கோவிலுக்குச் சென்று அப்படி யாரும் வேண்டுவதில்லை… ஞானிகள் சொன்னதை எடுப்பதில்லை.

உடலைக் கோவிலாக மதித்துத் தனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கு அபிஷேகம் ஆராதனை எப்படிச் செய்ய வேண்டும்…? புஷ்பங்களை எப்படிப் போட வேண்டும்…? எந்த மணத்தைக் கொடுக்க வேண்டும்…? என்று புறத்திலே காட்டி அகத்திற்குள் எடுக்கச் சொன்னார்கள்… அந்தக் கெட்டுப்போன குணங்களை ஈடு செய்வதற்காக…!

நல்ல குணத்துடன் இருந்தேன்… ஒருவன் கஷ்டப்படுவதைப் பார்த்து வேதனைப்பட்டேன். ஆனால் அந்த வேதனை
1.என் நல்ல குணங்களை மூடி மறைத்து விட்டது
2.இதைத்தான் அங்கே ஆலயத்தில் வைத்துக் காட்டுகின்றார்கள்
3.திரையை நீக்கி விளக்கைக் காட்டிப் பொருளை அறிவது போன்று
4.நம் உடலுக்குள் நல்ல குணங்களை மறைத்திருக்கும் இருளை அகற்றிவிட்டு
5.அந்த நல்ல குணத்தை மீண்டும் தட்டி எழுப்புவதற்கு அங்கு காட்டுகின்றார்கள்.

அப்படி இல்லாதபடி அந்தத் தெய்வத்தைப் பார்த்து அழுது வேதனைப்பட்டு
1.உன்னை எவ்வளவு நாள் நான் கும்பிடுகின்றேன்…?
2.என் பையனுக்காக உன்னிடம் எத்தனை முறை வேண்டினேன்…?
3.உன்னிடம் வரம் வாங்கித்தானே இவன் பிறந்தான்
4.நீ தானே இந்தக் குழந்தையைக் கொடுத்தாய்
5.ஆனால் இப்படிச் செய்கின்றானே… இது உனக்கே சாட்சியாக இருக்கின்றதா…? என்று வேதனைப்பட்டு அழுதால் என்ன பண்ணும்…?

இந்த எண்ணத்துடன் மீண்டும் பையனைப் பார்த்தால் “அவனை உதைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் வரும். இல்லை என்றால் அருகிள் இருக்கிற மற்ற பொருள்களை எடுத்து அடித்து நொறுக்குவோம்.

அவன் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் அதன்படி அவன் வரவில்லை என்றால் இப்படிச் செய்கின்றானே இப்படிச் செய்கின்றானே… படிப்பு அவனுக்கு வரவில்லையே…! என்று இதையே சொல்லிக் கொண்டிருப்போம்.

அவனுக்கு நல்ல முறையிலே படிப்பு வர வேண்டும்… ஞாபக சக்தி வர வேண்டும்…! என்று அந்தக் கோவிலுக்குச் சென்று இப்படிப்பட்ட நல்ல எண்ணங்களை எடுக்க வேண்டும் என்று தான் ஞானிகள் காட்டினார்கள்

ஆனால் அங்கு எல்லா அபிஷேகங்களையும் செய்து விட்டு அவன் இப்படிப் பண்ணுகின்றானே எதிர்காலத்தில் என்ன செய்யப் போகின்றானோ…? என்று அங்கே இப்படித்தான் கும்பிடுகின்றோம்.

அங்கே காட்டப்பட்ட மலரை போன்ற மணம் என் குழந்தை பெற வேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்; பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; நான் சொல்வதைப் புரியக்கூடிய அந்தக் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; நான் எண்ணிய அந்த உயர்ந்த நிலைகள் அவனுக்குள் செயல்பட வேண்டும்; பிறர் அவனைப் பார்க்கும் பொழுது அந்த நல்ல உணர்வுகள் அவனிடமிருந்து வெளிப்பட வேண்டும்…! என்று இப்படி அர்ச்சனை செய்தால் உங்களுக்கு இது நல்லதாகும்.

ஆனால் காசைக் கொடுத்து விட்டுக் குங்கும அர்ச்சனை அது இது என்று எத்தனையோ அர்ச்சனைகளைச் செய்கின்றார்கள். அந்த அர்ச்சனை முடிந்த பின்பு
1.அந்தக் குங்குமத்தை வாங்கிப் போட்டு வைத்தால் சரியாகிவிடுமா…!
2.எதை அர்ச்சனை செய்ய வேண்டும்… எதை அர்ச்சனை செய்கின்றோம்…?

அந்த ஞானிகள் உணர்வை எடுத்து அதைத் தன் குழந்தை பெற வேண்டும் என்று இப்படி அர்ச்சனை செய்தால் “அது அந்த குழந்தைக்குள் பாயும்…!” எப்படி…?

