ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2023

விண்ணில் கோள்கள் கரைவது போல் மண்ணுலகில் வரும் தீமைகளை நாம் கரைக்கப் பழக வேண்டும்.

நாங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் பிணிகளில் இருந்து விடுபட வேண்டும் மெய்ப்பொருளுடன் ஒன்ற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அவர்களுக்கு அங்கே பாய்ச்ச வேண்டும்.

அதே சமயத்தில் சந்தர்ப்பவசத்தால் ஒருவருக்கொருவர் பகைமைகள் யார் யாரிடமெல்லாம் உண்டானதோ
1.அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.அவர்கள் நலமாக வாழ வேண்டும்
4.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் பெற வேண்டும் என்று நாம் அவர்களை நினைக்க வேண்டும்.

இப்படி ஒருவருக்கொருவர் நம்மை அறியாது புகுந்த தீய வினைகளுக்கு உணவு கொடுக்காதபடி இப்படி எண்ணி ஒதுக்கிவிட வேண்டும். இதே போன்று அவர்களும் எண்ண வேண்டும்.

இப்படி இருவருமே பகைமை ஊட்டும் உணர்வுகளை இழுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை என்றால் அது விலகி அப்பால் சென்று விடும்.

நம் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால்
1.சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் கோள்கள் சுழன்று கொண்டிருக்கிறது…
2.காந்த ஈர்ப்பு வட்டத்திலே தான் அது சுற்றி வருகின்றது
3.ஆனால் சூரியனின் ஈர்ப்பின் (காந்தம்) நிலைகள் இழந்து விட்டால் கோள்கள் எங்கோ ஓடிச் சென்று விடும்.
4.ஆரம்பத்தில் எந்த சூரியனை மையம் கொண்டு சுழற்சி நிலைகள் பெற்றதோ அதன் ஈர்ப்புக்குள் சென்று கரைந்து விடும்

ஒரு பிரபஞ்சத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் இருக்கின்றது
1.அதனுடைய அடிப்படை வரிசையிலே “சுழல் போன்று” ஒன்று (BLACK HOLE) உண்டு.
2.சூரியனின் சக்தி முடிந்தபின் (முதுமை அடைந்த பின்) அந்தச் சுழலுக்குள் ஈர்க்கப்பட்டு
3.தனது இனத்தைக் கவர்ந்து மீண்டும் கலக்கி பிரபஞ்சத்தில் பறக்கச் செய்யும்.
4.மற்ற இனத்திற்கு இதை உணவாகக் கொடுத்து அதை வளரச் செய்யும்.

இது இயற்கையின் சில நியதிகள்.

இது எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். நீ கோள் என்றும் நினைக்கின்றாய் சூரியன் என்றும் நினைக்கின்றாய் அதுவும் கோள்தான் அதனின் கடைசி நிலைன் இப்படி ஆகும் என்றார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் விண்ணிலே கரைவது போல் மண்ணுலகில் வரும் தீமைகளை நாம் கரைக்க வேண்டும்.

அதைத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தீமைகளை அகன்று செல்லச் செய்யும் நிலையாக அதைக் கரைக்கும் (கடலில்) நிலையாக “விநாயகர் சதுர்த்தி” என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நம் எண்ணத்தால் எடுத்தது அணுக்களாக விளைந்திருக்கின்றது. அதனின் ஈர்ப்பாக… அந்த இழுக்கும் சக்தி இல்லாதபடி நாம் தடைப்படுத்தி பட்டால் அது இந்த பூமியின் சுழற்சியின் தன்மையில் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்.

உதாரணமாக கடல் அருகிலே சென்றால் அது அப்படியே இழுக்கும். அலைகள் மோதி மறுபடியும் தனக்குள் இழுக்கும். உள்ளே இழுக்கும் பொழுது எல்லாவற்றையும் இழுத்து உள்ளே கொண்டு செல்லும்.

இதைப் போன்று எந்தெந்த மனிதன் பால் நாம் உணர்வின் தன்மை எடுத்து வைத்திருக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை படர்ந்த பின் எதற்கும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கிற பக்கம் செல்ல முடியாது. அது செவிட்டில் அறைந்தது போன்று அடித்துத் தள்ளிவிடும்.

மரம் செடி கொடிகளுடைய சத்து தான் மனிதனுக்குள் எண்ணங்களாக வந்தது இருந்தாலும் பிற தீமையின் உணர்வுகள் கலந்து அது வேறு சுவை கொண்ட நிலையாக மாற்றியது

ஆகையினால் மனிதனால் உருவாக்கப்பட்ட தீய வினைகள் அதாவது அந்தத் தீமையின் அலைகள் இங்கே போகாது.

விண்ணின் நிலைகளில் சூரியனின் பிடிப்பில்லை என்றால் அதன் ஈர்ப்பில் உள்ள கோள்கள் எங்கே போய் மடிகிறதோ சொல்ல முடியாது அதைப் போன்று
1.சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் தான் பெரும் கடல்… அது முதலில் உருவானது
2.கடல் அதைத் தனக்குள் எடுத்துக் கரைத்து மீண்டும் அது வெளிப்படும்.
3.அதாவது மனிதர்கள் ஒதுக்கித் தள்ளிய தீய வினைகள் கடலின் ஈர்ப்புக்குள் சென்று அது மூழ்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத் தான் காவியத்தில் கருத்தினைச் சொல்லி விநாயகர் சதுர்த்தி…! களிமண்ணில் சிலையாகச் செய்து தீமைகளைக் கரைத்திடும் நிலையாகக் கடலில் கரைப்பதாகக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்.

தனக்குள் உறைந்த தீய வினைகளை பிறர் மேல் கொண்ட பகைமைகளைக் கரைக்கச் சொன்னார்கள்.

1.நாம் பார்க்கும் எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று
2.அந்தப் பகைமைகளுக்கு இங்கே இடம் இல்லாதபடி செயல்படுத்த வேண்டும்
3.உலக மக்கள் அனைவரும் இப்படிச் செயல்படுத்தும் பொழுது தீமைகள் இங்கே இருக்காது… தீமைகள் கரைக்கப்படுகின்றது.

ஞானிகள் காட்டிய வழியிலே… சாஸ்திரப்படி இது பேருண்மை.