ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2022

சூரியனிலிருந்து வெளி வரும் இயக்க அணுவும்… பிரகலாதனும்

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் தினசரி சந்திக்கின்றோம். வேதனைப்படுபவரையோ கோபப்படுவோரையோ வெறுப்படைவரையோ பார்க்காமல் நாம் இருக்க முடியாது.

ஆனால் அந்த வேதனை கோபம் வெறுப்பு உள்ளுக்கே போகாதபடி தடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா. அதற்குத் தான் இதை உபதேசிக்கிறோம்.

தீமை நீக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

பிள்ளை மேலே பாசமாக இருக்கின்றோம்… ஒரு மார்க் குறைந்து விட்டால் போதும் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…? பிள்ளைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…?

நீங்கள் சமப்படுத்த வேண்டும் அல்லவா.
1.ஆனால் வேதனையை எடுத்துச் சமப்படுத்த விரும்புகின்றீர்கள்
2.இந்த உணர்வுகள் நமக்குள் வந்து மீண்டும் சிவ தனுசாக மாறுகின்றது… வேதனைக்கொப்ப உடலாக (வேதனைப்படும் உடலாக) மாறுகின்றது.

அதனால் தான் பிரகலாதன் கதையிலே நாராயணனுக்கும் இரணியனுக்கும் இரண்டு பேருக்கும் அங்கே கேட்கின்றார்கள்.

பிரகலாதன் என்றால் இதிலே பிறக்காதவன். அதாவது
1.எதிலுமே பிறக்காதவன் தான் பிரகலாதன் என்று காட்டுகின்றார்கள்.
2.சூரியனிலிருந்து ஒவ்வொரு இயக்க அணுக்களும் வருகிறது அல்லவா…!

என்னால் தான் பிறந்தது என்கிறான். சூரியனால் தான் இயக்கப்படுகின்றான் என்கிறான். என்னால் தான் பிறந்தது என்னால் தான் உருவானது என்று இயக்க அணுவைப் பற்றிப் பிரகாலதன் கதையிலே காட்டுகின்றார்கள்.

ஹரி ஓம் நமோ நாராயணா…! சூரியனின் இயக்கமாகத்தான் நம் உடல் எல்லாம் இருக்கின்றது என்று பிரகலாதன் சொல்கிறான்.

அவன் எங்கே இருக்கின்றான் என்று இரண்யன் கேட்கின்றான்…?

உன்னிலும் இருக்கின்றான்… என்னிலும் இருக்கின்றான்… எல்லாவற்றிலும் இருக்கின்றான்.

அவனைக் காட்டு…! என்கிறான்.

தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று காட்டுகின்றான்.

அவனை அழித்து (தூணை உடைத்து) அந்த உணர்வின் வேகத்தைப் பார்க்கப்படும் பொழுது அதிலிருந்து அந்த உண்மையை உணர்த்திக் காட்டுகின்றது

1.தன் உடலுக்குள் இருக்கும் தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை தான் வருகின்றதே தவிர
2.உன்னால் அழிக்க முடியும்… உணர முடியாது
3.அதை ஈர்க்க முடியும்… ஆனால் வளர்க்க முடியாது.
4.தீமையைத்தான் வளர்க்க முடியும்…! என்று பிரகலாதன் கதையில் அதைக் காட்டுகின்றார்கள்

எவ்வளவு பெரிய உண்மையைக் காட்டுகின்றார்கள்.

வெறும் கதையாக நினைக்கின்றோம். மக்கள் நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நல்ல குணத்தில் அதை வலுவாக்க வேண்டும்.

அந்தச் சக்தி வலுவான பின் வேதனையான உணர்வுகள் இங்கே வருகிறது அல்லவா... அதை உள்ளிருந்து பிளந்து விடுகின்றது.

இது தான் மடி மீது இரணியனை (நஞ்சான உணர்வுகள்) வைத்து நமக்குள் வரும் தீமைகளை வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன்... இந்த ஆறாவது அறிவால் இதைப் பிளந்து பழகுதல் வேண்டும்.

இப்பொழுது நாம் ஒன்பதாவது நிலையிலிருக்கின்றோம். அதைப் பிளந்தால் “பத்தாவது” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்