நன்மை செய்தார்கள் என்று நண்பர்களுக்குள் எண்ணினால் வெகு தூரத்தில் இருந்தால் விக்கலாகிறது. துரோகம் செய்தான் பாவி இவன் உருப்படுவானா…! என்றால் புரையோடும்.

ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு தான் இயங்குகின்றோம். “டெலிபதி மாதிரி” இந்த உணர்வு தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றது ரேடியோ டிவி அலைவரிசை இயக்குவது போன்று இயக்குகின்றது.

இந்த உணர்வு இப்படி இயக்கும் போது வேதனையாகி இன்னும் கொஞ்சம் ரிப்பேர் ஆகி நம் உடலில் அந்த வாசனைகள் பெருகி எங்கே பார்த்தாலும் வெறுப்பு வளரும்.

காலம் கெட்டுவிட்டது… என் ஜாதகம் நேரம் காலம் சரியில்லை… கெட்ட நேரம்…! என்று முடிவு செய்து ஜோசியக்காரனிடம் சென்றால் “அவன் ஒன்றைச் சொல்வான்…”

நம் வீட்டில் உள்ள இந்தக் குறைகளை எல்லாம் பக்கத்து வீட்டில் சலிப்படைந்து சொல்லிக் கொண்டிருப்போம். அதைக் கேட்பவர்கள் உனக்கு வேறு வேலை இல்லையா...? என்று இரண்டு தடவை சொல்லி விட்டால் போதும்.

இவர்கள் தான் ஏதோ செய்து விட்டார்கள் என்ற சந்தேகம் வரும். உள்ளுக்குள் இருந்தே நமக்கு ஏதோ கெடுதல் செய்கிறார்கள்… பக்கத்தில் இருந்தே நமக்கு எதிராகச் செய்கின்றார்கள்…! என்ற முடிவு கட்டுவோம்.

1.ஜோசியக்காரனிடம் சென்ற பின் அவன் இதை உறுதிப்படுத்துவான்.
2.உங்களுக்கு இன்னார் செய்வினை செய்திருக்கிறார்கள் என்று சொல்வான்
3.நான் நினைத்தேன்… “ஜோசியன் சரியாகச் சொல்லி விட்டான்...” என்போம்.

இப்படித்தான் இந்த வாழ்க்கையிலே சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றோம். காசைக் கொடுத்து வேதனையை விலைக்கு வாங்கும் நிலையில் தான் இருக்கின்றோம்.
1.நம்முடைய எண்ணங்களை அடுத்தவன் கையிலே அடமானம் வைத்து வாழுகின்றோம்.
2.ஏமாற்றுபவன் கையிலே காசைக் கொடுத்துவிட்டு எதையோ எதிர்பார்த்து
3.அந்த அடிப்படையில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

ஆக… எந்தத் தெய்வத்தை வணங்குகின்றோமோ… எந்தத் தெய்வ சக்தியை நாம் பெற வேண்டுமோ…
1.அந்தத் தெய்வ சக்தியை நாம் பெற முடியாதபடி
2.நம் அருகிலே வர விடாதபடி அடைத்து விடுகின்றோம்.

இது போன்ற நிலைகளை எல்லாம் மீட்டுவதற்குத் தான் குருநாதர் காட்டிய வழிகளில் உங்களைத் தெளிவாகிக் கொண்டு வருகிறோம்

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தான் கோவிலிலே சித்தரித்துக் காட்டியுள்ளார்கள். அந்த குணங்களை எப்படிக் காக்க வேண்டும்…? எப்படி வளர்க்க வேண்டும்…? என்று தான் ஞானிகள் சொல்லிவிட்டுச் சென்றார்கள்

அரசனுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு உண்மைகளை வெளிப்படுத்திச் சென்றார்கள் அந்த ஞானிகள். ஆனால் அதை நம்மால் காப்பாற்ற முடியவில்லை.

திருமூலர் சொன்ன அந்த உயர்ந்த கருத்துக்களை மந்திரமாக மாற்றி விட்டார்கள். திருமூலம் என்கிற பொழுது
1.திரு என்றால் உயிர்… மூலம் என்பதும் உயிர்…
2.அந்த மூலத்திலே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒலி ஒளியாக எப்படி இயங்குகின்றது…? என்று தான் அவர் கொடுத்தார்.

அடுத்த உடலில் (பாம்பின்) இருந்து மீண்டும் மனித உடலுக்குள்… ஒரு ஏழ்மையான உடலுக்குள் வந்த பிற்பாடு… உயர்வையும் தாழ்வையும் இரண்டையுமே இணைத்துப் பார்க்கும் போது தான்… அந்த மெய் உணர்வின் ஒலிகளை பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்துணர்ந்து பக்குவ நிலையை உணர்த்திச் சென்றார் அந்தத் திருமூலர்…!