ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2022

நம் உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைக்க வேண்டும்

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட சரீரம் கிடைக்கப் பெற்ற இந்தக் கால கட்டத்தில் உண்மையை நாம் உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலை பெறும் வழி அறிந்திட வேண்டும்.

தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலை வழி அமைத்து... சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே சக்தி பெறச் செய்யும் மார்க்கம் அறிந்து... அந்த எண்ண வழித் தொடரில்
1.பசுக்களுக்காக வசுவா…?
2.வசுவிற்காகப் பசுக்களா..? என்ற கேள்வி எழுந்து பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான்
3.“கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.

கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக உணர்த்தினார் வியாசகர்.

1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.சரீர உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.அதற்கும் “காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6.இந்த ஜெப வழித் தொடர் வலுப் பெற்று விட்டால்
7.சரீரம் தனக்குகந்த பக்குவத்திற்கு உயரிய ஒளிக் காந்த சக்தியின் சக்தி வலுக்கூட்டும் செயல் தன்மையும்
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டிடவே
9.அதைக் காவியமாக்கிச் சொல்லாமல் சொல்வித்து
10.”உயிர் ஒளி சக்தி பெற்றுக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”

ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் ஜெபமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதனுள் வளரும் சக்தி நிலைப்படுத்திட “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”

அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெற வேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் பசுக்களாகிய உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!

தன் உயிர் சக்தியை ஒளி காந்த சக்தியாக உயர்த்துவதோடல்லாமல் முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் நிலை நின்ற அத்தனை உயிரணுக்களையுமே என்பது மறை பொருள்.

திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தச் சுவை குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு உணர்வுகளின் வழிதான் எண்ணம் என்ற நிலைப்படுத்திவிடும்.

உயர்ந்த எண்ணங்களின் வழியில்... தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரியும் உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்தப்பட வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.

உணர்வுகளின் வழிக்கெல்லாம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே. கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்பட்டதாகவும்
1.உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தியால்
1.“தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக என்பதன் கருப் பொருள் உணர்ந்து கொள்வதே நல்லது.

ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் ஒளி பெறும் தன்மைக்கு வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.