வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்தில் உயிரணு உருவாவதற்குக் குருவாக இருக்கின்றது. மனிதனாக வளர்ப்பதற்கும் உயிரணுக்களை வளர்ப்பதற்கும் வியாழன் கோளே காரணமாக இருக்கின்றது.
அதனால் தான் வியாழன் கோளைக் “குரு” என்று சொல்வது. இதைப் போல்
1.27 நட்சத்திரங்களின் உணர்வுகளில் மனிதனான பின் ஒருக்கிணைந்து மனிதனை உருவாக்குகின்றது... அது தான் நவமி.
2.மனிதன் முழுமையாக ஆவதற்கு இந்த 27 நட்சத்திரமே மூல காரணமாக இருக்கின்றது.
எத்தனையோ செடி கொடிகளில் அதைச் சேர்த்தாலும் அது சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சேர்த்து இன்று சூரியன் எப்படி ஒளிக்கதிராக ஆனதோ அதைப் போல் மனிதனின் ஆறாவது அறிவு... “ஒளியாகத் தெளிந்திடும் இந்த உணர்வுகள்” நமக்குள் விளைகின்றது.
சூரியன் பாதரசத்தால் மோதி விஷத்தைப் பிரித்துவிட்டு ஆந்த அணுக்கதிரியக்கங்கள் ஒளியாக மாறி அது எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் அறிவாகவே அது இயக்குகிறது “இயக்க அணுக்களாக...”
இதைப் போல் தான் மனிதனின் நிலைகளில் ஆறாவது அறிவு (ஒளியின் அறிவாக) கார்த்திகேயா என்று வளர்ந்தது. இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குருநாதர் எனக்கு எப்படி இதை எல்லாம் தெரியச் செய்தாரோ இதைப் போல ஆயுள்கால மெம்பராக இருக்கப்படும் பொழுது
1.நாம் எப்படி வளர்ந்தோம்… இனி எப்படிப் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…? என்று
2.இதைத் தெரிந்து கொண்டால் நாம் எளிதில் அந்தச் சக்திகளைப் பெறலாம்.
3.இதை வெளியிலே அதிகமாகச் சொல்ல முடியாது… ஆயுள் மெம்பர்களுக்குத் தான் இந்த உண்மையைச் சொல்ல முடியும்.
இதைப் பதிவாக்கி விட்டால் உங்கள் நினைவு சப்தரிஷி மண்டலத்தின் பால் சென்று இந்த வாழ்க்கையில் அடுத்துப் பிறவியில்லா நிலை அடைவதற்கு உதவும். அதற்குத் தான் உங்களை ஆயுள் கால மெம்பராக ஆக்கியது.
என்றுமே கார்த்திகேயா என்று உங்கள் உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
1.அந்தத் துருவ நட்சத்திரம் எப்படி உருவானதோ
2.அதன் உணர்வை எடுத்து ஒளி உடலாகப் பெற முடியும்.
குருநாதர் காடு மேடல்லாம் அலையச் செய்தார். அவர் சொன்ன நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்ட பின் தான் உங்களுக்கும் இதைப் போதிப்பது.
குரு எனக்கு எப்படிக் காட்டினாரோ அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று தான் மெம்பர்களுக்கு “உயிருடன் ஒன்றி என்றும் வாழ வேண்டும் என்று பிரியப்பட்டவர்களுக்கு…” இதை நான் சொல்வது.
பிரியம் இல்லாதவர்களுக்குச் சொன்னால் இந்த உடலுக்கு என்ன வேண்டும்…? அது வேண்டும்… இது வேண்டும்… என்று தான் போவார்கள். யாம் சொல்வதை மறந்து விடுவார்கள்.
ஆகவே ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும் இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும்.
இந்தச் சூரியன் அழியலாம்… பிரபஞ்சம் அழியலாம். ஆனால் துருவ நட்சத்திரம் அழியாது அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழியாது.
அதனுடன் நாம் ஐக்கியமாக வேண்டும்…!