ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2022

தியானத்தில் “ஞானம்” பெறுவது முக்கியம்

தியானம் என்பது தனித்து அமர்ந்து சக்தி பெறக்கூடியது அல்ல. காரணம்... எவ்வளவு சக்தி பெற்றாலும் நாம் அந்த “ஞான சக்தி” என்ற நிலையை அடிக்கடி நினைவுபடுத்தி அதைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

1.ஞானத்தின் உணர்வுகள் பெருகினால் தான்
2.இந்த வாழ்க்கையில் ஓரளவு சிந்தித்து செயல்படும் தன்மையும்
3.தீமையான உணர்வுகள் நமக்குள் வளராதபடியும்
4.மீண்டும் பிறவிக்கு வராதபடி தடைப்படுத்தும் சக்தியும் வரும்.

ஞானத்தின் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி வளர்த்துக் கொண்ட பின்... உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிர் நேரடியாக நம்மை அங்கே அழைத்துச் சென்று விடும்... அதைப் பார்க்கலாம்.

செத்த பிற்பாடு என்ன...? என்று சாதாரணமாக நினைப்பார்கள்...!

யார் மீதாவது நாம் அதிகப் பற்றுடன் பிரியத்துடன் இருந்தால் இந்த ஆன்மா உடலுக்குள் வந்து எப்படி ஆட்டிப் படைக்கின்றது...? இறந்த பின் எத்தனை அவஸ்தைப்படுகிறது...? இன்னொரு உடலுக்குள் சென்று தான் கஷ்டப்பட்டது போல அவர்களையும் கஷ்டப்படுத்தும் நிலையாக வரும்.

அனுபவத்தில் நாம் பார்க்கலாம்.

உடலில் பட்ட அவஸ்தைகளை அங்கேயும் உண்டாக்கி வேதனையை அங்கேயும் எடுத்து அதை முழுமையாக்கிக் கொண்ட பின் விஷம் அதிகமாகி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு நிச்சயம் பாம்பாகப் பிறக்கும்.

வேதனைகள் வந்த பின் சிந்திக்கத் தெரியாதபடி குடும்பத்திலோ தொழிலிலோ மற்றவர்களையோ வெறித் தன்மையாகப் பேசினால்... அல்லது அடித்துத் தாக்கும் உணர்வுகள் வந்தால்... அடுத்து புலியாகத்தான் பிறக்க நேரும்.

ஒரு உடலுக்குள் சென்று இத்தகைய நிலைகளை வளர்த்து வெளியே வந்தால் புலியாகத்தான் பிறக்கும்.

ஆனால்... ஒவ்வொரு நொடிகளிலும் இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் கேட்டாலும் அதை எல்லாம் நல்லதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு உண்டு.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை எடுத்து
2.வருவதை எல்லாம் மாற்றி அமைத்துக் கொண்டே வரவேண்டும்.

தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளரச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பெற வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே போல் நம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக இருக்க வேண்டும்... தெருவில் உள்ளோர் நன்றாக இருக்க வேண்டும்... ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்... உலக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

சண்டையிடுபவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் அவர்களும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உண்மையின் உணர்வுகளை உணர வேண்டும். ஒன்றுபட்டு வாழும் உணர்வு பெற வேண்டும். அவர்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

காரணம்... அவர்கள் சண்டையிட்ட உணர்வு நமக்குள் பதிவு இருக்கும். அதை மேலே சொன்னபடி எடுத்து மாற்றி அது நமக்குள் வளராதபடி பக்குவப்படுத்த வேண்டும்.

ஒரு செடியில் விளைந்த வித்தை அது அப்படியே விட்டு விட்டால் அது முளைத்து வளர ஆரம்பித்துவிடும். அது போன்று மற்றவர்கள் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே தான் நமக்குள் பதிவாகின்றது. அது வளராதபடி தடுக்க வேண்டும்.
1.அந்தக் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்கு இது எதிரான நிலை.
2.இப்படி இது வளரும் போது அந்த அணுக்கள் நல்ல அணுக்களாக நமக்குள் மாறும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி எத்தகைய தீமையையும் மாற்றி நம் உடலில் நல்ல அணுக்களாக அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

AGRICULTUREல் (விவசாயப் பண்ணைகளில்) வீரிய வித்தாக மாற்றுவது போன்றது செய்து பழக வேண்டும் ஒவ்வொரு உணர்வையும் நல்லதாக.. ஒளியாக... மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.