ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2022

நமக்கு லாபகரமானது எது…?

வீட்டில் கஷ்டமோ சங்கடமோ மற்றதோ வந்தாலும்… “அட போ…!” என்று இந்த உணர்வைப் பெருக்கிப் பாருங்கள்
1.இந்த உணர்வுகள் வலுக்க… வலுக்க… வலுக்க…
2.செய்வினையோ தோஷங்களோ மற்ற எதுவாக இருந்தாலும் நமக்கு அது ஒரு லாபகரமானதாக மாறிவிடும்.

பொருளையோ இந்த உடலையோ சொத்தையோ எண்ணிவிட்டால் பற்று இங்கே வந்து விடுகின்றது… புவியின் ஈர்ப்புக்கே வருகின்றது.

இந்த மாதிரி ஆகிவிட்டதே…! நான் எப்படி வாழப் போகின்றேன்…? என்று எண்ண வேண்டியது இல்லை. இந்த உடல் எப்பொழுதுமே மடியக்கூடியது தான்…! அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும்... இந்த உடலில் இருந்து தான் உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும். வாழ்க்கையில்
1.துன்பத்தைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எப்பொழுது வருகின்றதோ அப்போது தான்
2."அதிலிருந்து விடுபட வேண்டும்..." என்று உணர்வு வருகின்றது.

வீட்டில் இருக்கக்கூடிய எலிக்கு… பூனையைப் பார்க்கும் சந்தர்ப்பம் வருகிறது. சந்தித்த பின் பூனை எலியைப் பிடித்து விட்டால் பூனையின் நினைவு தான் எலிக்கு வருகின்றது.

எலியோ பூனையின் உடலுக்கு அது இரையாகின்றது. இரையாகும் போது நரக வேதனைப்படுகிறது. ஆனால் எலியினுடைய அந்தச் சந்தர்ப்பம் தீமையில் இருந்து விடுபட வேண்டும்... வேதனையில் இருந்து விடுபட வேண்டும்... என்று எண்ணுகிறது.

பூனை எலியைப் பிடித்த பின் எலியின் உயிரான்மா அதனுடைய வலுவைப் பெற்று அதனின் சந்தர்ப்பம் எலி பூனையாகப் பிறக்கக்கூடிய நிலை வருகின்றது

அதே போல இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டம்... தொல்லை... என்று வரப்படும் பொழுது
2.அதை எல்லாம் “அருளைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் என்று நினைத்து விட்டால்”
3.வேதனை என்ற நிலையே வராது.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா.

எப்படித்தான் இருக்கட்டும்…! இந்த உடலோ சொத்தோ சுகமோ நம் கூட வருகின்றதா…? இல்லை.

இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கிய அருள் உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது அதன் வழி உயிர் வெளியேறிய பின் இன்றைய செயல் நாளைய சரீரமாக மாறுகிறது.

"எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்..." என்று அவருடைய நினைவை கூட்டிக் கொண்டே வந்தால் இந்த உணர்வுகள் வலுப்பெற்று இந்த உடலுக்குப் பின் யாரை நினைவுக்குக் கொண்டு வந்தோமோ… உயிரான்மா அங்கே தான் செல்லும்.

அவர்கள் உடலில் சேர்ந்த பின் மீண்டும் அங்கேயும் இதே தொல்லைகளைத்தான் கொடுக்கும்... பழி தீர்க்கும் நிலையாக வரும். விஷத்தின் தன்மை உருவான பிற்பாடு பிறவி இல்லா நிலை அடைவதற்கு மாறாக சாகாக் கலையாக மாறி… இந்த வேதனை உணர்வு எதுவோ அதன் உணர்வின் தன்மைக்கொப்ப இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை பெற்றால்
1.எத்தகைய விஷத் தன்மையும் அதனைக் கொல்வதில்லை
2.இதுதான் வேகாநிலை என்று சொல்வது.

அந்த நிலையை நாம் அடைதல் வேண்டும்.